முதன்முறையாக பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகவுள்ள 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா...

அறிமுகமானதில் இருந்து எஸ்யூவி கார்களின் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா. மாருதியின் மற்ற கார்களை போல் இந்த மாடலும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முதன்முறையாக பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகவுள்ள 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா...

விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் முதன்முறையாக பெட்ரோல் என்ஜின் தேர்வை வழங்கியுள்ள மாருதி நிறுவனம், பிரெஸ்ஸாவின் இந்த பெட்ரோல் வேரியண்ட்டை தான் பிஎஸ்6 தரத்தில் அப்டேட் செய்து சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது.

முதன்முறையாக பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகவுள்ள 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா...

சோதனை ஓட்டத்திற்காக கார் முழுவதும் மறைக்கப்படாமல், முன்புறத்தின் பம்பர் பகுதி மட்டும் சிறிதளவு மறைக்கப்பட்டுள்ளது. இதனால் விட்டாரா பிரெஸ்ஸாவின் இந்த பிஎஸ்6 மாடலை ஃபேஸ்லிஃப்ட் வெர்சனிற்கு மாருதி நிறுவனம் மாற்றியுள்ளது தெள்ள தெளிவாக தெரிகிறது.

முதன்முறையாக பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகவுள்ள 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா...

மற்றப்படி காஸ்மெட்டிக் மாற்றங்கள் இந்த புதிய காரில் நடைபெற்றுள்ளதாக தெரியவில்லை. தற்போதைய விட்டாரா பிரெஸ்ஸா கொண்டுள்ள உட்புற மற்றும் வெளிப்புற டிசைன்களில் தான் இந்த காரும் அறிமுகமாகும் என தெரிகிறது. ஒருவேளை இந்த எஸ்யூவி காரில் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருந்தாலும் இந்த காரில் முதன்முறையாக பெட்ரோல் என்ஜினை பொருத்தியிருப்பது தான் மிக பெரிய அப்டேட்டாக பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகவுள்ள 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா...

மாருதி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸாவில் பெட்ரோல் என்ஜின் தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு காரணம், அப்போது தான் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளை கொண்ட ஹூண்டாய் வென்யூ, மஹிந்திர எக்ஸ்யூவி300 மற்றும் நெக்ஸான் போன்ற மாடல்கள் உள்ள பிரிவில் போட்டியிட முடியும். அதுமட்டுமில்லாமல் பெட்ரோல் என்ஜின் இல்லாததால் தற்சமயம் விட்டாரா பிரெஸ்ஸா கார், விலை குறைவான கார்களின் பிரிவில் தான் போட்டியிட்டு வருகிறது.

Most Read:காசை கரி ஆக்காதீங்க... பல லட்சம் கொட்டி கொடுத்து கார் வாங்குவதை விட பைக்தான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

முதன்முறையாக பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகவுள்ள 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா...

விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் சியாஸ் போன்ற பெரிய அளவிலான கார்களுக்கு மட்டும் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான டீசல் என்ஜின் தேர்வை வழங்க மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. சிறிய அளவிலான கார்களின் டீசல் வேரியண்ட்கள் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படாது என ஏற்கனவே இந்நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகவுள்ள 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா...

விட்டாரா பிரெஸ்ஸாவில் புதியதாக பொருத்தப்பட்டுள்ள பெட்ரோல் என்ஜின் 1.5 லிட்டரில் 105 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஒருங்கிணைந்த ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் உடன் இந்த என்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read:19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

முதன்முறையாக பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகவுள்ள 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா...

தற்போதைய விட்டாரா பிரெஸ்ஸாவில் உள்ள ஃபியாட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவில்லை. அதற்கு பதிலாக மாருதி நிறுவனம் தனது சொந்த 1.5 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் என்ஜினை பிஎஸ்6 தரத்தில் அப்டேட் செய்து புதிய விட்டாரா பிரெஸ்ஸா காரில் பொருத்தியுள்ளது.

Most Read:2020 ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஏற்கனவே எர்டிகா மற்றும் சியாஸ் கார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2020 விட்டாரா பிரெஸ்ஸாவின் டீசல் வேரியண்ட் மிக அதிகமான விலையில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் வழங்கப்படவுள்ளன.

முதன்முறையாக பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகவுள்ள 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா...

2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பெட்ரோல் வேரியண்ட் கூடுதலாக அறிமுகமாவதால் விட்டரா பிரெஸ்ஸாவின் இந்த புதிய பிஎஸ்6 காரின் ஆரம்ப விலை ரூ.6.5 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles

English summary
2020 Maruti Brezza petrol manual BS6 spied – Price exp under Rs 7 L
Story first published: Wednesday, November 27, 2019, 18:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X