2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

ஸ்கோடா இந்தியா நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் 2020 சூப்பர் ஃபேஸ்லிஃப்ட் செடான் மற்றும் புதிய கோடியாக் எஸ்யூவியை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் 2020 மே மாதம் முதல் விற்பனைவர உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

மேலும் கோடியாக் எஸ்யூவியின் அறிமுகம் அடுத்த ஆண்டு இறுதியில் தான் இருக்கும் என ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ஜாக் ஹோலிஸ், வாடிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்வி பதிலளித்துள்ளார்.

2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

தற்சமயம் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல், தொழிற்நுட்பம் மற்றும் டிசைன் என இரண்டிலும் ஏகப்பட்ட அப்டேட்களுடன் அறிமுகமாகவுள்ளது. இந்த புதிய செடான் காரில் மெலிதான வடிவில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்ஸ், ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல் விளங்குகள் மற்றும் டைனாமிக் டர்ன் இண்டிகேட்டர்ஸ் போன்றவை ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

இவை மட்டுமில்லாமல், முந்தைய மாடலை விட பெரிய அளவிலான க்ரில் அமைப்பு, அப்டேட்டான முன்புற பம்பர்கள் மற்றும் ஃபாக் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த 2020 சூப்பர்ப் செடான் மாடலானது கூடுதல் அகலமாகவும் ஸ்போர்டியாகவும் தென்படுகிறது.

2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

மற்றப்படி பக்கவாட்டுகளில் அதே எளிமையான டிசைனை கொண்ட பாகங்கள் தான் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் புதிய டிசைனில் எல்இடி டெயில்கேட்ஸ், கார் இயங்கும் பாதைக்கு செங்குத்தாக தடிமனான க்ரோம் ஸ்ட்ரிப் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

Most Read: இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்

2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

ஸ்கோடா என்கிற எழுத்துடன் இந்நிறுவனத்தின் புதிய லோகோ வழக்கம்போல் காரின் முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய லோகோ, ஸ்கோடா நிறுவனத்தின் புதிய டிசைன் தத்துவத்தில் தயாரிக்கப்பட்ட முதல் மாடலான ஸ்கோடா ஸ்காலாவில் இருந்து புதிய கார்களில் பொருத்தப்பட்டு வருகிறது.

2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

2020 சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் செடான் காரின் உட்புறத்தில் டேஸ்போர்டு மற்றும் கேபின் என அனைத்தும் தற்போதைய மாடலில் இருந்து அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமில்லாமல், விபத்தில் இருந்து பாதுகாக்கும் க்ரூஸ் கண்ட்ரோல், பாதசாரிகளை மோதாமல் தடுக்கும் தொழிற்நுட்பம், எமர்ஜென்சி அசிஸ்ட், ப்ரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களையும் இந்த சூப்பர்ப் செடான் கார் பெற்றுள்ளது.

Most Read:புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு.. இதற்காகதான் ரிட்டன் கொடுத்தாங்களா..?

2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

பிஎஸ்6 தரத்தில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள இந்த புதிய காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெட்ரோல் என்ஜினானது 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் என இரு வேரியண்ட்களில் அறிமுகமாகவுள்ளது. இவற்றுடன் மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்தையும் ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

டீசல் என்ஜினை பொருத்தவரை, 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் என இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் என இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Most Read:மாஸ்... ரஷ்ய ராக்கெட் மூலம் விண்ணில் பாயும் இந்திய இளைஞர்களின் செயற்கைகோள்... எதற்காக தெரியுமா?

2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து செடான் பிரிவில் அறிமுகமான சூப்பர்ப் மாடல் இந்த பிரிவில் சிறந்த முறையில் விற்பனையாகும் காராக உள்ளது. தொழிற்நுட்பம், டிசைன், என்ஜினின் தரம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் சூப்பர்ப் செடான் மாடல் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.25.99 லட்சத்தில் இருந்து ரூ.33.48 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இதன் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அறிமுகமாகவுள்ளதால் இந்த பிஎஸ்4 மாடலின் தயாரிப்பு விரைவில் நிறுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Twitter

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
New Skoda Kodiaq & Superb BS-VI Launch Dates
Story first published: Monday, December 16, 2019, 16:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X