2020 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மீண்டும் சோதனை ஓட்டம்... விலை பற்றிய தகவல்கள் கசிவு

2020ல் அறிமுகமாகவுள்ள டாடா நிறுவனத்தின் புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஏற்கனவே பல சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் மூலம் வெளிவந்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மீண்டும் சோதனை ஓட்டம்... விலை பற்றிய தகவல்கள் கசிவு

முழுவதும் மறைக்கப்பட்டுள்ள இந்த காரின் முன்புறம் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்காக மாற்றமடைந்துள்ளது என்பது இந்த மறைப்புகளையும் தாண்டி நமக்கு தெரிய வருகிறது. கூர்மையான வடிவில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி ஹெட்லைட், புதிய டிசைனில் பம்பர், புதிய ஃபாக் லைட் மற்றும் ஏர் டேம்கள் போன்ற புதிய டிசைனிற்கு மாற்றப்பட்ட பாகங்களை இந்த புதிய நெக்ஸான் காரின் முன்புறம் கொண்டுள்ளது.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மீண்டும் சோதனை ஓட்டம்... விலை பற்றிய தகவல்கள் கசிவு

அதேபோல் இந்த காரின் பின்புறமும் மிகவும் நுட்பமான சில டிசைன் மாற்றங்களை ஏற்றுள்ளது. இந்த காரில் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்காக இம்பேக்ட் 2.0 என்கிற டிசைன் தத்துவத்தின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள டிசைன் மாற்றங்கள் குறித்த தகவல்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன. நெக்ஸான் காரில் ஏற்படுத்தப்பட்டுள்ள மிக பெரிய டிசைன் மாற்றமாக, இந்த மாடலின் டாப் வேரியண்ட் 16 இன்ச் அலாய் சக்கரங்களை பெற்றுள்ளது.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மீண்டும் சோதனை ஓட்டம்... விலை பற்றிய தகவல்கள் கசிவு

1.2 லிட்டர் டர்போ-சார்ஜ்டு பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என தற்போதைய நெக்ஸான் மாடலில் உள்ள என்ஜின் தேர்வுகள் தான் இந்த காருக்கும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த இரு என்ஜின் தேர்வுகளும் நெக்ஸானின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மீண்டும் சோதனை ஓட்டம்... விலை பற்றிய தகவல்கள் கசிவு

இதில் 1.2 லிட்டர் டர்போ-சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 108 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை அதிகப்பட்ச ஆற்றலாக வெளிப்படுத்தவுள்ளது. 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பிஎச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மீண்டும் சோதனை ஓட்டம்... விலை பற்றிய தகவல்கள் கசிவு

தற்சமயம் டாடா நெக்ஸான் மாடல் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.6.58 லட்சத்தில் இருந்து ரூ.11.10 லட்சம் வரை விற்கப்படுகிறது. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கான விலை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் நமக்கு தெரிந்தவரை ரூ.75,000 வரையில் கூடுதல் விலையுடன் நெக்ஸான் மாடலின் இந்த ஃபேஸ்லிப்ட் வெர்சன் கார் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மீண்டும் சோதனை ஓட்டம்... விலை பற்றிய தகவல்கள் கசிவு

ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்களுடன் இந்த கார் அறிமுகமான பின்பு விற்பனையில் போட்டியிடவுள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் தவிர டாடா நிறுவனத்தில் இருந்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரும் அறிமுகமாகவுள்ளது. ஆல்ஃபா கட்டமைப்பில் உருவாகியுள்ள இந்த அல்ட்ராஸ் மாடலின் முதல் கார், தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து விற்பனைக்கு தயாராகியுள்ளது. அல்ட்ராஸ் கார் குறித்த முழுமையான தகவல்களை காண கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தலாம்.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மீண்டும் சோதனை ஓட்டம்... விலை பற்றிய தகவல்கள் கசிவு

நெக்ஸான் மாடலின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இவ்வாறு அடிக்கடி சோதனை ஓட்டங்களில் ஈடுப்பட்டு வருவதால் இதன் அறிமுகம் மிக தொலைவில் இல்லை என்பது தெரிய வருகிறது. இதனால் கூடிய விரைவில் எந்தவொரு மறைப்பும் இன்றி நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரை பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 29, 2019, 13:42 [IST]
English summary
Spy Pics: Tata Nexon Facelift Versions Spotted Testing Ahead Of India Launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+