பிரியாவிடைபெறும் பிரபல கார்கள்.. எது எது என தெரிந்தால் கண்ணீரே வரும்..!!!

இந்திய மக்களிடம் நீங்காத இடம்பிடித்த டாட்டா நானோ, மாருதி ஆம்னி, மஹிந்திரா ஸைலோ போன்ற பிரபல கார்கள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. அப்படி இனி விற்பனைக்கு வராமல் மக்களிடம் இருந்து பிரியாவிடைபெற்ற 5 பிரபல கார்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

 பிரியாவிடைபெறும் பிரபல கார்கள்.. எது எது என தெரிந்தால் கண்ணீரே வரும்..!!!

மாருதி சுசூகி ஜிப்ஸி:

கடந்த 1985ம் ஆண்டு மாருதி சுசூகி நிறுவனம் ஜிப்ஸி மாடலினை அறிமுகம் செய்தது. விற்பனைக்கு வந்த சில நாட்களில் மக்களிடையே அதிக வரவேற்பைபெற்றது வாகன ஓட்டிகள் இடையே நீக்க முடியாத அடையாளமாக உருவெடுத்தது. ஜிப்ஸி வெளியானது முதல் பெரிய மாறுதல்கள் அதில் செய்யாமல் விற்பனை செய்தாலும் ஜிப்ஸி விற்பனையில் களைகட்டியது.

 பிரியாவிடைபெறும் பிரபல கார்கள்.. எது எது என தெரிந்தால் கண்ணீரே வரும்..!!!

சுசூகி ஜிப்ஸியின் டிசைன், அதிவேக எஞ்சின் போன்றவை மக்களை அதிகம் ஈர்த்தது. மலை பகுதிகளுக்கு ஜிப்ஸி சிறந்த வாகனமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது ஜிப்ஸியின் தயாரிப்பினை வரும் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஜிப்ஸியின் 34 ஆண்டு சகாப்தம் முடிவுக்கு வந்தது ஜிப்ஸி பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பிரியாவிடைபெறும் பிரபல கார்கள்.. எது எது என தெரிந்தால் கண்ணீரே வரும்..!!!

மாருதி சுசூகி ஆம்னி:

மாருதி நிறுவனத்தின் தனிக்காட்டு ராஜா என்றால் அது மாருதி ஆம்னி என்றே கூறலாம். மாருதி நிறுவனம் பல கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தாலும் 35 வருடங்களாக விற்பனையில் தனித்து வெற்றிநடை போட்டது மாருதி ஆம்னி. இதன் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ரக மாடல்கள் குடும்பத்துடன் செல்ல வசதியாக இருந்ததால் மக்களை ஆம்னி அதிகமாக கவர்ந்தது. மாருதி ஆம்னி மாதத்திற்கு 5000 யூனிட்டுகள் வரை விற்பனையானது.

 பிரியாவிடைபெறும் பிரபல கார்கள்.. எது எது என தெரிந்தால் கண்ணீரே வரும்..!!!

இந்நிலையில் மாருதி ஆம்னியின் டிசைனை மையமாக கொண்ட மாருதி ஈக்கோ காரின் விற்பனையை அதிகரிக்கவும், மத்திய வாகன பாதுகாப்பு திட்டம் காரணமாக ஆம்னியில் மாற்றம் செய்ய மாருதி நிறுவனம் முன்வராத காரணத்தால் மாருதி ஆம்னி தயாரிப்பு நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 5 வருடங்களாக விற்பனையில் தனித்து வெற்றிநடை போட்டஆம்னி இனி விற்பனைக்கு வராது என்ற செய்தி மாருதி வாடிக்கையாளர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 பிரியாவிடைபெறும் பிரபல கார்கள்.. எது எது என தெரிந்தால் கண்ணீரே வரும்..!!!

டாட்டா சுமோ:

எம்யூவி ரக கார்களில் முதன்முதலாக விற்பனையில் சிறந்து விளங்கியது டாடா நிறுவனத்தின் டாடா சுமோ. 9 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சுமோ ஊரக பகுதிகளில் வசூலை அள்ளியது. குடுமபத்துடன் அடிக்கடி வெளியே செல்லும் மக்களுக்கு டாட்டா சுமோ சிறப்பான வாகனமாக அமைந்தது. இதன் சிறந்த கிரவுண்ட் க்ளியரன்ஸ் மலை பாதைகள் மற்றும் காட்டு வழி பாதைகளுக்கு சிறந்து விளங்கிய

 பிரியாவிடைபெறும் பிரபல கார்கள்.. எது எது என தெரிந்தால் கண்ணீரே வரும்..!!!

இதன் சிஆர்4 3.0 எஞ்சின் சிறப்பான பயணத்தை தந்தது. இந்த எஞ்சின் 84 68 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் கொண்டது. ஆனால் தற்போது டாட்டா நிறுவனத்தில் எஸ்யூவி காரர்களின் வருகை அதிகரித்ததால் டாட்டா சுமோ தயாரிப்பை டாட்டா நிறுவனம் நிறுத்தியுள்ளது.

 பிரியாவிடைபெறும் பிரபல கார்கள்.. எது எது என தெரிந்தால் கண்ணீரே வரும்..!!!

டாடா நானோ:

டாடா நிறுவனத்தில் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கார் டாடா நானோ. ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தர வேண்டும் என்ற டாட்டா நிறுவன இயக்குனர் ரத்தன் டாடாவின் முயற்சியில் உருவான கார் நானோ. குறைவான விலை கார் என்பதால் டாட்டா நிறுவனம் பல தொழில்நுட்ப சவால்கள் மற்றும் பொறியியல் யுக்திகளை கையாண்டு நானோ காரினை தயாரித்தது.

 பிரியாவிடைபெறும் பிரபல கார்கள்.. எது எது என தெரிந்தால் கண்ணீரே வரும்..!!!

கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 275 நானோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டது ஆனால் தற்போதுவரை ஒரு கார் மட்டும் விற்பனையாகியுள்ளது. இதனால் டாட்டா நானோ காரின் உற்பத்தியை கைவிடுவதாக டாட்டா நிறுவனம் அதிகரித்துள்ளது. இருப்பினும் மின்சார டாடா நானோ காரினை டாடா நிறுவனம் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 பிரியாவிடைபெறும் பிரபல கார்கள்.. எது எது என தெரிந்தால் கண்ணீரே வரும்..!!!

மஹிந்திரா ஸைலோ;

மஹிந்திரா ஸைலோ எம்யூவி ரக கார்களில் சிறப்பான விற்பனையை மஹிந்திரா நிறுவனத்திற்கு அளித்தது. மஹிந்திரா பொலேரோ விற்பனை அதிகரித்ததால் அதன்பின் களமிறக்கப்பட்ட மஹிந்திரா ஸைலோ கார் பொலேரோ அளவிற்கு விற்பனையாகவில்லை. அதிக இடவசதி மற்றும் அழகான உட்புற தோற்றம் மட்டும் ஸைலோ காருக்கு விற்பனையில் ஓரளவு நல்ல வரவேற்பை அளித்தது.

 பிரியாவிடைபெறும் பிரபல கார்கள்.. எது எது என தெரிந்தால் கண்ணீரே வரும்..!!!

இந்நிலையில் மஹிந்திரா எஸ்யூவி 300 டிசைன் மஹிந்திரா ஸைலோ டிசைனை ஒட்டி இருப்பதாலும், மஹிந்திரா ஸைலோ விற்பனையில் மந்தமாக இருப்பதால் மஹிந்திரா ஸைலோ தயாரிப்பு நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து மஹிந்திரா நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வ தகவலினை வெளியிடவில்லை.

 பிரியாவிடைபெறும் பிரபல கார்கள்.. எது எது என தெரிந்தால் கண்ணீரே வரும்..!!!

ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்திய வாகன பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இன்னும் பல்வேறு கார்கள் தயாரிப்பு நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக பல கார்கள் வந்தாலும் பழைய மாடல் கார்களுக்கு மக்களிடையே தனி வரவேற்பு கிடைத்து வந்தது.பழைய கார்கள் தயாரிப்பில் நின்றாலும் மக்கள் மனதில் இருந்து நீங்காது என்பது தவிர்க்க முடியாத உண்மை.

Most Read Articles
English summary
5 Cars saying Goodbye from All: Read More in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X