இந்தியாவில் அமோக வரவேற்பு... வெறும் நான்கே மாதத்தில் மாருதி வேகன் ஆர் எட்டிய புதிய மைல்கல் இதுதான்..

இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதன் மூலம், 3வது தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் வெறும் நான்கே மாதத்தில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அமோக வரவேற்பு... வெறும் நான்கே மாதத்தில் மாருதி வேகன் ஆர் எட்டிய புதிய மைல்கல் இதுதான்

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மூன்றாவது தலைமுறை வேகன் ஆர் காரை மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டின் முதல் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. கடந்த ஜனவரி மாத கடைசியில் 3வது தலைமுறை வேகன் ஆர் களமிறக்கப்பட்டது.

இந்தியாவில் அமோக வரவேற்பு... வெறும் நான்கே மாதத்தில் மாருதி வேகன் ஆர் எட்டிய புதிய மைல்கல் இதுதான்

உள்நாட்டு லைன் அப்பிற்கு புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் 3வது தலைமுறை வேகன் ஆர் காரை மாருதி சுஸுகி நிறுவனம் வடிவமைத்தது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த யுக்தி உண்மையில் சிறப்பாக வேலை செய்துள்ளது.

இந்தியாவில் அமோக வரவேற்பு... வெறும் நான்கே மாதத்தில் மாருதி வேகன் ஆர் எட்டிய புதிய மைல்கல் இதுதான்

புத்தம் புதிய வேகன் ஆர் காருக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்துள்ளது. 5வது தலைமுறை ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் லேட்டஸ்ட் வேகன் ஆர் காரை மாருதி சுஸுகி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் அமோக வரவேற்பு... வெறும் நான்கே மாதத்தில் மாருதி வேகன் ஆர் எட்டிய புதிய மைல்கல் இதுதான்

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விசாலமான கேபின் கிடைத்துள்ளது. அத்துடன் டைனமிக் மற்றும் கையாளும் திறன்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஒரு புதிய தலைமுறை மாடல் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே அதனை உருவாக்கியுள்ளது மாருதி சுஸுகி.

இந்தியாவில் அமோக வரவேற்பு... வெறும் நான்கே மாதத்தில் மாருதி வேகன் ஆர் எட்டிய புதிய மைல்கல் இதுதான்

வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் செய்யப்பட்டுள்ள விரிவான மாற்றங்கள், முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகன் ஆர் காரை பீரிமியமாக மாற்றியுள்ளன. புதிய வேகன் ஆர் காரில், 1.2 லிட்டர் கே சீரிஸ் நான்கு-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அமோக வரவேற்பு... வெறும் நான்கே மாதத்தில் மாருதி வேகன் ஆர் எட்டிய புதிய மைல்கல் இதுதான்

இந்த இன்ஜின் ஏற்கனவே ஸ்விப்ட், டிசையர், பலேனோ மற்றும் இக்னிஸ் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் முன்னணி மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 82 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை இந்த இன்ஜின் உருவாக்கும்.

இந்தியாவில் அமோக வரவேற்பு... வெறும் நான்கே மாதத்தில் மாருதி வேகன் ஆர் எட்டிய புதிய மைல்கல் இதுதான்

இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர வழக்கமான 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் கிடைக்கிறது.

இந்தியாவில் அமோக வரவேற்பு... வெறும் நான்கே மாதத்தில் மாருதி வேகன் ஆர் எட்டிய புதிய மைல்கல் இதுதான்

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 15,661 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்திருந்தது. இது அதன்பின் வந்த மார்ச் மாதத்தில் 16,152ஆக அதிகரித்தது. அதே சமயம் கடந்த ஏப்ரல் மாதம் 11,306 வேகன் ஆர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்தது.

இந்தியாவில் அமோக வரவேற்பு... வெறும் நான்கே மாதத்தில் மாருதி வேகன் ஆர் எட்டிய புதிய மைல்கல் இதுதான்

இந்த சூழலில் கடந்த மே மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 14,561 புதிய வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி வேகன் ஆர் 5வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

இந்தியாவில் அமோக வரவேற்பு... வெறும் நான்கே மாதத்தில் மாருதி வேகன் ஆர் எட்டிய புதிய மைல்கல் இதுதான்

அத்துடன் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்ற புதிய மைல்கல்லையும் மூன்றாவது தலைமுறை வேகன் ஆர் எட்டியுள்ளது. அத்துடன் நான்கு முழு மாதங்களில் இந்த மைல்கல்லை மாருதி சுஸுகி வேகன் ஆர் எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
50,000 Units Sold: 3rd Gen Maruti Suzuki Wagon R Achieves New Milestone In Just Four Months. Read in Tamil
Story first published: Saturday, June 8, 2019, 21:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X