விற்பனையில் தோற்ற அழகான 6 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

உலக சந்தையில் எந்தவொரு நிறுவனத்தின் பொருளும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இருந்தால் விற்பனை செய்வது மிக எளிது. ஆனால் அப்பொருள் வாடிக்கையாளர்களின் கண்களை கவரவில்லை எனில் அது எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் விற்பனையில் தோற்றுவிடும்.

விற்பனையில் தோற்ற அழகான 4 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

இந்த விதி ஆட்டோமொபைல் பிரிவுக்கும் சேர்த்து தான். அப்படி வாடிக்கையாளர்களை கவராமல் ஏன், பெரும்பாலானோருக்கு இப்படியொரு மாடல் கார் சந்தைக்கு வந்தது என்பது கூட தெரியாமல் விற்பனையில் தோற்று போன நான்கு அழகிய கார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

விற்பனையில் தோற்ற அழகான 4 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

ஃபோர்டு ஃபீஸ்டா

ஃபோர்டு ஃபீஸ்டா சி-பிரிவு செடானின் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் பார்பதற்கு ஆஸ்டான் மார்டின் காரை போலவே இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் செடான் பிரிவில் இருந்த இந்த காரை எளிதில் மறந்துவிட்டார்கள். வெளிப்புறத்தில் கவர்ச்சியான தோற்றம் இல்லாமல் இருந்ததே இந்த காரின் அமைப்பில் இருந்த ஒரு குறை. இந்த ஃபோர்டு ஃபீஸ்டா காரின் முன் பகுதியானது மிகவும் தாழ்ந்தும் மிருதுவாகவும் இருந்ததால் அடிக்கடி அடிப்பகுதியில் கீறல்கள் விழுந்தன.

விற்பனையில் தோற்ற அழகான 4 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

இதன் 1.5 லிட்டர் டிடிசிஐ டர்போ டீசல் என்ஜின் வெறும் 89 பிஎச்பி ஆற்றலையும் 205 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தியது. இதனால் வாடிக்கையாளர்களை தாண்டி முதலில் டீலர்ஷிப்பர்களே வாங்க யோசித்தனர்.

விற்பனையில் தோற்ற அழகான 4 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

ஃபியட் புண்டோ இவோ

அழகிய கலரில் இந்திய சந்தையில் அறிமுகமான இந்த கார் இதன் முந்தைய மாடலான ஜியர்கெட்டோ கியுகியோவின் தோற்றத்தை கொண்டிருந்தது. ஆனால் இந்த கார் வாடிக்கையாளர்களை கவராமல் போனதற்கு மிக குறைந்த காரணங்களே கூறப்படுகின்றன. பளப்பளப்பான பிரகாசமான கலரில் இருந்த போதிலும் அறிமுகமான புதியதில் குறைவான வேகத்திலேயே விற்பனையானது, இக்கார்.

விற்பனையில் தோற்ற அழகான 4 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

புண்டோ இவோ வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்த போதிலும் வாடிக்கையாளர்கள் ஃபியாட் நிறுவனத்திடம் இருந்து தரமான கார்களையே அப்போது எதிர்ப்பார்த்தனர். இன்னமும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

விற்பனையில் தோற்ற அழகான 4 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

பட்ஜெட் வகை கார்களுள் ஒன்றாக வெளியான இந்த ஃபியாட் புண்டோ இவோவின் 90 எச்பி டீசல் வேரியண்ட் அகலமான சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற மாடலாக இருந்தது. சொல்லபோனால் புண்டோ இவோ கார் அறிமுகமான நேரத்தில் அதன் சிறப்பம்சங்களால் நல்ல தரமான காருக்கான உணர்வையே கொடுத்தது. ஆனால் அதன் பின் வந்த இதன் அபார்த் வேரியண்ட் மக்களிடையே சரியாக க்ளிக் ஆகவில்லை.

விற்பனையில் தோற்ற அழகான 4 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

ஃபியாட் லீனியா

லீனியா ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முன் அறிமுகமான லீனியா, ஒரே உலோகத்தால் மொத்த பாகமும் செய்யப்பட்டது போல் ஒரே கலரில் வெளியானது. ஆனால் இதன் போடோக்ஸ் வேலைகள் இக்காரினை மக்களிடையே பெரியளவில் பிரபலமாக்கவில்லை.

விற்பனையில் தோற்ற அழகான 4 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

இக்காரின் டி-ஜெட் பெட்ரோல் என்ஜின் இதன் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது. இக்காரினை ஓட்டும் உணர்வும் வித்தியாசமாக இருந்ததால், இக்கார் ஓட்டும் டிரைவர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தை கொடுத்தது. ஆனால் இக்காரின் டீசல் வேரியண்ட் இக்காரின் விற்பனையை கெடுத்துவிட்டது. ஃபியாட் நிறுவனம் மட்டும் இக்காருக்கு 1.6 லிட்டர் மல்டிஜெட் டர்போ டீசல் என்ஜினை கொடுத்திருந்தால் இக்காரினின் தற்போதைய நிலைமையே வேறு. மேலும் இக்காருக்கு இணையாக பல கார்கள் அந்நேரத்தில் மார்கெட்டில் இறக்குமதியானதும் இதன் தோல்விக்கு ஒரு காரணம்.

விற்பனையில் தோற்ற அழகான 4 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

ரெனால்ட் ஃப்ளூயன்ஸ்

ஃப்ளூயன்ஸ், ரெனோ நிறுவனம் சொன்ன தேதிக்கு முன்பே வெளியிடப்பட்ட மாடல் கார். செடான் டி-பிரிவில் பிரெஞ்ச் டிசைனில் வெளியான இந்த கார் அந்நேரத்தில் இப்பிரிவில் இருந்த மற்ற அனைத்து கார்களையும் விட வித்தியாசமான தோற்றத்தில் ஜொலித்தது. குறிப்பாக இதன் ஆரம்ப மாடல் கார் மக்களிடையே நல்ல விதமாக பிரபலமானது.

விற்பனையில் தோற்ற அழகான 4 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

இருந்தபோதிலும் இந்த காருக்கான வாடிக்கையாளர்கள் குறையவே இதன் தயாரிப்பை 2017ல் ரெனோ நிறுவனம் நிறுத்திவிட்டது. இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள மற்ற மூன்று கார்களை விட விரைவில் உரிமையாளரிடம் ஒட்டிகொள்ளக்கூடிய மற்றும் டர்போ டீசல் என்ஜினை கொண்டிருந்த இக்கார் வெளிப்புற தோற்றத்தால் விற்பனையில் தோற்றது.

விற்பனையில் தோற்ற அழகான 4 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

ஸ்கோடா ஃபேபியா

1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் என்ஜின்களில் வெளியான இந்த கார், 1.2 லிட்டர் என்ஜினில் 75 பிஎச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் திறனையும், 1.4 லிட்டர் என்ஜினில் 85 பிஎச்பி பவர் மற்றும் 132 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வந்தது. டீசல் வேரியண்ட்டிலும் அறிமுகமான இந்த கார், அந்த என்ஜினில் 68 பிஎச்பி பவரையும் 155 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தியது.

உலகளவில் நல்ல விதத்தில் வியாபாரமாகி அதேநேரம் இந்தியாவில் தோற்று போன கார்களில் ஒன்றாக இருக்கும் ஸ்கோடா ஃபேபியாவை வாடிக்கையாளர்கள் அறிமுகமான சிறிது காலம் கழித்து ப்ரீமியம் விலைக்கு ஸ்கோடா நிறுவனம் விற்கும் என நினைத்திருந்தனர். ஆனால் அவ்வாறு நடக்காமல் போகவே ஃபேபியா மாடல் தடம் தெரியாமல் விரைவில் மறைந்து போனது. இந்த தோல்வியால் எங்களுக்கு ஒவ்வொரு ஃபேபியா காருக்கும் 1.5 லட்ச ரூபாய் வீதம் நஷ்டமானது என ஸ்கோடா இந்தியா நிறுவனம் பின்னர் கூறியது.

விற்பனையில் தோற்ற அழகான 6 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

ஃபோர்டு ஃப்யூஷன்

பெட்ரோல், டீசல் என இரு வேரியண்ட்களில் வெளியான இந்த காரின் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 101 பிஎச்பி மற்றும் 146 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தியது. அதேபோல் இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 68 பிஎச்பி பவரையும் 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தியது. இந்நிறுவனத்தின் ஃபீஸ்டா மாடலால் ஒதுக்கப்பட்ட இம்மாடலின் தோற்றம் தனித்துவமாக இருந்தது.

தனித்துவமான தோற்றத்தை கொண்டிருந்தாலும் இந்த மாடலை இந்திய வாடிக்கையாளர்கள் ஏற்றுகொள்ளவில்லை. 200 மில்லி மீட்டர் க்ரவுண்ட் கிளியர்னஸ், சிறந்த தொழிற்நுட்பங்கள், கண்ணியமான பாதுகாப்பு அம்சங்கள் என பலவற்றை கொண்டிருந்தாலும் ஃபோர்டு இந்தியா நிறுவனத்திற்கு இம்மாடலால் விற்பனை வளர்ச்சியை கொடுக்க முடியவில்லை.

விற்பனையில் தோற்ற அழகான 6 கார்கள்... எந்தெந்த நிறுவனங்களுடையது தெரியுமா?

இந்த 6 கார்களை போல் மேலும் சில கார்களும் விற்பனையில் தோல்வியுற்றுள்ளன. காரின் வெளிப்புறத் தோற்றம் அழகாக இருந்தால் மட்டும் போதாது, என்ஜின் போன்ற காரை இயக்கும் பாகங்களின் தரமும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை தரமும் சிறப்பாக இருந்தால் தான் இப்போதுள்ள சந்தை போட்டியில் வெற்றி பெற முடியும் என்பதற்கு இந்த 6 கார்களுமே சாட்சி.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
6 beautiful Cars Flops In India: Why Even Good Cars Fail To Set Sale
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X