இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய இரண்டு எஸ்யூவி கார்களையும் இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

இந்திய கார் மார்க்கெட்டில் வெகு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் செக்மெண்ட்களில் ஒன்றாக எஸ்யூவி செக்மெண்ட் திகழ்கிறது. இந்தியாவின் எஸ்யூவி செக்மெண்ட்டில், ஏராளமான மாடல்கள் கிடைக்கின்றன. ஆனால் ஒரு சில மாடல்கள் மட்டுமே வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக உள்ளன.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

இதில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகியவை ஆகிய 2 எஸ்யூவி கார்களும் குறிப்பிடத்தகுந்தவை. சேல்ஸ் சார்ட்டில் ஒவ்வொரு மாதமும் இவை சீரான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 11,613 விட்டாரா பிரெஸ்ஸா கார்களையும், கடந்த மார்ச் மாதம் 14,181 விட்டாரா பிரெஸ்ஸா கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனையான விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் எண்ணிக்கை 11,785.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

மறுபக்கம் ஹூண்டாய் நிறுவனம் கடந்த 3 மாதங்களில் சராசரியாக 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேற்பட்ட கிரெட்டா கார்களை ஒரே சீராக விற்பனை செய்துள்ளது. இந்த இரு கார்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருக்க என்ன காரணம்? என்பதை இனி பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா

எரிபொருள் சிக்கனம்

இந்திய வாடிக்கையாளர்கள் எரிபொருள் சிக்கனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள். எனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அனைத்து கார்களும் எரிபொருள் சிக்கனத்தில் தலை சிறந்து விளங்குகின்றன. விட்டாரா பிரெஸ்ஸாவும் அப்படித்தான்.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

விட்டாரா பிரெஸ்ஸா காரில், 1.3 லிட்டர் டிடிஐஎஸ் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வழங்க கூடியது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

இதுதவிர 5 ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களிலும், விட்டாரா பிரெஸ்ஸா சிறப்பான மைலேஜை வழங்குகிறது. விட்டாரா பிரெஸ்ஸா ஒரு லிட்டருக்கு 24.3 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அராய் சான்று வழங்கியுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் பேஸ் வேரியண்ட் விலை 7.6 லட்ச ரூபாய் மட்டுமே. இந்த காரின் டாப் எண்ட் வெர்ஷனின் விலையோ 10.65 லட்ச ரூபாய்தான். இவை இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு மிக சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்த செக்மெண்ட்டில் அதிக மைலேஜ் வழங்கும் கார் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாதான். இதன் பெர்ஃபார்மென்சும் ஓரளவிற்கு சிறப்பாகவே உள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

அத்துடன் விசாலமான கேபின் வழங்கப்படுகிறது. இதுதவிர மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காரில், பல்வேறு வசதிகளையும் வழங்குகிறது. இவை எல்லாம் சேர்ந்து கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக விட்டாரா பிரெஸ்ஸாவை மாற்றுகின்றன.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

டீலர் அளவிலான கஸ்டமைசேஷன்

மாருதி சுஸுகி நிறுவனம் தனது லைன் அப்பில் உள்ள ஒரு சில கார்களுக்கு கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை வழங்கிறது. இதில், விட்டாரா பிரெஸ்ஸாவும் ஒன்று. இதுதவிர மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெட்வொர்க் பரந்து விரிந்து காணப்படுகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

மாருதி சுஸுகி நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பை இவை உறுதி செய்கின்றன. இனி ஹூண்டாய் கிரெட்டா குறித்து பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

ஹூண்டாய் கிரெட்டா

மலைக்க வைக்கும் வசதிகள்

ஹூண்டாய் நிறுவனம் எப்போதுமே தனது கார்களில் எக்கச்சக்கமான வசதிகளை வாரி வழங்கும். இதற்கு கிரெட்டாவும் விதி விலக்கு அல்ல. இந்த செக்மெண்ட்டில் ஏராளமான வசதிகளுடன் கிடைக்கும் கார்களில் ஒன்றாக ஹூண்டாய் கிரெட்டா திகழ்கிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

இந்த செக்மெண்ட்டில் வயர்லெஸ் போன் சார்ஜரை வழங்கும் ஒரே கார் ஹூண்டாய் கிரெட்டாதான். மேலும் எலெக்ட்ரிக் சன் ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் ஹூண்டாய் கிரெட்டா காரில் கொடுக்கப்படுகின்றன.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

ஹூண்டாய் கிரெட்டா காரின் டிரைவர் இருக்கைக்கு எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஹூண்டாய் கிரெட்டா ஆப் (App) ஒன்றையும் பெற்றுள்ளது. இதன் மூலமாக காரின் சில அம்சங்களை கட்டுப்படுத்த முடியும்.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள்

ஹூண்டாய் கிரெட்டா காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 2 இன்ஜின்கள், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பெற்றுள்ளன. இதன் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 224 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

இந்த இன்ஜின் ஆப்ஷன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை மட்டுமே பெற்றுள்ளது. இதுதவிர அதிக சக்தி வாய்ந்த 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் ஹூண்டாய் கிரெட்டா காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவர், 265 என்எம் டார்க் திறனை வழங்கும்.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

இந்த இன்ஜின் ஆப்ஷன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்களை பெற்றுள்ளது. அதே சமயம் ஹூண்டாய் கிரெட்டா காரின் பெட்ரோல் வேரியண்ட்களில், 1.6 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 122 பிஎச்பி பவர் மற்றும் 154 என்எம் டார்க் திறனை வழங்க கூடியது. இந்த இன்ஜினிலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

லக்ஸரி கேபின்

ஹூண்டாய் கிரெட்டா காரில், லக்ஸரியான கேபின் வழங்கப்பட்டுள்ளது. இதில், பயன்படுத்தப்பட்டுள்ள மெட்டீரியல்களின் தரம் சிறப்பாக உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா காரில் லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய வாடிக்கையாளர்கள் இந்த 2 கார்களையும் அதிகம் வாங்குவது ஏன்? உண்மையான காரணங்கள் இவைதான்...

அத்துடன் இதன் ஸ்டியரிங் வீல் மற்றும் கியர் லிவர் நாப் ஆகியவற்றில் லெதர் சுற்றப்பட்டுள்ளது. இவை எல்லாம் சேர்ந்து ஹூண்டாய் கிரெட்டா காரின் இன்டீரியரை லக்ஸரியாக காட்டுகின்றன. இது காரின் உரிமையாளர்களுக்கு பெருமிதம் அளிக்கும் ஒரு விஷயம் ஆகும்.

Most Read Articles
English summary
6 Reasons Behind Maruti Suzuki Vitara Brezza And Hyundai Creta's Success. Read in Tamil
Story first published: Sunday, May 12, 2019, 12:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X