ரூ.5 லட்சத்தில் வரும் ரெனோவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

பட்ஜெட் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய 7 சீட்டர் மாடல் ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது.

ரூ.5 லட்சத்தில் வரும் ரெனோவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

ரெனோ க்விட் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில், கூடுதல் பரிமாணத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது ரெனோ ட்ரைபர். அதாவது, 4 மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடல் மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் 7 சீட்டர் மாடலாக இருக்கும்.

ரூ.5 லட்சத்தில் வரும் ரெனோவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட டட்சன் கோ ப்ளஸ் 7 சீட்டர் கார் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதனை உணர்ந்து கொண்டு, டட்சன் கோ ப்ளஸ் காரில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து ட்ரைபர் எம்பிவி காரை ரெனோ கார் நிறுவனம் களமிறக்க உள்ளது.

ரூ.5 லட்சத்தில் வரும் ரெனோவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய ரெனோ ட்ரைபர் காரிலும் பயன்படுத்தப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்சின் கூடுதலாக 7 எச்பி பவரை அ்ளிக்கும் விதத்தில் இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ரூ.5 லட்சத்தில் வரும் ரெனோவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் வசதி, சீட் பெல்ட் அணிவதை நினைவூட்டும் வசதிகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கொடுக்கப்பட்டு இருக்கும். டாப் வேரியண்ட்டில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் தொழில்நுட்பமும் கொடுக்கப்படும்.

ரூ.5 லட்சத்தில் வரும் ரெனோவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

டட்சன் கோ ப்ளஸ் கார் போலவே, பெரிய ஹேட்ச்பேக் காராகவே ரெனோ ட்ரைபர் இருக்கும். அதாவது, மூன்றாவது வரிசை இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும்.

ரூ.5 லட்சத்தில் வரும் ரெனோவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

மூன்றாவது இருக்கையை மடக்கும் வசதி அளிக்கப்பட்டால், அதிக பூட்ரூம் இடவசதியை ஏற்படுத்திக் கொள்வதற்கு இது உதவும். தேவைப்படும் நேரத்தில் 7 பேர் கொண்ட குடும்பத்தினர் பயணிக்கும் வசதியை வழங்கும்.

ரூ.5 லட்சத்தில் வரும் ரெனோவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

இந்தியாவில்தான் ரெனோ ட்ரைபர் கார் முதலில் அறிமுகமாக இருப்பதுடன், சென்னையில் உள்ள ரெனோ - நிஸான் கார் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு செல்லும் என்று தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட்
English summary
8 Things you need to know about the Renault Triber.
Story first published: Saturday, April 6, 2019, 12:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X