ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் இடம்பெறும் 8 அசத்தலான விஷயங்கள்!

இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி ரக காரில் இடம்பெற்றிருக்கும் 5 அசத்தலான அம்சங்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் இடம்பெறும் 8 அசத்தலான விஷயங்கள்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெனியூ என்ற பெயரில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. அடுத்த மாதம் 17ந் தேதி இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 'பேபி' க்ரெட்டா எஸ்யூவி என்று கார் பிரியர்களால் வர்ணிக்கப்படும் இந்த புதிய எஸ்யூவியில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதனை பார்க்கலாம்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் இடம்பெறும் 8 அசத்தலான விஷயங்கள்!

காம்பேக்ட் எஸ்யூவி

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்ட காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது. இந்த எஸ்யூவி மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் இடம்பெறும் 8 அசத்தலான விஷயங்கள்!

வயர்லெஸ் சார்ஜர்

இந்த ரக எஸ்யூவி மாடல்களில் முதல்முறையாக வயர்லெஸ் சார்ஜர் வசதியுடன் வர இருக்கிறது. தவிரவும், வென்டிலேட்டட் இருக்கைகளுடன் வர இருக்கிறது. மிக சிறிய மின்விசிறிகள் இருக்கைக்குள் பொருத்தப்பட்டு, இருக்கையின் மேற்புறத்தை குளிர்ச்சிப்படுத்தும். இதனால், சொகுசான, உன்னதமான பயண அனுபவத்தை பெற முடியும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் இடம்பெறும் 8 அசத்தலான விஷயங்கள்!

இன்டர்நெட் வசதி

இதன் ரகத்தில் முதல்முறையாக சொந்த இன்டர்நெட் வசதியுடன் இந்த கார் வர இருக்கிறது. அதாவது, எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி போலவே, இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இன்டர்நெட் வசதி இணைப்பை பெற்றிருக்கும். மேலும், பயன்படுத்துவதற்கு தயார் நிலையில், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட சில செயலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் இடம்பெறும் 8 அசத்தலான விஷயங்கள்!

க்ரூஸ் கன்ட்ரோல்

இந்த எஸ்யூவி ரக காரில் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. மேலும், நெடுஞ்சாலை பயணங்களை இலகுவாக்கும் வகையில், க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் கொடுக்கப்பட இருக்கிறது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் இடம்பெறும் 8 அசத்தலான விஷயங்கள்!

புதிய பெட்ரோல் எஞ்சின்

முதல்முறையாக இந்த எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டு இருக்கும். தவிரவும், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளிலும் வரும் என்று தெரிகிறது.

டிசைன்

ஹூண்டாய் எலைட் ஐ20, க்ரெட்டா மற்றும் டூஸான் கார்களின் டிசைன் அம்சங்களை கலந்து கட்டி புதிய எஸ்யூவி மாடலாக வடிவமைத்துள்ளனர். மேலும், பேபி க்ரெட்டா என்றும் அழைக்கப்படுகிறது. எனவே, பிற ஹூண்டாய் கார்கள் போலவே, டிசைனில் மிக அசத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் இடம்பெறும் 8 அசத்தலான விஷயங்கள்!

பாதுகாப்பு அம்சங்கள்

விலை குறைவான வேரியண்ட் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும். விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் பார்க்கிங் சென்சார்கள், ரியூர் வியூ கேமரா உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் இடம்பெறும் 8 அசத்தலான விஷயங்கள்!

அறிமுக விபரம்

இந்த ஆண்டு மத்தியில் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2019, 11:06 [IST]
English summary
9 Things That You Must Know About The Hyundai Venue.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+