சின்ன குஷ்புவிற்கு அடித்த அதிர்ஷடத்தை பார்த்தீங்களா..! பல கோடி ரூபாய் கார் பரிசு... வழங்கியது யார்?
சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் பிரபல நடிகைக்கு பல கோடி ரூபாய் மதிப்புள் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளிாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலக கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார்களாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன.
அதிலும், பாந்தம் மாடல் கார்களுக்கு நல்ல வரவேற்பு நிலவுகின்றது. இந்த மாடலின் 8 செரீஸ் காரை பிரபல நடிகை ஒருவர் தனது தாயிடம் இருந்து பரிசாக பெற்றுள்ளார்.

ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் 8 செரீஸ் கார் இந்தியாவில் ரூ. 10 கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இத்தகைய அதிக விலைக் கொண்ட காரை பரிசாக பெற்றது யார் என்று தானே கேட்கிறீர்கள். அவர் வேறு யாரும் இல்லை, 'சின்ன குஷ்பு' என்று அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானிதான் அந்த அதிர்ஷ்டசாலி ஆவார்.

ஹன்சிகா மோத்வானியின் தாயார் மோனா மோத்வானிதான் இந்த விலையுயர்ந்த காரை, அவருக்கு தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார். இவர், தோல்நோய் நிபுணராக பணியாற்றி வந்தவர் ஆவார். தற்போது, ஹன்சிகாவின் மேனேஜராக செயல்பட்டு வருகின்றார்.
பாலிவுட்டில் குழைந்த நட்சத்திர திரை பயணத்தை ஆரம்பித்த ஹன்சிகா, தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழிகளில் கால் தடம் பதித்து, முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

இவர், பார்ப்பதற்கு நடிகை குஷ்புவைப் போன்று பப்ளியாக இருப்பதன் காரணத்தாலயே, தமிழ் ரசிகர்கள் இவரை 'குட்டி குஷ்பு' என்று அழைக்கின்றனர். இவர் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
தற்போது, கோலிவுட்டில் அதிகம் சம்பளம் பெறும் மிகப்பெரிய நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர் ஆவார்.

ஹன்சிகா பெற்றிருக்கும் இந்த காரை அவ்வளவு எளிதில் யாராலும் பெற்றுவிட முடியாது என்பது ஊர் அறிந்த ஒன்று. இந்த காரை வாங்க வேண்டும் என்றால், அவர் மிகுந்த செல்வந்ததாரராக இருக்க வேண்டும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், முன்னதாக ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க விரும்பிய நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் விண்ணப்பம் மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.சந்தானத்தின் பின்புலனை பார்த்த, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

அதேசமயம், விஜய், தனுஷ் போன்ற மிகப்பெரிய பிரபலங்கள் இந்த காரை தன் வசம் வைத்துள்ளனர். இதில், தற்போது ஹன்சிகா மோத்வானியும் இணைந்துள்ளார்.
மேலும், ஹன்சிகா மோத்வானிக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ள பாந்தம் மாடல் உலகளாவிய அளவில் புகழ்வாய்ந்த மடால்களில் ஒன்றாக இருக்கின்றது. இதன் எட்டாவது தலைமுறை மாடலைதான் அவர் பரிசாக பெற்றிருக்கின்றார்.

தற்போதைய கார்களின் ஆடம்பர தேவைகளை விட கூடுதலான பல அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன. அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சிறப்பு வசதிகளும் ஏற்படுத்துக் கொடுக்கப்படுகின்றது.

அதேசமயம், ஸ்டாண்டர்டு வசதியாக பாந்தம் 8 செரீஸ் காரில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானாதாக, காரின் டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ள பெரியளவு கிளாஸ் பேனல் காட்சியளிக்கின்றது. இதிவ் 'கேலரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று பரிமாணங்களை கொண்ட இந்த அமைப்பு உரிமையாளரின் பிரத்யேக தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் 8 செரீஸ் காரில் 6.75 லிட்டர் ட்வின்-டர்போ சார்ஜ்ட் வி12 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 563 பிஎச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த திறனானது வெறும் 5.3 நொடிகளில், 100 கிமீ என்ற வேகத்தை எட்டிப்பிடிக்க உதவுகின்றது. இந்த காரில் இசட்எஃப் தொழில்நுட்பம் பொருந்திய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








