காரை தூக்கியெறிந்துவிட்டு ஆட்டோவை வாங்கிய பிரபல நடிகை... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தனிப்பட்ட பயணத்திற்கு சொகுசு கார்களை வாங்குவதற்கு பதிலாக இளம் நடிகை ஒருவர் ஆட்டோவை வாங்கி பயன்படுத்தி வருகின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

காரை தூக்கியெறிந்துவிட்டு ஆட்டோவை வாங்கிய பிரபல நடிகை... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியா மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருக்கும் நடிகர், நடிகைகள் சொகுசு காரில் பயணிப்பதையே விரும்புகின்றனர். ஆனால், முற்றிலும் வித்தியாசமாக இங்கு ஓர் நடிகை ஆட்டோவில் பயணிப்பதை விரும்புகிறார்.

மேலும், இதற்காக தான் பயன்படுத்திவந்த காரை தூக்கியெறிந்துவிட்டு, ஆட்டோ ஒன்றை பயன்படுத்தி வருகின்றார்.

காரை தூக்கியெறிந்துவிட்டு ஆட்டோவை வாங்கிய பிரபல நடிகை... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த ஆட்டோவை வாங்கியது மட்டுமின்றி, அதனை அவரே இயக்கி வருகின்றார். இதனால், அவருக்கு டுக்டுக் ராணி என்ற பட்ட பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கும் டுக்டுக் ராணி என்ற பெயரையே அவர் வைத்துள்ளார்.

காரை தூக்கியெறிந்துவிட்டு ஆட்டோவை வாங்கிய பிரபல நடிகை... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

முற்றிலும் வித்தியாசமான இந்த செயல்பாட்டை, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த யஷாஷ்ரி முசுகர் என்ற இளம் நடிகைதான் மேற்கொண்டுள்ளார். இவர், அதே மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடித்து வருகின்றார்.

காரை தூக்கியெறிந்துவிட்டு ஆட்டோவை வாங்கிய பிரபல நடிகை... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

யஷாஷ்ரி கடந்த ஆண்டுதான் இந்த ஆட்டோவை தனது நண்பரிடம் வாங்கியுள்ளார். தனது தோழி ஒருவர் டென்மார்க்கில் இருந்து இந்தியாவிற்கு சைக்கிள் வழியாக வந்ததைப்பார்த்து, இந்த வித்தியாசமான முயற்சியில் அவர் களமிறங்கியுள்ளார்.

காரை தூக்கியெறிந்துவிட்டு ஆட்டோவை வாங்கிய பிரபல நடிகை... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த ஆட்டோ சாலையில் செல்லும்போது முற்றிலும் வித்தியாசமாக தோன்றுவதற்காக, மாறுபட்ட நீல நிறத்தை அதற்கு வழங்கியுள்ளார். மேலும், வெளியே செல்வதென்றால், எப்போதும் இந்த வாகனத்தையே அவர் பயன்படுத்தி வருகின்றார். அவ்வாறு, தனது நாயுடன் பயணம் மேற்கொள்வதையே அவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.

காரை தூக்கியெறிந்துவிட்டு ஆட்டோவை வாங்கிய பிரபல நடிகை... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதுகுறித்து டைம்ஸ்ஆஃப்இந்தியாவிடம் அவர் கூறியதாவது, "ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் பெண்கள் வளர்ச்சியடைவது மிகப் பெரிய சவாலாக இருக்கின்றது. உதாரணமாக, நான் ஆட்டோவில் பயணிக்கும்போது, ஏதேனும் ஆட்டோ டிரைவரிடம் வழி கேட்டுள்ளேன். அப்போது, பல முறை அவர்கள் எனக்கு தவறான பாதையை காண்பித்துள்ளனர். ஆனால், இப்போது நிலமை மாறிவிட்டது. நான் பலருக்கு வழி சொல்லும் வகையில், பாதைகளை நன்கு அறிந்துகொண்டேன்" என்றார்.

காரை தூக்கியெறிந்துவிட்டு ஆட்டோவை வாங்கிய பிரபல நடிகை... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆட்டோக்கள், கார்களைக் காட்டிலும் பணத்தையும், நேரத்தையும் சேமிப்பவையாக இருக்கின்றன. கார்கள் செல்ல முடியாத பாதையில்கூட ஆட்டோக்கள் எளிதில் நுழைந்து சென்று விடுகின்றன. ஆகையால், ஆட்டோவில் பயணம் மேற்கொள்வதையே அவர் விரும்புகின்றார். அதிலும், அதை அவரே இயக்கவே ஆசைப்படுகின்றார்.

காரை தூக்கியெறிந்துவிட்டு ஆட்டோவை வாங்கிய பிரபல நடிகை... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த ஆட்டோவை, அவரது நண்பர் கிறிஸ்டியன் என்பவரிடம் பெற்றுள்ளார். இவரும் டென்மார்க்கில் இருந்து இந்தியா வந்தவர். மேலும், இந்த ஆட்டோவை முதல் முறையாக மும்பையில் இருந்து ஆக்ரா செல்லவே வாங்கப்பட்டது. பின்னர், கிறிஸ்டியன் இந்தியாவை விட்டு, அவரது சொந்த நாட்டுக்கு திரும்பியபோது, யஷாஷ்ரிக்கு அன்பளிப்பாக அதை வழங்கியுள்ளார். அன்று முதல் இன்று வரை இதை யஷாஷ்ரி மட்டுமே பயன்படுத்தி வருகின்றார்.

Image Courtesy: Yashashri Masurkar/Instagram And India Forums

Article Published On: Thursday, August 29, 2019, 14:06 [IST]
English summary
Actress Using Auto Rickshaw Instead Of Car. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+