புத்தம் புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புத்தம் புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் கார் சற்றுமுன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் உலகளாவிய அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் படங்கள் மற்றும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் அடிப்படையிலான செடான் கார் மாடலாக வந்துள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை கொண்ட இந்த காம்பேக்ட் ரக செடான் காரின் முன்புற டிசைன் மட்டும் நியோஸ் காரை பிரதிபலிப்பதாக இருந்தாலும், பக்கவாட்டிலும், பின்புறமும் புதுமையான அம்சங்களுடன் செடான் ரகத்திற்கு மாறியுள்ளது.

புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் கார் வெளியீடு!

மேலும், இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டிசைனில் பல ஜிகினா வேலைகளை பார்த்துள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ். பொதுவாக ஹூண்டாய் கார்களின் டிசைன் பெரிதும் கவரும் வகையில் இருக்கும். ஆனால், இந்த கார் கவர்ச்சிகரமான பல்வேறு விஷயங்களை பெற்றிருந்தாலும், இளம் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

முகப்பில் க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பு பிரம்மாண்டமாக தெரிகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகளுடன் முகப்பு மிக வசீகரமாகவே உள்ளது. இந்த காரில் க்ரோம் கைப்பிடிகள், 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் வித்தியாசமான டிசைனில் இடம்பெற்றுள்ளன.

இந்த காரின் டிசைனில் எல்லோரின் கவனத்தை ஈர்ப்பது இதன் இதன் சி பில்லர் டிசைன்தான். ஆம். முற்றிலும் கருப்பு நிறத்தில் இதன் சி பில்லர் பூட் ரூமுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கூரை அமைப்பானது கூபே கார் போன்றே தோற்றத்தை தருகிறது.

பின்புறத்தில் பூட் ரூம் அழகாக இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் டெயில் லைட் க்ளஸ்ட்டர் கவர்ச்சியாக இருப்பதுடன், இரண்டையும இணைக்கும் விதத்தில் க்ரோம் பீடிங் மற்றும் எல்இடி விளக்கு பட்டையும் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறமும் காருக்கு பிரம்மாண்டமானதொரு தோற்றத்தை வழங்கும் விதத்தில் இருக்கிறது.

புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் கார் வெளியீடு!

புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் கார் 3,995 மிமீ நீளமும், 1,520 மிமீ உயரமும்,1,680 மிமீ அகலமும் பெற்றுள்ளது. நீளமும், உயரமும் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரை ஒத்திருந்தாலும், அகலத்தில் 16 மிமீ கூடுதலாக இருக்கிறது புதிய அவ்ரா கார். இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,450 மிமீ ஆக உள்ளது.

புதிய ஹூண்டாய் அவ்ரா காரின் இன்டீரியரை பார்ப்பதற்கு இன்று அனுமதிக்கப்படவில்லை. இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் அம்சம், 5.3 அங்குல டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் மல்டி இன்ஃபர்மேஷன் திரை இடம்பெற்றிருக்கும்.

தவிரவும், வயர்லெஸ் சார்ஜர், அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஓட்டுனருக்கான ஆர்ம் ரெஸ்ட், ரியர் வியூ மானிட்டர் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த காரில் புளூலிங் கனெக்டிவிட்டி வசதி கொடுக்கப்படாது என்று தெரிகிறது.

ஹூண்டாய் அவ்ரா செடான் காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 75 எச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் அதிகபட்சமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இரண்டு எஞ்சின்களுமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்துடன் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். இந்த மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் மாடல் எதிர்காலத்தில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் கார் பிரிமீயம் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டில் விற்பனைக்கு வரும் புதிய கார்கள் பட்டியலில் ஹூண்டாய்

Most Read Articles
English summary
Hyundai Aura compact sedan has unveiled in India ahead of its official launch slated to take place sometime early next year.
Story first published: Thursday, December 19, 2019, 18:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X