அதிக உறுதி மற்றும் மிக பிரமாண்ட தோற்றத்துடன் களமிறங்கும் ஹூண்டாய் எலைட் ஐ20: சிறப்பு தகவல் உள்ளே!

ஹூண்டாய் நிறுவனம் அதன் எலைட் ஐ20 மாடலை, தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைக் காட்டிலும் மிகவும் உறுதியானதாகவும், பிரமாண்டமானதாகவும் உறுவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிக உறுதி மற்றும் மிக பிரமாண்ட தோற்றத்துடன் களமிறங்கும் ஹூண்டாய் எலைட் ஐ20: சிறப்பு தகவல் உள்ளே!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் அதன் தயாரிப்புகளை வரிசையாக அறிமுகம் செய்து வருகின்றது. மேலும், கூடுதலாக சில மாடல்களை அறிமுகம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், மிகவும் எதிர்பார்ப்பு நிலவி வரும் வென்யூ எஸ்யூவி மாடலை இம்மாதம் 21ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது.

அதிக உறுதி மற்றும் மிக பிரமாண்ட தோற்றத்துடன் களமிறங்கும் ஹூண்டாய் எலைட் ஐ20: சிறப்பு தகவல் உள்ளே!

தொடர்ந்து, எலக்ட்ரிக் காரான கோனாவையும் இந்த வருடத்தின் இறுதிக்குள் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இத்துடன், புதிய தலைமுறை கிராண்ட் ஐ10 காரையும் இந்த நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

அதிக உறுதி மற்றும் மிக பிரமாண்ட தோற்றத்துடன் களமிறங்கும் ஹூண்டாய் எலைட் ஐ20: சிறப்பு தகவல் உள்ளே!

இவ்வாறு ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில், இந்த வருடம் முழுவதும் பல்வேறு புதுப்பிக்கப்பட்ட மற்றும் புத்தம் புதிய மடால்களை அறிமுகம் செய்யது வருகின்றது. இதேபோன்று, நடப்பாண்டில் மட்டுமின்றி அடுத்துவரும் வருடங்களிலும், அதன் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

அதிக உறுதி மற்றும் மிக பிரமாண்ட தோற்றத்துடன் களமிறங்கும் ஹூண்டாய் எலைட் ஐ20: சிறப்பு தகவல் உள்ளே!

அந்த வகையில், இரண்டாம் தலைமுறை ஹூண்டய் எலைட் ஐ20 காரை அந்த நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை காடிவாடி இணையதளம் வெளியிட்டுள்ளது. ஹூண்டாயின் இந்த எலைட் ஐ20 கார், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் ரக கார்களில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.

அதிக உறுதி மற்றும் மிக பிரமாண்ட தோற்றத்துடன் களமிறங்கும் ஹூண்டாய் எலைட் ஐ20: சிறப்பு தகவல் உள்ளே!

இந்த புதிய தலைமுறை எலைட் ஐ20 காரானது, புதிதாக விற்பனைக்கு களமிறங்க இருக்கும் டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸுக்கு போட்டியாக அடுத்த வருடம் அறிமுகமாக இருக்கின்றது. இந்த அல்ட்ராஸ் நடப்பாண்டின் நான்காவது நிதியாண்டில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக உறுதி மற்றும் மிக பிரமாண்ட தோற்றத்துடன் களமிறங்கும் ஹூண்டாய் எலைட் ஐ20: சிறப்பு தகவல் உள்ளே!

மேலும், இந்த புதிய எலைட் ஐ20 ஹேட்ச்பேக் கார் தற்போது விற்பனையில் இருக்கும் ஐ20 காரைக்காட்டிலும் அதிகப்படியான பரிமாணங்களைக் பெற்றிருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், மிகவும் உறுதியான மற்றும் பிரமாண்டமான மாடலாக புதிய எலைட் ஐ20 கார் உருவாகி வருகின்றது.

அதிக உறுதி மற்றும் மிக பிரமாண்ட தோற்றத்துடன் களமிறங்கும் ஹூண்டாய் எலைட் ஐ20: சிறப்பு தகவல் உள்ளே!

அவ்வாறு, இந்த கார் புதிய சான்ட்ரோ மற்றும் வென்யூ கார்களைப்போன்று, மிக உறுதியான பாடி கட்டுமானங்களை பெறும். இது கிராஷ் டெஸ்டில் நல்ல ரேட்டிங்கைப் பெறவும், அதேசமயம் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் உதவும்.

அதிக உறுதி மற்றும் மிக பிரமாண்ட தோற்றத்துடன் களமிறங்கும் ஹூண்டாய் எலைட் ஐ20: சிறப்பு தகவல் உள்ளே!

இத்துடன், ஹூண்டாய் நிறுவனம் மேலும் சில பாதுகாப்பு அம்சங்களையும் கூடுதலாக இணைத்துள்ளது. அவ்வாறு, முன்பக்கத்தில் இரண்டு ஏர் பேக்குகள், முன்பக்க சீட் பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸிங் சென்சார், ஸ்பீட் வார்னிங் சிஸ்டம், ஸ்பீடு சென்ஸிங் ஆட்டோ டூர் லாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அதிக உறுதி மற்றும் மிக பிரமாண்ட தோற்றத்துடன் களமிறங்கும் ஹூண்டாய் எலைட் ஐ20: சிறப்பு தகவல் உள்ளே!

பிஎஸ்6 தரத்திற்கேற்ப உருவாகியிருக்கும் இதன் எஞ்ஜின்கள் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. மேலும், இந்த இரண்டு எஞ்ஜின்களிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Sunday, May 5, 2019, 14:18 [IST]
English summary
All-New Hyundai Elite i20 Launching Next Year. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+