கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கியா செல்டோஸ் கார் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது. மிக கவர்ச்சிகரமான எஸ்யூவி மாடலாக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரின் பிரத்யேக படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கார் வர்த்தகத்திற்கான ஆரம்ப பணிகளை துவங்கியது. கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் எஸ்பி-2 என்ற எஸ்யூவி கான்செப்ட் உள்ளிட்ட கார் மாடல்களை இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வந்தது.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

ஆந்திராவில் உற்பத்தி ஆலை அமைத்ததுடன், நாடு முழுவதும் டீலர்களை நியமித்தது. இந்த நிலையில், இன்று தனது முதலாவது மாடலாக எஸ்பி-2 கான்செப்ட் அடிப்படையிலான புத்தம் புதிய செல்டோஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

புதிய கியா செல்டோஸ் கார் வடிவமைப்பில் மிக கவர்ச்சிகரமாக இருக்கிறது. முதல் பார்வையிலேயே அசத்தலாக இருக்கிறது. குறிப்பாக, இதன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் சிறு அறைகள் கொண்ட வடிவமைப்பு புதுமையாகவும், மிக கவர்ச்சியாகவும் உள்ளது.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

இதுவரை பார்க்காத வகையிலும், நவீன தொழில்நுட்ப முறையிலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் ஹெட்லைட் க்ளஸ்ட்டரின் மேல்பகுதியில் மெல்லிய பீடிங் போல காட்சி தரும் எல்இடி பகல்நேர விளக்குகள் அசத்துகின்றன.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் க்ரில் அமைப்புடன் இணைந்தாற்போல் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் புலி மூக்கு வடிவத்திலான முகப்பு க்ரில் அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இது மிக நேர்த்தியாகவும், காருக்கு மிக கம்பீரமான முகத் தோற்றத்தையும் வழங்குகிறது. பம்பரில் பனி விளக்குகள் மிக நேர்த்தியான முறையில் பொருத்தப்பட்டுள்ளன. பெரிய ஏர்டேம் பகுதி இடம்பெற்றுள்ளது. முப்பரிமாண தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

பக்கவாட்டில் பெரிய வீல் ஆர்ச்சுகள் காரின் கம்பீரத்திற்கு வலு சேர்க்கின்றன. 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்களின் டிசைனும், வடிவமும் காரின் வடிவத்திற்கு சரியானதாக தெரிகின்றன. க்ரோம் கைப்பிடிகள், இரட்டை வண்ண சைடு மிரர்கள், ரூஃப் ரெயில்கள், பாடி கிளாடிங் சட்டங்கள் இதனை எஸ்யூவி காருக்கு உரிய அந்தஸ்தை பெற்று தருகின்றன.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. டெயில் லைட் க்ளஸ்ட்டர்களை இணைக்கும் க்ரோம் பட்டையின் நடுவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இலட்சினை பொருத்தப்பட்டுள்ளன.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

இரட்டை வண்ண பம்பர் அமைப்பு, ஸ்கிட் பிளேட் ஆகியவையும் இதன் பின்புறத்தை பிரம்மாண்டமாக காட்டுகிறது. மொத்தத்தில் இந்திய வாடிக்கையாளர்களின் டிசைன் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் மாடலாக கூறலாம்.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

காரின் வெளித்தோற்றத்தை போலவே, இன்டீரியரும் சிறப்பாக வந்துள்ளது. இதன் இன்டீரியர் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலானதாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. கதவுகள், இருக்கை கவர்கள் பீஜ் வண்ண்ணதிலும், கருப்பு வண்ணதிலும் இருக்கின்றன.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய பிரம்மாண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டில் நடுநாயகமாக வீற்றிருக்கிறது. அதற்கு கீழாக ஏசி வென்ட்டுகளும், ஏசி கட்டுபாட்டு அமைப்பும் இடம்பெற்றுள்ளது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளன. இதுதவிர, 360 டிகிரி கேமராவும் கொடுக்கப்படுகிறது.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

ஹூண்டாய் வெனியூ காரில் கொடுக்கப்பட்ட புளூ லிங்க் செயலி போன்றே, இந்த காரில்ம் யுவோ என்ற செயலி மூலமாக நேவிகேஷன், கார் இருப்பிடத்தை அறியும் வசதி, ரிமோட் கன்ட்ரோல் முறையில் முடக்கும் வசதிகள் உள்பட 33 விதமான தொழில்நுட்ப வசதிகளை பெறும் வசதியுடன் வருகிறது.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

புதிய கியா செல்டோஸ் காரில் 1.4 லிட்டர் டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். மூன்று எஞ்சின் தேர்வுகளிலுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

இதன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும், 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் மாடலும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்பட இருக்கிறது.

கவர்ச்சிகரமான டிசைனில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம்: விபரம்!

தற்போது நாடு முழுவதும் 160 நகரங்களில் 265 டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களுடன் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது கியா மோட்டார்ஸ். அடுத்த ஆண்டிற்குள் 300 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. புதிய கியா செல்டோஸ் பண்டிகை காலத்திற்கு முன்னதாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 20, 2019, 14:08 [IST]
English summary
South Korean car maker, KIA motors has unvieled all new Seltos SUV in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+