பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை அமிதாப் பச்சன் தற்போது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர்களில் ஒருவர். மிகவும் விலை உயர்ந்த லக்ஸரி கார்கள் மீது அமிதாப் பச்சன் மிகுந்த ஆர்வம் காட்டக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அவரது வீட்டில் உள்ள சொகுசு கார்கள் இதனை உறுதி செய்கின்றன.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி, ஆடி ஏ8எல், மெர்சிடிஸ் மேபேக் எஸ்500, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்350, போர்ஷே கேமேன், டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எல்சி200, டொயோட்டா கேம்ரி மற்றும் மினி கூப்பர் உள்ளிட்ட விலை உயர்ந்த கார்கள் அவரிடம் உள்ளன.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

அத்துடன் லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 கார் ஒன்றும், அமிதாப் பச்சன் வீட்டிற்கு புதிதாக வந்துள்ளது. எஸ்யூவி வகையை சேர்ந்த இந்த காரை அமிதாப் பச்சன் சமீபத்தில்தான் வாங்கினார். இதன் எக்ஸ் ஷோரூம் விலையே 2.32 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

இவை தவிர ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் கார் ஒன்றையும் அமிதாப் பச்சன் வைத்திருந்தார். இது லக்ஸரி செடான் வகையை சேர்ந்த கார் ஆகும். அமிதாப் பச்சன் வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம், பாலிவுட் திரையுலகின் மிக விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக கருதப்பட்டது.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரை அமிதாப் பச்சன் வாங்கவில்லை. அது அவருக்கு பரிசாக கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன் நடிப்பில், ஏகலைவா என்ற திரைப்படம், கடந்த 2007ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானது.

MOST READ: சிட்ரோவன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதிக்கும் பிஎஸ்ஏ குழுமம்!

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

விது வினோத் சோப்ரா என்பவர், ஏகலைவா படத்தை இயக்கியதுடன், தயாரித்தும் இருந்தார். பாலிவுட் திரை உலகில், அமிதாப் பச்சனை போல், விது வினோத் சோப்ராவும் மிகவும் பிரபலமான நபர்தான். இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

ஏகலைவா படத்தில் அமிதாப் பச்சனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. எனவேதான் மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரை, அமிதாப் பச்சனுக்கு பரிசாக வழங்கினார் விது வினோத் சோப்ரா. அமிதாப் பச்சனுக்கு இந்த கார் கடந்த 2007ம் ஆண்டு பரிசாக கிடைத்தது.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

அப்போதே அதன் அடிப்படை விலை 3.50 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சனிடம் இருந்த ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் லேட்டஸ்ட் ஜென்ரேஷன் கிடையாது. இது முந்தைய ஜென்ரேஷன் கார் என்றாலும் கூட, ஏராளமான லக்ஸரி வசதிகள் இருந்தன.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் லக்ஸரியான செடான் வகை கார் பாந்தம்தான். எனவே அமிதாப் பச்சனுக்கு மிகவும் பிடித்தமான காராக ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் இருந்து வந்தது. தனது தினசரி பயன்பாட்டிற்கு கூட, இந்த காரைதான் அமிதாப் பச்சன் பயன்படுத்தி வந்தார்.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

எனவே ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரில், அமிதாப் பச்சனை பல முறை பார்க்க முடிந்துள்ளது. தனியாகவும், குடும்பத்தினருடனும் அவர் உற்சாகமாக வலம் வருவார். ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரை ஓட்டுவதென்றால் அமிதாப் பச்சனுக்கு கொள்ளை பிரியம். எனவே அவராகதான் இந்த காரை ஓட்டி வருவார்.

MOST READ: இந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரில், ஒரு முறை கூட டிரைவருடன் அமிதாப் பச்சனை பார்த்ததே கிடையாது. இந்த காரில், 6.75 லிட்டர், வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 460 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

இந்த சூழலில் தனது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரை அமிதாப் பச்சன் தற்போது விற்பனை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த உம்ரா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்திற்கு கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

இவர்களிடம் மைசூரில் ஏற்கனவே கவர்ச்சிகரமான பல கார்கள் உள்ளன. இதில், ரோல்ஸ் ராய்ஸ் பாந்தமும் தற்போது இணைந்துள்ளது. ஆனால் அமிதாப் பச்சனின் கார் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது? என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

8வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலையே 9.50 கோடி ரூபாய் (எக்ஸ் ஷோரூம்). லேட்டஸ்ட் ஜென்ரேஷனுக்கு அப்கிரேட் செய்யும் வகையில், இந்த காரை வாங்க அமிதாப் பச்சன் முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

இதன் காரணமாகவே முந்தைய தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரை அமிதாப் பச்சன் விற்பனை செய்திருக்க கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் 8வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரை அவர் புக்கிங் செய்திருப்பது தொடர்பாக எவ்வித செய்தியும் வெளியாகவில்லை.

MOST READ: இந்தியாவை புரட்டி போட களமிறங்கும் புதிய யமஹா பைக்... விலை தெரிந்தால் இன்றே புக் செய்து விடுவீர்கள்...

பிரபல இயக்குனர் பரிசாக வழங்கிய பல கோடி ரூபாய் காரை விற்பனை செய்த அமிதாப் பச்சன்... காரணம் இதுதான்...

அதேபோல் கூடிய விரைவில் அவருக்கு கார் டெலிவரி செய்யப்படப்போகிறது என்கிற ரீதியிலும் எவ்வித தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எங்களுக்கு தெரியவந்தவுடன் உங்களுக்கு அப்டேட்களை கொண்டு வருகிறோம்.

Source: Kaustav jaiswal

Tamil
English summary
Amitabh Bachchan Sold His Rolls Royce Phantom Received From Vidhu Vinod Chopra As A Gift. Read in Tamil
Story first published: Monday, March 4, 2019, 12:31 [IST]
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more