அம்பானி கான்வாயில் முதல்முறையாக இடம்பெற்ற விலையுயர்ந்த கார்: ஸ்பெஷல் ரிப்போர்ட்!

உலகின் விலையுயர்ந்த கார்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் குல்லினன், அம்பானி குடும்பத்தினரின் கான்வாயில் இடம்பெற்றதைப் போன்று புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அம்பானி கான்வாயில் முதல்முறையாக இடம்பெற்ற விலையுயர்ந்த கார்: ஸ்பெஷல் ரிப்போர்ட்!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக அனில் அம்பானி இருந்து வருகின்றார். இவர் மிகப் பெரிய சொகுசு கார் விரும்பி ஆவார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், அவரின் கராஜில் ஏகப்பட்ட சொகசு நிறைந்த ஆடம்பர கார்களின் அணிவகுப்பு இருக்கின்றது.

சொகுசு கார்களின்மீது அலாதியான விருப்பம் கொண்ட அம்பானி, அவரது மும்பை இல்லத்தில் அவற்றிற்கென 6 தளங்களை நிறுவியுள்ளார்.

அம்பானி கான்வாயில் முதல்முறையாக இடம்பெற்ற விலையுயர்ந்த கார்: ஸ்பெஷல் ரிப்போர்ட்!

இந்த தளத்தில் பல்வேறு வகையிலான லக்சூரியஸ் கார்கள் நிற்க வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், லம்போர்கினி உருஸ், பென்ட்லி பென்டேகா டபிள்யூ 12, பென்ட்லி பென்டேகா வி 8 உள்ளிட்ட பல கார்கள் அண்பானியின் கராஜில் உள்ளன.

இந்த வரிசையில், ரோல்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி ரக குல்லினன் கார் கடந்த மாதம் இணைந்தது. இந்தியாவில் இந்த காரை பெற்ற முதல் இந்தியர் அம்பானி குடும்பத்தினர்கள்தான். ஆனால், இந்த காரை இவர்கள் பல நாட்களாக பயன்படுத்தாமலே வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

அம்பானி கான்வாயில் முதல்முறையாக இடம்பெற்ற விலையுயர்ந்த கார்: ஸ்பெஷல் ரிப்போர்ட்!

இந்நிலையில், அதனை தகர்த்தெறியும் வகையில், முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் கான்வாயில் ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தப்பட்டிருப்பாதக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஆனந்த அம்பானி பயணிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்.

அம்பானி கான்வாயில் முதல்முறையாக இடம்பெற்ற விலையுயர்ந்த கார்: ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ஆனந்த் அம்பானி, டிரைவருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து செல்வதுபோன்ற காட்சி இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார், மும்பையின் மிகவும் பரபரப்பான சாலையிலும் மிகவும் தனித்துவமான தோற்றத்தில் காட்சியளித்தது. இத்துடன், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 எஸ்யூவி உள்ளிட்ட கார்களின் அணிவகுப்பு காட்சியளித்தன.

அம்பானி கான்வாயில் முதல்முறையாக இடம்பெற்ற விலையுயர்ந்த கார்: ஸ்பெஷல் ரிப்போர்ட்!

இந்த கான்வாயில் காட்சியளித்த ரோல்ஸ் ராய்ஸ் குல்லினன், ஒற்றை நிறத்தை அடிப்படையாகக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், லைட் பிரவுன் நிறத்தில் குல்லினன் காட்சியளிக்கின்றது. ஆனால், கார் மாலை நேரத்தில் காட்சியளித்திருப்பதால், அந்த நிறத்தை உறுதியாக கூறமுடியவில்லை. இந்த கார் இந்தியாவில் ரூ. 6.95 கோடி என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

அம்பானி கான்வாயில் முதல்முறையாக இடம்பெற்ற விலையுயர்ந்த கார்: ஸ்பெஷல் ரிப்போர்ட்!

இது தவிர்த்து அம்பானி குடும்பத்தினர், அவர்களின் தேவைக்கேற்ப அந்த காரின் வசதிகள் சிலவற்றை மாற்றியமைத்துள்ளனர். இதன்காரணமாக அந்த கார் மேலும் கூடுதல் சிறப்பு கொண்ட காஸ்ட்லியான காராக மாறியுள்ளது.

அந்தவகையில், அம்பானி இந்த காருக்கு ரூ. 8 கோடிக்கும் மேலாக செலவு செய்திருக்கலாம் என தெரிகின்றது.

அம்பானி கான்வாயில் முதல்முறையாக இடம்பெற்ற விலையுயர்ந்த கார்: ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்த லக்சூரியஸ் காரில் சிறப்பான அதீத திறனை வெளிப்படுத்துகின்ற வகையில், 6.8 லிட்டர் வி12 டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 560 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்த காரில் ஸ்டாண்டர்டு 4*4 சிஸ்டத்துடன் கூடிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

அம்பானி கான்வாயில் முதல்முறையாக இடம்பெற்ற விலையுயர்ந்த கார்: ஸ்பெஷல் ரிப்போர்ட்!

இந்த கார் ஆன் ரோடு மட்டுமின்றி ஆஃப் ரோடில் இயங்குகின்ற வகையிலான அம்சங்களைப் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், பறவையின் பார்வை திறன் கொண்ட அம்சம் இந்த காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது குல்லினன் சாலையில் செல்லும்போது அதனைச் சுற்றியுள்ள பரப்பளவை மிக துள்ளியமாக திரை மூலம் காண்பித்துவிடும். இதுமட்டுமின்றி கூடுதலாக மேலும் சில சிறப்பம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2019, 12:23 [IST]
English summary
Anant Ambani Spotted In Rolls Royce Cullinan For The First Time. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+