முதலாவதாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரச்சான்றை பெற்றது அசோக் லேலண்ட்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரச்சான்றை பெற்ற இந்தியாவின் முதல் கனரக வாகன நிறுவனம் என்ற பெருமையை அசோக் லேலண்ட் பெற்றிருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

முதலாவதாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரச்சான்றை பெற்றது அசோக் லேலண்ட்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. குறைவான மாசு உமிழ்வு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கான பணிகளில் வாகன நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

முதலாவதாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரச்சான்றை பெற்றது அசோக் லேலண்ட்!

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் அசோக் லேலண்ட் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான தொழில்நுட்பத்துடன் கனரக வாகனங்களுக்கான எஞ்சின்களை தயாரித்துள்ளது.

முதலாவதாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரச்சான்றை பெற்றது அசோக் லேலண்ட்!

இதற்காக, ஏராளமான முதலீடுகளையும் அசோக் லேலண்ட் செய்துள்ளது. மேலும், பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட டிரக்குகளையும் தீவிர சோதனைக்கு ஓட்டத்திற்கு உட்படுத்தி இருந்தது.

முதலாவதாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரச்சான்றை பெற்றது அசோக் லேலண்ட்!

அசோக் லேலண்ட் தயாரித்துள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான கனரக வாகன எஞ்சின்களுக்கு புனேயில் இயங்கி வரும் அராய் சோதனை மையம் அங்கீகரித்து சான்றளித்துள்ளது. பிஎஸ்-6 எஞ்சின்களுக்கான அங்கீகாரத்தை பெறும் முதல் நிறுவனம் என்ற பெருமையை அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.

முதலாவதாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரச்சான்றை பெற்றது அசோக் லேலண்ட்!

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 16.2 டன் நிகர எடைக்கு மேற்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட இருக்கும் பிஎஸ்-6 எஞ்சின்களுக்கு அராய் அமைப்பு சான்றளித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 70 எச்பி முதல் 360 எச்பி திறன் கொண்ட கனரக டிரக் எஞ்சின்களில் இந்த புதிய எஞ்சின்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

முதலாவதாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரச்சான்றை பெற்றது அசோக் லேலண்ட்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட டிரக்குகளை அசோக் லேலண்ட் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாசு உமிழ்வு குறைவான சூழலை உருவாக்கும் முயற்சியில் அசோக் லேலண்ட் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

முதலாவதாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரச்சான்றை பெற்றது அசோக் லேலண்ட்!

டாடா மோட்டார்ஸ், பாரத் பென்ஸ், வால்வோ, மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் விரைவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான வாகனங்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Ashok Leyland has received BS-VI certification for its entire heavy duty truck range.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X