அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி விரைவில் அறிமுகமாகிறது!

எஸ்யூவி கார்களுக்கான எகிடுதகிடான வரவேற்பு சொகுசு கார் நிறுவனங்களின் கவனத்தையும் கடந்த சில ஆண்டுகளாக ஈர்த்துள்ளது. ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன், லம்போர்கினி உரஸ், பென்ட்லீ பென்டைகா என உயர்வகை சொகுசு எஸ்யூவி மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. இந்த பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் நிறுவனமும் விரைவில் இணைய இருக்கிறது.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி விரைவில் அறிமுகமாகிறது!

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி ரக கார் டிபிஎக்ஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. தயாரிப்பு நிலைக்கு முந்தைய மாடல்களின் படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. இந்த புத்தம் புதிய மாடலானது குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு நிகழ்ச்சியில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி விரைவில் அறிமுகமாகிறது!

குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு நிகழ்ச்சியின்போது ஹில் க்ளைம்ப் போட்டியிலும் இந்த எஸ்யூவி பங்கேற்க இருப்பதால், இந்த எஸ்யூவியின் டிசைன் மற்றும் புகைப்போக்கி சப்தம் போன்ற பல விஷயங்களை பார்வையாளர்கள் நேரில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி விரைவில் அறிமுகமாகிறது!

புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. எனவே, உலகின் மிகவும் விசேஷமான எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்படும். இதனால், விலையும் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி விரைவில் அறிமுகமாகிறது!

புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இந்த வாரத்தில் நடக்கும் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு நிகழ்ச்சியின்போது முக்கிய தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி விரைவில் அறிமுகமாகிறது!

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி மட்டுமின்றி, அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் ஏஎம்ஆர், டிபிஎஸ் சூப்பர்லெகரா வோலண்டே ஜிடி மற்றும் அஸ்டன் மார்ட்டின் ரேபிட் இ எலெக்ட்ரிக் கார்களும் பார்வைக்கு வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவி விரைவில் அறிமுகமாகிறது!

இதில், அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவிதான் கார் பிரியர்களின் ஆவலை வெகுவாக தூண்டி இருக்கிறது. அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் எஸ்யூவியின் செயல்திறனை பார்க்கவே குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு நிகழ்ச்சிக்கு அதிக அளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்று தெரிகிறது.

Most Read Articles

English summary
Aston Martin seems to be pulling off a Bentley and Lamborghini. The British auto maker has not been in the limelight of late but has been slowly changing it's strategy to become more profitable. Low volume manufacturers usually build special edition models that are expensive. An approach they rather not choose is increasing sales volumes by diluting the brand.
Story first published: Wednesday, July 3, 2019, 10:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more