ஆடி ஏ4 மற்றும் க்யூ7 கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஆடி ஏ4 மற்றும் க்யூ-7 கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்பெஷல் மாடல்களில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் விபரங்களை காணலாம்.

ஆடி ஏ4 மற்றும் க்யூ7 கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஆடி ஏ4 சொகுசு செடான் கார் மற்றும் க்யூ-7 சொகுசு எஸ்யூவி கார்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி மிகுந்துள்ளதையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆடி ஏ4 மற்றும் க்யூ7 கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஆடி ஏ4 மற்றும் க்யூ-7 லைஃப் ஸ்டைல் எடிசன் என்ற பெயரில் இந்த விசேஷ பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரில் பின் இருக்கை பயணிகளுக்கான 10 அங்குல டிவி திரைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு சாதனங்களுகான ஆடி நிறுவனத்தின் RSE மொபைல் அப்ளிகேஷனை கட்டணமில்லாமல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.

ஆடி ஏ4 மற்றும் க்யூ7 கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தில் 16 ஜிபி மெமரி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக எல்இடி என்ட்ரி விளக்குகள் உள்ளன. இவை கார் கதவை திறக்கும்போது ஆடியின் லோகோவின் வடிவை தரையில் ஒளியை பாய்ச்சும் எல்இடி லைட்டுகளும் முக்கிய சிறப்பம்சமாக உள்ளன. ஸ்டீல் பெடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆடி ஏ4 மற்றும் க்யூ7 கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த காரின் பக்கவாட்டில் சைடு போர்டுகள் பொருத்ததப்பட்டுள்ளன. மேலும், ஸ்மோக்டு எல்இடி டெயில் லைட்டுகள், டெயில்கேட் ஸ்பாய்லர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. காரின் கூரையில் கேரியர் மற்றும் உடைமைகளை வைத்துக் கொள்வதற்கான பெட்டி ஆகியவையும் உள்ளன. 150 கிலோ எடை வரையிலான பொருட்களை வைத்துக் கொள்ள முடியும்.

ஆடி ஏ4 மற்றும் க்யூ7 கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த காரில் மினி காஃபி மேக்கிங் எந்திரம் மற்றும் குளிர்பான பாட்டில்களை குளிர்ச்சியாக வைப்பதற்கான சிறிய குளிர்சாதன அறை ஆகியவையும் இடம்பெற்றிருக்கின்றன. மொத்தத்தில் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு பயணத்தையும் மிகச் சிறப்பான அனுபவத்தை தரும்.

ஆடி ஏ4 மற்றும் க்யூ7 கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

புதிய ஆடி ஏ4 லைஃப்ஸ்டைல் எடிசன் மாடல் ரூ.43.09 லட்சத்திலும், க்யூ-7 எஸ்யூவி காரின் லைஃப்ஸ்டைல் எடிசன் ரூ.75.82 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். இந்த மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிக ஆதரவு தருவார்கள் என்று ஆடி தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 25, 2019, 11:06 [IST]
English summary
German automaker Audi has just launched lifestyle editions of the Audi A4 and the Audi Q7. The lifestyle editions of both cars sport more features and Audi hopes that they will add more to sales numbers.
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+