ஆடி க்யூ-5 மற்றும் க்யூ-7 கார்களின் விலை ரூ.6 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

ஆடி க்யூ-5 மற்றும் க்யூ-7 சொகுசு ரக எஸ்யூவி கார்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆடி க்யூ-5 மற்றும் க்யூ-7 கார்களின் விலை ரூ.6 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

ஆடி கார் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான சொகுசு ரக எஸ்யூவி மாடல்களாக க்யூ-5 மற்றும் க்யூ-7 கார்களாக விளங்குகின்றன. இந்த கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த இரண்டு கார்களும், கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆடி க்யூ-5 மற்றும் க்யூ-7 கார்களின் விலை ரூ.6 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

இந்த இரண்டு கார்களும் ஆடி நிறுவனத்தின் அதிக வரவேற்பை பெற்ற மாடல்கள். குறிப்பாக, சினிமா நட்சத்திரங்களின் தேர்வு பட்டியலில் இந்த இரண்டு மாடல்களும் முன்னிலை வகிக்கின்றன. இந்த நிலையில், இந்த விலை குறைப்பு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பணக்காரர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

ஆடி க்யூ-5 மற்றும் க்யூ-7 கார்களின் விலை ரூ.6 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

இந்த நிலையில், இந்த இரு கார்களும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைதையொட்டி விலையை ஆடி கார் நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது.

ஆடி க்யூ-5 மற்றும் க்யூ-7 கார்களின் விலை ரூ.6 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

இந்த இரண்டு சொகுசு ரக எஸ்யூவி கார்களின் விலையை ரூ.6.02 லட்சம் வரை அதிரடியா குறைத்துள்ளது ஆடி கார் நிறுவனம். இந்த ஆஃபர் குறிப்பிட்ட காலத்திற்கான சலுகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி க்யூ-5 மற்றும் க்யூ-7 கார்களின் விலை ரூ.6 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

ஆடி க்யூ-5 எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் மாடல்கள் ரூ.55.8 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது. இந்த நிலையில், இந்த கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்த காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் ரூ.49.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5.81 லட்சம் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஆடி க்யூ-5 மற்றும் க்யூ-7 கார்களின் விலை ரூ.6 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

ஆடி நிறுவனத்தின் நடுத்தர வகை சொகுசு எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் க்யூ-5 எஸ்யூவியானது 252 எச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது 190 எச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும்.

ஆடி க்யூ-5 மற்றும் க்யூ-7 கார்களின் விலை ரூ.6 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

அதேபோன்று, ஆடி க்யூ7 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.73.82 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து தற்போது ரூ.68.99 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது. அதாவது, விலையில் ரூ.4.83 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆடி க்யூ-5 மற்றும் க்யூ-7 கார்களின் விலை ரூ.6 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

ஆடி க்யூ-7 எஸ்யூவியின் டீசல் மாடலானது ரூ.78.01 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைத்து வந்தது. இந்த மாடலின் விலை ரூ.71.99 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.6.02 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலை குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கும்.

ஆடி க்யூ-5 மற்றும் க்யூ-7 கார்களின் விலை ரூ.6 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

புதிய ஆடி க்யூ-7 எஸ்யூவியானது 7 சீட்டர் மாடல் என்பதுடன் இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் சக்திவாய்ந்த 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் 249 எச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 2, 2019, 11:00 [IST]
English summary
German luxury car maker Audi has slashed Q7 and Q5's prices as the company celebrates the SUVs' ten years in India.
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+