புதிய தோற்றத்துடன் அப்கிரேட் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஆடி ஏ4 கார் அறிமுகம்!

ஆடி நிறுவனம், அதன் மிகவும் பிரபல மாடலான ஏ4 செடான் ரக காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு என்பது குறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய தோற்றத்துடன் அப்கிரேட் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஆடி ஏ4 கார் அறிமுகம்!

ஆடி நிறுவனம் அதன் ஆடி ஏ4 செடான் ரக காரை 2020ம் ஆண்டிற்கு ஏற்ப தயார் செய்துள்ளது. இத்துடன், அதன் சகோதரி மாடலான பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷன் எஸ்4 மாடலையும் அந்த நிறுவனம் புதுப்பித்துள்ளது. இந்த இரு மாடல்களும் பழைய மாடலைக் காட்டிலும் மிகவும் போல்டான அமைப்பைப் பெற்றுள்ளது.

புதிய தோற்றத்துடன் அப்கிரேட் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஆடி ஏ4 கார் அறிமுகம்!

இந்திய சொகுசு கார் சாந்தையில், ஆடி ஏ4 செடான் ரக காருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகிறது. அதேசமயம், இது இந்தியாவில் உள்ள சினிமா நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றகா மாடலாக இருக்கின்றது. இதன்காரணமாகவே அந்த நிறுவனம், இதனை ஸ்பெஷல் எடிசனாக தற்போது உருவாக்கியுள்ளது.

புதிய தோற்றத்துடன் அப்கிரேட் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஆடி ஏ4 கார் அறிமுகம்!

ஆடியின் இந்த அப்கிரேட் செய்யப்பட்ட புதிய கார்களின் இன்ட்ரீயர் மற்றும் வெளிப்புற தோற்றம் படுகவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஆடி ஏ4 காரின் முகப்பு பகுதியில் ஹெக்ஸாகோனல் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் முகப்பு பகுதிக்கு கவர்ச்சியான மாடல் அழகியைப் போன்ற தோற்றத்தை வழங்குகிறது.

புதிய தோற்றத்துடன் அப்கிரேட் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஆடி ஏ4 கார் அறிமுகம்!

இத்துடன், க்ரில் அமைப்பை மேலும் க்ரிஸ்பியாக காட்டும் வகையில், அதன் பக்கவாட்டுக்கு மேல் பகுதியில் இரண்டு எல்இடி முகப்பு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, பின்பக்கத்தில், ஷார்ப்பான தோற்றத்தில் இருக்கும் பம்பர் அமைப்பில் எல்இடி ரியர் மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் மேட்ரிக்ஸ் எல்இடி தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

புதிய தோற்றத்துடன் அப்கிரேட் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஆடி ஏ4 கார் அறிமுகம்!

இவற்றுடன், தொழில்நுட்ப வசதியாக புத்தம் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, புதுப்பிக்கப்பட்ட ஆடி ஏ4 காரில் 10.1 இன்சிலான டச் ஸ்க்ரீன் தன்மைக் கொண்ட புத்தம் புதிய எம்எம்ஐ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தோற்றத்துடன் அப்கிரேட் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஆடி ஏ4 கார் அறிமுகம்!

இந்த ரகத்திலான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும், ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு சாதனங்களுகான ஆடி நிறுவனத்தின் RSE மொபைல் அப்ளிகேஷனை கட்டணமில்லாமல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய தோற்றத்துடன் அப்கிரேட் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஆடி ஏ4 கார் அறிமுகம்!

மேலும், இந்த கார் மூன்று விதமான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் ஆப்ஷனில் கிடைக்க இருக்கின்றது. அதில், இரண்டு அனலாக் டைப்பிலும், ஒன்று மட்டும் டிஜிட்டல் டைப்பிலும் கிடைக்கும். அதேபோன்று, ஆடி ஏ4 மாடல் 3 விதமான எஞ்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

புதிய தோற்றத்துடன் அப்கிரேட் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஆடி ஏ4 கார் அறிமுகம்!

ஆடி ஏ4 மாடலில் கிடைக்கும் எஞ்ஜின் ஆப்ஷன்:

2.0 லிட்டர் டிடிஐ எஞ்ஜின் 187 பிஎச்பி பவரையும் வழங்கும் திறன்கொண்டது. அடுத்ததாக, இருக்கும் 2.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் 241 பிஎச்பி பவரை வழங்கும். அதேபோன்று, 3.0 லிட்டர் டிடிஐ எஞ்ஜின் 227 பிஎச்பி பவரை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.

புதிய தோற்றத்துடன் அப்கிரேட் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஆடி ஏ4 கார் அறிமுகம்!

ஆடி எஸ்4 மாடலில் கிடைக்கும் எஞ்ஜின் ஆப்ஷன்:

புதுப்பிக்கப்பட்ட மாடலான ஆடி எஸ்4 மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அதில், 3.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ டார்போசார்ஜட் எஞ்ஜின் 349 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வழங்கும். அதேபோன்று, 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்ஜின் 342 பிஎச்பி பவரையும், 699 என்எம் டார்க்கையும் வழங்கும்.

புதிய தோற்றத்துடன் அப்கிரேட் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஆடி ஏ4 கார் அறிமுகம்!

இந்த புதுப்பிக்கப்பட்ட இரண்டு மாடல்களும் இந்த வருடத்தின் இறுதி அல்லது அடுத்த வருடத்தின் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi Has Revealed A Refreshed & Sharper Looking A4. Read In Tamil.
Story first published: Thursday, May 16, 2019, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X