டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

இந்தியாவில் வாகனங்கள் விற்பனை சரிவடைந்து வரும் நிலையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் விற்பனை அதிகரித்து கொண்டு வருகிறது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கடந்த ஜுன் மாத கடைசியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கிய முதல் கார் இதுதான். அத்துடன் இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி களமிறங்கியுள்ளது.

டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

இந்தியாவில் டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் கூடிய டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 48V மைல்டு ஹைப்ரிட் ஆப்ஷனையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் வழங்கி வருகிறது.

டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

138 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ட்வின் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்களை பெற்றுள்ளது. அதே சமயம் 170 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 2 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் டீசல் இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸை ஸ்டாண்டர்டாக பெற்றுள்ளது.

டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

எம்ஜி ஹெக்டர் காரின் விலை 12.18 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். அட்டகாசமான வசதிகள், சவாலான விலை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களால் எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 28 ஆயிரம் முன்பதிவுகள் குவிந்துள்ளதால், எம்ஜி நிறுவனம் புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

காத்திருப்பு காலம் நீள்வதை தவிர்ப்பதற்காக எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில்தான் எம்ஜி ஹெக்டர் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு தற்போதைய நிலையில் ஒரு மாதத்திற்கு 2 ஆயிரம் கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.

டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

ஆனால் அதற்கு நேர் எதிராக, எம்ஜி நிறுவனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போகும் அளவிற்கு முன்பதிவுகள் குவிந்தன. கூடுதல் முன்பதிவுகளை ஏற்பதற்கு முன்னதாக ஏற்கனவே புக்கிங் செய்து விட்டு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஹெக்டர் கார்களை விரைவாக டெலிவரி செய்ய வேண்டும் என எம்ஜி நிறுவனம் விரும்புகிறது.

டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

இதன் ஒரு பகுதியாக ஹலோல் ஆலையில் ஹெக்டர் கார்களின் உற்பத்தியை 50 சதவீதம் அதிகரிக்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் மாதங்களில் ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யப்படும். இது நடந்து விட்டால், காத்திருப்பு காலம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

எம்ஜி ஹெக்டர் காரின் டெலிவரி முழு வீச்சில் நடைபெற்று வரும் சூழலில், அதன் ஆகஸ்ட் மாத விற்பனை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 2,018 ஹெக்டர் கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது அதற்கு முந்தைய ஜூலை மாதத்தை காட்டிலும் 30 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

கடந்த ஜூலை மாதத்தில் எம்ஜி நிறுவனம் 1,508 ஹெக்டர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி ஹெக்டர் போட்டியிட்டு வருகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை தற்போது கடுமையாக திணறி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

அனைத்து முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையும் அடி மேல் அடி வாங்கி கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் நிலை மிகவும் பரிதாபகரமானதாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் எம்ஜி ஹெக்டர் கார் விற்பனையில் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

எம்ஜி நிறுவனம் அடுத்ததாக இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கும் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த காரின் விலை 20 லட்ச ரூபாய்க்கு நெருக்கமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாப் கியரில் சேல்ஸ்... வாகனங்கள் விற்பனை சரியும் சூழலில் இந்த கார் விற்பனையில் தூள் கிளப்புகிறது...

அத்துடன் வரும் 2020ம் ஆண்டின் இறுதியில் ஹெக்டர் காரின் மேலும் சில வேரியண்ட்களையும் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. அதற்கு முன்னதாக ஹெக்டர் காரின் 7 சீட் வேரியண்ட்டை எம்ஜி நிறுவனம் களமிறக்கவுள்ளது. 7 சீட்டர் வேரியண்ட் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் லான்ச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
August Sales: MG Hector Sells 2,018 Units. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X