"என்ன செய்றதுனே தெரியலிங்க" போலீஸின் அதிரடியால் புலம்பும் ஆட்டோ டிரைவர்: அதிர்சிக்கு மேல் அதிர்ச்சி!

போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் ஆட்டோ ஓட்டுநர் செய்வதறியாமல் சிக்கி தவித்து வருகின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத இந்தியாவை உருவாக்கும் விதமாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, புதிய மோட்டார் வாகன சட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்தது.

இது, விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையைக் காட்டிலும் பத்து மடங்கு அதகிரித்து வசூலிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு, கடந்த 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

மத்திய அரசின் இத்திட்டத்திற்கு சில குறிப்பிட்ட மாநிலங்கள் மட்டும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றன. இதனை, முதல் முதலாக தொடங்கி வைத்த மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. தொடர்ந்து, மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும் இதில் களமிறங்கியுள்ளன.

இதில், பாஜக கட்சியினர் ஆளும் குஜராத்தும் இணைந்திருப்பது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. ஆனால், இந்த மாநிலம் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவதில் கண்டுவரும் சிக்கலின் காரணமாகவே, இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இருப்பினும், உயர்த்தப்பட்ட அபராத தொகைகுறித்த அறிக்கையை தயார் செய்யும்படி, அம்மாநில அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆகையால், குஜராத் மாநிலத்தில் இன்னும் ஒருசில வாரங்கள் அல்லது மாதத்திற்குள்ளாகவே திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துவிடும். இதேபோன்றதொரு நடவடிக்கையைதான் மத்திய பிரதேச மாநில அரசும் மேற்கொண்டுள்ளது.

ஆகையால், இந்த மாநிலத்திலும் விரைவில் புதிதாக உயர்த்தப்பட்ட அபராதத் தொகை விதி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன்னுடைய மாநிலத்தில் இத்திட்டத்தை கட்டாயம் அமல்படுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று, பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள புதிய அபராதத் திட்டம், ஊழலுக்கு வித்திடும் என்ற காரணத்தால் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவத்துள்ளன. இத்துடன் ஏழை, எளிய வாகன ஓட்டிகள் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அம்மாநில அரசுகள் கருத்து தெரிவித்துள்ளன.

டெல்லி மற்றும் தமிழகம் போன்ற பல மாநிலங்கள் புதிய அபராத திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் இன்னும் முழுமையாக இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

அதேசமயம், மற்ற மாநிலங்களில் அறிமுகமாகியுள்ள இத்திட்டம், அமலுக்கு வந்த முதல் நான்கு நாட்களிலேயே, அதாவது செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து 4ம் வரையில் சுமார் 1.41 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், சாதாரண வாகன ஓட்டிகளும் அடக்கம் ஆவர். அந்தவகையில், போக்குவரத்து விதிமீறிலில் ஈடுபட்டதாக கூறி தற்போது ஆட்டோ ஓட்டுநருக்கும் அபராதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் ஒடிசா மாநிலம், ஆக்ரியா விஹார் என்ற பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து போலீஸார் அதி தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், ஆக்ரியா விஹார் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அனைத்து வாகனங்களையும் மடக்கி ஆவணங்களைப் பரிசோனை செய்தனர். அதேபோல, அவ்வழியே வந்த ஆட்டோ ஒன்றையும் அவர்கள் மடக்கி ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், அந்த ஆட்டோ பல முறைகேடுகளுடன் இயக்குவது தெரியவந்தது. முக்கியமாக, ஆட்டோவை இயக்கி வந்த ஹரி பந்து கன்ஹர் என்பவர் மதுபோதையில் இருந்துள்ளார். இதற்காக ரூ. 10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டுது.

மேலும், அந்த ஆட்டோ காற்று/ஒலி ஆகியவற்றை மாசை ஏற்படுத்தியதற்காக ரூ. 10 ஆயிரமும், பெர்மிட் இல்லாமல் இயக்கியதற்கு ரூ. 10 ஆயிரமும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கியதற்காக ரூ. 5 ஆயிரமும், இன்சூரன்ஸ் இல்லாதற்கு ரூ. 2 ஆயிரமும் மற்றும் பொதுவாக விதிமீறலுக்கு ரூ. 500 என ஒட்டுமொத்தமாக ரூ.47,500 அபராதச் செல்லாண் வழங்கப்பட்டது.

இந்த அபராதத்தை ஆட்டோ ஓட்டுநர் உடனடியாக சம்பவ இடத்திலேயே செலுத்தவில்லை. மாறாக, அவரை சந்திரசேகர் பரிசோதனை மையத்தில் கட்டணத்தை செலுத்துமாறு அறிவித்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்டோ உரிமையாளர் கூறியதாவது, "நான் இந்த ஆட்டோவை கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் வாங்கியிருந்தேன். ஆகையால், இன்னும் அதன் முந்தைய உரிமையாளரின் பெயரில் இருந்து என் பெயருக்கு மாற்றவில்லை. ஆட்டோவிற்கு கட்டணமாக ரூ. 26,000 மட்டுமே கொடுத்துள்ளேன். ஆனால், போலீஸார் வழங்கியுள்ள அபராதத் தொகையே இரு மடங்கு அதிமாக உள்ளது" என வேதனை தெரிவித்தார்.

இதற்கு முன்பாகவும், இதேபோன்று சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறியது, அப்போது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் உரிமையாளர் மது போதையில் வந்ததாக கூறப்படுகின்றது. இதற்காக, போலீஸார் புதிய அபராதத் தொகை வழங்கியதுடன், வாகனத்தையும் சிறைபிடித்தனர். இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், போலீஸார் முன்னிலையிலேயே பைக்கிற்கு தீ வைத்தார். இதனால், பைக் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது.

தற்போது விதிக்கப்பட்டும் புதிய அபராத் தொகை, பெரும்பாலும் வாகனத்தின் விலையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் வகையில் இருக்கின்றது. ஆகையால், வாகன பெரும் அச்சத்தில் ஆழ்ந்த வண்ணம் உள்ளனர். மேலும், இனி வாகனத்தையே இயக்கக்கூடாது என்ற அளவிற்கு உச்சகட்ட மன உளைச்சலுக்கு சென்றுவிடுகின்றனர். இதன் எதிரொலியாகவே டெல்லியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

போலீஸாரின் இந்த கெடுபிடியில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, முறையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதாகவும். இல்லையெனில், நமது வாகனத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகரிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தும் சூழலுக்குத் தள்ளப்படுவோம்.

அதேசமயம், அபராதம் கட்டப்படாத வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், வரும் காலங்களில் இதுபோன்ற என்னவெல்லாம் புதிய பிரச்னைகள் நாட்டில் வருமோ என்ற அச்சம் கலந்த சூழலே நிலவுகின்றது.

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் விவகாரத்தில் நீதிமன்றமே களமிறங்கியது

தமிழகத்தை பொறுத்தவரை, புதிய அபராதங்களை வாகன ஓட்டிகள் மீது விதிக்கும் பணிகளை போலீசார் இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை. ஆனால் நீதிமன்றங்கள் அந்த பணியை தொடங்கி விட்டன. சண்முகநாதனுக்கு நீதிமன்றம்தான் கடுமையான அபராதத்தை விதித்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமையன்று (செப்டம்பர் 1) சண்முகநாதன் டூவீலரில் ஜாலியாக வந்து கொண்டிருந்தார்.

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் விவகாரத்தில் நீதிமன்றமே களமிறங்கியது

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சண்முகநாதன் ஹெல்மெட் அணியாமல் ஹாயாக காற்று வாங்கி கொண்டு வந்ததால், போலீசார் அவரை நிறுத்தினர். அவரிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கையில், அவர் குடிபோதையில் வேறு இருப்பது தெரியவந்தது.

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் விவகாரத்தில் நீதிமன்றமே களமிறங்கியது

இது போதாதென்று அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் வேறு இல்லை. எனவே மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு விதிமுறைகளின் கீழ் சண்முகநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அவரது இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்பின் கடந்த செவ்வாய் கிழமையன்று (செப்டம்பர் 3) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் விவகாரத்தில் நீதிமன்றமே களமிறங்கியது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, புதிய விதிமுறைகளின்படி சண்முகநாதனுக்கு அதிரடியாக 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 10 ஆயிரம் ரூபாயும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக 5 ஆயிரம் ரூபாயும், ஹெல்மெட் அணியாமல் டூவீலரை ஓட்டியதற்காக ஆயிரம் ரூபாயும் என அவருக்கு மொத்தமாக 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

குறிப்பு: இந்த செய்திக்கு மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, September 6, 2019, 13:22 [IST]
English summary
Auto Bought For Rs26,000 But New MV Act Gives Fine Rs 47500. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+