'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

இந்திய ஆட்டோ மொபைல்துறை ரண களத்தில் இருக்கும் சூழ்நிலையில், "இந்த பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லை. இதனை தீர்ப்பது சிறிய விஷயம்தான்" என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.

'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

இதற்கு முன்பெப்போதும் இல்லாத அளவிலான பெரும் இழப்பை இந்திய வாகனத்துறை கடந்த சில மாதங்களாக சந்தித்து வருகின்றது. இதன் தாக்கம் நடப்பு 2019ம் ஆண்டு தொடங்கியது முதல் தெரியவந்தாலும், அது கடந்த 2018ம் ஆண்டு இறுதியிலேயே தொடங்கியதாக வாகனத்துறைச் சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், இந்தியா பொருளாதார ரீதியாக மட்டுமின்றி பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றது. குறிப்பாக வேலையிழப்பு விவகாரம் மிகப் பெரிய கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

விற்பனை வீழ்ச்சி மற்றும் மந்த நிலை போன்றவற்றின் காரணமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான நிதியிழப்பைச் சந்தித்து வருகின்றன.

ஆகையால், அதனை ஈடுகட்டும் விதமாக தற்காலிக பணியாளர்களை வெளியேற்றுதல், உற்பத்தி அளவை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவை மேற்கொண்டு வருகின்றன.

'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

அதேசமயம், வாகனங்களைச் சார்ந்து இயங்கும் ஷோ-ரூம்களும் சரிவர விற்பனை இல்லாத காரணத்தால் இழுத்து மூடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதனால், ஏற்கனவே பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

இவ்வாறு, இந்தியாவின் வாகனம் சார்ந்த துறை ரண களத்தில் இருக்க, கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான மாநில அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்திய வாகனத்துறை சந்தித்து வரும் பிரச்னை சாதாரணமான ஒன்று. இதனை எளிதில் சரி செய்துவிட முடியும்" என மிகவும் சாதரணமாக தெரிவித்துள்ளார்.

'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

நேற்றைய (வெள்ளிக்கிழமை) தினம் தானியங்கி உபகரண உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACMA) வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசாங்கம் 370 வது பிரிவை ரத்து செய்ய பாராளுமன்ற அமர்வை நீட்டிக்க முடியும் என்றால், மந்தநிலையை எதிர்கொண்டு வரும் வாகனத் தொழில்துறையின் பிரச்சினையைத் தீர்ப்பது ஒரு "சிறிய" விஷயம் என்று கூறினார்.

'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

மேலும் பேசிய அவர், "முன்னதாக நடைபெற்ற மக்களவை கூட்டத்தில், பிரிவு 370க்கான விவாதம் செய்யப்படவில்லை. ஆகையால், இதுகுறித்து விவாதிக்க அமர்வு நீட்டிக்கப்படுகின்றதா என நாடாளுமன்றத்தின் எம்பிக்கள் சிலர் என்னிடம் கேட்டுள்ளனர். அதேசமயம், பல எம்பிக்களுக்கு நாடாளுமன்றம் நீட்டிக்கப்படுவதில் விருப்பமில்லை" என தெரிவித்தார்.

'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

தொடர்ந்து, "அமர்வை நீட்டிப்பதன்மூலம், பிரிவு 370வது போன்ற பயனற்ற விஷயங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசால் நீக்க முடியும். இது உங்களின் பிரச்னையை தீர்க்க வழி வகை செய்யும். அதேசமயம், உங்கள் பிரச்னை இயற்கையில் சிறியவை அவை விரைவில் தீர்க்கப்படும். இதற்காக கவலைப்பட வேண்டாம்" என வாகனத்துறை சார்ந்தவர்களுக்கு அர்ஜுன் மேக்வால் ஆறுதல் வழங்கினார்.

'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

இந்திய ஆட்டோமொபைல் துறை ஏறக்குறைய ஒரு வருடமாக மந்த நிலை என்னும் விற்பனைச் சரிவில் சிக்கித் தவித்து வருகின்றது. இதிலிருந்து தீர்வு காண்பதற்காக வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் ஜிஎஸ்டி குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு மத்திய அரசு 28 சதவீத ஜிஎஸ்டி வரியை விதித்து வருகின்றது. இதனை 18 சதவீதமாக குறைக்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

அதேசமயம், வாகனத்துறை இத்தகைய மிக மோசமான நிலையைச் சந்திப்பதற்கு ஜிஎஸ்டி வரி மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியது. இது முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தாலும், இத்துடன் எரிபொருள் விலையுயர்வு, பணமதிப்பிழப்பு, பதிவு கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் இருக்கின்றன.

'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

மேலும், சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் விளைவிக்காத மின் வாகனங்கலை ஊக்குவிக்கும் முயற்சிகளும் அண்மைக் காலங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் மின் வாகனங்களை வாங்கலாமா அல்லது எரிபொருள் வாகனத்தை வாங்கலாமா என்ற மிகப்பெரிய குழப்ப நிலையில் உள்ளனர்.

'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

அதேசமயம், வாகன விற்பனையின் மந்த நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அடுத்த ஆண்டு அமலுக்குள்ளாக இருக்கும் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதி இருக்கின்றது. இது 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து அமலுக்குள்ளாக இருக்கின்றது.

கடந்த காலத்தில், இதேபோன்று பிஎஸ்-3ல் இருந்து பிஎஸ்-4க்கு மாற்றப்படும்போது, வாகனங்கள் பல மிக மலிவான விலையில் விற்பனைக்கு அளிக்கப்பட்டன.

'ஆட்டோ துறை பிரச்னை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க' - அசால்டாக கூறிய மோடி கட்சிக்காரர்... யார் தெரியுமா?

அப்போது, அதிகளவிலான வாகனங்கள் விற்று தீர்க்கப்பட்டன. ஆகையால், இந்த மந்தநிலைக்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. எனவே, இந்த மலைக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் தீர்வு எட்டப்படும் என வாகனத்துறை வல்லுநர்கள் சிலர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
English summary
Auto Sector Problem 'Minor' Says, Arjun Ram Meghwal. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X