இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், மிக முக்கியமான முடிவுகளை மத்திய அரசு தற்போது எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

இந்தியாவில் பல லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் ஆட்டோமொபைல் துறை தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கார் மற்றும் டூவீலர் உள்பட அனைத்து விதமான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவடைந்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

இதனால் வாகன நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் நஷ்டத்தை தவிர்ப்பதற்காக ஊழியர்களை வேலையில் இருந்தும் அவை நீக்கி கொண்டுள்ளன. வாகன விற்பனை சிறப்பாக இல்லாத காரணத்தால் ஏராளமான டீலர்ஷிப்களும் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தத்தில் ஆட்டோமொபைல் துறை கதிகலங்கி போயுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து எடுத்து கொண்டால், ஆட்டோமொபைல் துறையில் தற்போது வரை சுமார் 3.50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. இது போன்று ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி கொண்டே உள்ளன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவமே வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை சரிவடைய முக்கியமான காரணம் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி தொடர்பாக விவாதிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியபோது கூட அவர்கள் இதனை தெரிவித்தனர். உண்மைதான். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

இதற்காக மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது இதற்கு ஓர் உதாரணம். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க இதுபோல் பல்வேறு முயற்சிகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

அதே சமயம் பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான மத்திய அரசின் பிடி நாளுக்கு நாள் இறுகி கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணங்களை பல மடங்கு உயர்த்தும் வரைவு அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

அதனை இதற்கு ஓர் உதாரணமாக கூறலாம். தற்போதைய நிலையில் ஐசி இன்ஜின் மூலம் ( IC - Internal Combustion Engine) இயங்கும் புதிய கார்களுக்கான பதிவு கட்டணம் 600 ரூபாயாக மட்டுமே உள்ளது. ஆனால் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தயார் செய்துள்ள வரைவு அறிக்கையில் இதனை 5,000 ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திருப்பும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பதிவு கட்டணங்களை இவ்வளவு கடுமையாக உயர்த்தினால், பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கும் ஆர்வம் மக்களுக்கு குறைந்து விடும். எனவேதான் இவ்வாறான ஒரு வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

இதுதவிர வரும் 2023ம் ஆண்டிற்கு பிறகு, ஐசி இன்ஜின் மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 150 சிசி வரையிலான இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிப்பது தொடர்பாகவும் மத்திய அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது போன்ற காரணங்களால் பொதுமக்கள் தற்போது கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு கொடுத்து வரும் முக்கியத்துவம் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என அத்துறையை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் நாளுக்கு நாள் நிலைமை சிக்கலாகி கொண்டே செல்வதால், மத்திய அரசு தற்போது சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

இதன்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களுக்கு அவ்வளவு வேகமாக இருக்காது என கூறப்படுகிறது. அதாவது ஆட்டோமொபைல் துறை திணறி வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு அடுத்த சில மாதங்களுக்கு மிகவும் மெதுவாகவே செய்யும் என தெரிகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

எனவே பெரிய அளவில் தீவிரம் காட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதேபோல் மேலே குறிப்பிட்டபடி வரும் 2023ம் ஆண்டுக்கு பிறகு, ஐசி இன்ஜின் மூலமாக இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 150 சிசி வரையிலான டூவீலர்கள் ஆகியவற்றின் விற்பனைக்கு தடை விதிப்பது தொடர்பான பணிகளையும் மத்திய அரசு அவ்வளவு தீவிரமாக செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

அதாவது எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கை மத்திய அரசு படிப்படியாக அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த சூழலில், பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் நோக்கத்துடன் இயங்கி வரும் அரசு துறைகளுக்கு தற்போது உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

இதில், பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனையை குறைக்கும் முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம் எனவும், அவற்றை தற்போதைக்கு நிறுத்தி வைக்கும்படியும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணங்களை உயர்த்தும் திட்டமும் இதில் அடக்கம். எனவே பதிவு கட்டணங்கள் தற்போதைக்கு உயர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு

அனேகமாக அந்த திட்டத்தை மத்திய அரசு தற்போதைக்கு நிறுத்தி வைத்து, மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணங்களை இவ்வளவு கடுமையாக உயர்த்தினால், ஆட்டோமொபைல் துறை இன்னும் சீர்குலைந்து போய் விடும் என அத்துறை சார்ந்த வல்லுனர்கள் முன்பு தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2019, 14:00 [IST]
English summary
Automobile Industry Slowdown: Central Government To Go Slow On Electric Vehicle Push. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+