கூடுதலாக 22 மாநிலங்களில் களமிறங்குகிறது பஜாஜ் க்யூட் 'மைக்ரோ கார்'...!

பஜாஜ் நிறுவனம் தனது விலை குறைவான க்யூட் மைக்ரோ காரை கூடுதலாக 22 மாநிலங்களில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது.

கூடுதலாக 22 மாநிலங்களில் களமிறங்குகிறது பஜாஜ் க்யூட் 'மைக்ரோ கார்'...!

நாட்டின் மிகப் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களைத் தயாரித்து வருகின்றது. அந்த வகையில், இந்த நிறுவனம் தயாரித்த பல்சர், பிளாட்டினா, டிஸ்கவர் மற்றும் வி உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் இந்திய வாகன ஓட்டிகளிடையே மிகவும் பிரபலமானவை.

கூடுதலாக 22 மாநிலங்களில் களமிறங்குகிறது பஜாஜ் க்யூட் 'மைக்ரோ கார்'...!

இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் க்யூட் என்ற கார் வடிவிலான குவாட்ரி சைக்கிள் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. குவாட்ரி சைக்கிள் என்பது, குறைவான தூரங்களுக்கு, சாதரண வேகத்தில் செல்ல பயன்படுத்தக்கூடிய வாகனம். இது ஆட்டோக்களுக்கு மாற்றாக ஐரோப்பா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கூடுதலாக 22 மாநிலங்களில் களமிறங்குகிறது பஜாஜ் க்யூட் 'மைக்ரோ கார்'...!

ஹேட்ச்பேக் கார்களுக்கு இருக்கும் விதியைப் போலவே குவாட்ரி சைக்கிள்களுக்கும் சில விதிகள் உண்டு. அதன்படி, இந்த குவாட்ரி சைக்கிள்கள் 450 கிலோவைத் தாண்டாமல் இருக்க வேண்டும். மணிக்கு 70 கிமீ வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது. அதேபோன்று, 300 சிசி-க்குள் தான் இதன் எஞ்ஜின் சக்தி இருக்க வேண்டும் என்ற பல விதிகள் உள்ளன.

கூடுதலாக 22 மாநிலங்களில் களமிறங்குகிறது பஜாஜ் க்யூட் 'மைக்ரோ கார்'...!

இந்த விதிகளின் அடிப்படையில் தான் இந்த குவாட்ரி சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த வாகனம் கார் இல்லை, கார் மாதிரி என்கிறார்கள் வாகனத்துறை வல்லுநர்கள் சிலர். அதேபோன்று, இந்த வாகனத்தை மைக்ரோ கார் என்றும் சிலர் அழைக்கின்றனர். கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில்தான் இந்த மைக்ரோ கார் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

கூடுதலாக 22 மாநிலங்களில் களமிறங்குகிறது பஜாஜ் க்யூட் 'மைக்ரோ கார்'...!

பஜாஜ் நிறுவனத்திற்கான ஸ்டாலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த கார், அங்கு வந்த பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஆனால், அந்த காரின் பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த ஆர்இ60 தான் சற்று முனுமுனுப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், ஆர்இ என்பது ரியர் என்ஜின் என்பதற்கான அர்த்தமாகும்.

கூடுதலாக 22 மாநிலங்களில் களமிறங்குகிறது பஜாஜ் க்யூட் 'மைக்ரோ கார்'...!

ஆட்டோவில் மட்டும் தான் இதுபோன்று பின்பகுதியில் எஞ்ஜின்கள் பொருத்தப்படுவது வழக்கம். ஆகையால், இந்த பெயர் பலகை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பஜாஜ் நிறுவனத்தின் மீது பல்வேறு விமர்சனங்களும், கேள்விகளும் எழும்பின. ஆனாலும், இதைப் பற்றி சற்றும் கவலைப்படாத அந்த நிறுவனம், அந்த மைக்ரோ காரை க்யூட் என்ற பெயரில் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

கூடுதலாக 22 மாநிலங்களில் களமிறங்குகிறது பஜாஜ் க்யூட் 'மைக்ரோ கார்'...!

இதைத்தொடர்ந்து, மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடம் விற்பனைக்கான ஒப்புதலைப் பெற பஜாஜ் காத்திருந்தது. இந்த நிலையில்தான், கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கான ஒப்புதல் கிடைத்தது. இதையடுத்து, இந்த க்யூட் குவாட்ரி சைக்கிள் துருக்கி, இந்தோனேசிய உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கூடுதலாக 22 மாநிலங்களில் களமிறங்குகிறது பஜாஜ் க்யூட் 'மைக்ரோ கார்'...!

பஜாஜின் இந்த க்யூட் குவாட்ரி சைக்கிளில், 216 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு-கூல்ட் டிடிஎஸ்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 13.1 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 18.9 என்எம் டார்க்கை 4,000 ஆற்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இதேபோன்று, இந்த குவாட்ரி சைக்கிள் சிஎன்ஜி வேரியண்டிலும் கிடைக்கிறது. இது, 10.9 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 16.1 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்-இல் வழங்கும். இதன் எஞ்ஜின்கள் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஸனில் இயங்கும்.

கூடுதலாக 22 மாநிலங்களில் களமிறங்குகிறது பஜாஜ் க்யூட் 'மைக்ரோ கார்'...!

இந்நிலையில், குவாட்ரி சைக்கிளின் திட்டத்தைப் பற்றி, பஜாஜ் ஆட்டோ லிமிடெட் பொது மேலாளர் பிரசாந்த் ஆர் அஹிர் சமீபத்தில் கூறியதாவது, "நாம் பஜாஜ் க்யூட்டை ஏற்கனவே கேரளா, குஜராத் ராஜஸ்தான், புவனேஸ்வர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டோம். மேலும் 22 மாநிலங்களில் க்யூட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சியில் பஜாஜ் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு, இந்த ஏப்ரல் மாதத்தின் இறுதிக்குள் இது வெற்றிகரமாக செய்யப்படும்" என்றார்.

கூடுதலாக 22 மாநிலங்களில் களமிறங்குகிறது பஜாஜ் க்யூட் 'மைக்ரோ கார்'...!

பஜாஜ் க்யூட் பெட்ரோல் வேரியண்டை எக்ஸ்-ஷோரூமில் ரூ. 2.63 லட்சம் என்ற விலையிலும், சிஎன்ஜி வேரியண்டை ரூ. 2.83 என்ற எக்ஸ்-ஷோரூமில் விலையிலும் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. இந்த குவாட்ரி சைக்கிள் வெள்ளை, மஞ்சள், பச்சை, சிவப்பு மற்றும் நீளம் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2019, 17:15 [IST]
English summary
Bajaj Qute Launching in 22 States By April End-Quteness Overloaded. Read In Tamil.
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+