வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியுள்ளது.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் முன்பு இருந்தை காட்டிலும் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே அளவிற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநில அரசுகள், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மிக கடுமையாக உயர்த்தியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே அங்கெல்லாம் இன்னும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படவில்லை.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

இந்தியாவின் எஞ்சிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்து விட்டது. அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பல்வேறு விதிமீறல்களுக்கு ஒன்று சேர்த்து ஒருவருக்கே 30 ஆயிரம், 40 ஆயிரம் என பல்லாயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

இது தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஒரு சில இடங்களில் அபராத தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அபராத தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மோட்டார்சைக்கிளை தீ வைத்து கொளுத்திய சம்பவங்களும் கூட நடைபெற்றுள்ளன.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

அத்துடன் வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து போலீசார் அபராதமாக கலெக்ஸன் செய்த தொகை தொடர்பான தகவல்களும் வரிசையாக வெளியாகி வருகின்றன. இதன்படி ஹரியானா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்களில், புதிய சட்டம் அமலுக்கு வந்த முதல் 4 நாட்களில் மட்டும் (செப்டம்பர் 1 முதல் 4 வரை), 1.41 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

இந்த சூழலில் புதிய சட்டம் அமலுக்கு வந்த முதல் 5 நாட்களில், பெங்களூர் நகரில் வசூலான அபராத தொகை குறித்த தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன. இதன்படி செப்டம்பர் 1 முதல் 5 வரை, பெங்களூர் நகரில் மொத்தம் 6,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து 72.50 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

இந்த தகவல்களை பெங்களூர் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர். முதல் 5 நாட்களில், பெங்களூர் நகரில் மட்டும் இவ்வளவு பெரிய தொகை வசூல் செய்யப்பட்டிருப்பது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இந்தியா முழுவதும் கணக்கிட்டால், மிகப்பெரிய தொகை அபராதமாக வசூல் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

பெங்களூரை பொறுத்தவரை, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்களிடம் இருந்துதான் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 4,613 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ரைடர் ஹெல்மெட் அணியாமல் இருந்தது, பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாமல் இருந்தது, ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற ஹெல்மெட் அணியாதது ஆகியவை அடங்கும்.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

ஹெல்மெட் தொடர்பான வழக்குகளுக்காக மட்டும் 46 லட்ச ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்திய குற்றத்திற்காக அதிக அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதற்காக 695 சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 13 லட்ச ரூபாய் அபராதமாக வசூலாகியுள்ளது.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

இதுதவிர சீட் பெல்ட் அணியாத குற்றத்திற்காக 708 சலான்கள் வழங்கப்பட்டு, 7 லட்ச ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒன்வே-யில் பயணம் செய்த வாகன ஓட்டிகளிடம் இருந்து 2 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாத வாகன ஓட்டிகள், 1.4 லட்ச ரூபாயை அபராதமாக செலுத்தியுள்ளனர்.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

ஆனால் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பலன் கிடைத்திருப்பது போல்தான் தெரிகிறது. ஏனெனில் புதிய சட்டம் அமலுக்கு வந்த முதல் 2 நாட்களில் பெங்களூர் போலீசார் நாள் ஒன்று சராசரியாக 1,488 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். ஆனால் அடுத்த 3 நாட்களில் இந்த எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,095 வழக்குகளாக குறைந்துள்ளது.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

ஒருவேளை அதிகப்படியான அபராத தொகைக்கு பயந்து கொண்டு, வாகன ஓட்டிகள் விதிகளை பின்பற்ற தொடங்கியதால், பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என தெரிகிறது. வருங்காலங்களில் இன்னும் அதிகப்படியான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

தற்போது ஆர்டிஓ அலுவலகங்கள், எமிஷன் டெஸ்டிங் சென்டர்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு வாகன ஓட்டிகள் படையெடுக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் வாகனத்தின் ஆவணங்கள் அனைத்தையும் சரியாக வைத்து கொள்வதில் வாகன உரிமையாளர்கள் அதிக கவனம் செலுத்துவது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

அத்துடன் புதிய டிரைவிங் லைசென்ஸ் கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமல்லாது லைசென்ஸை புதுப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

ஆனால் அபராதம் கடுமையாக உள்ளதால், அதனை கொஞ்சம் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. அத்துடன் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளதை காரணம் காட்டி, வாகன ஓட்டிகளிடம் போலீசார் வசூல் வேட்டையில் இறங்கி விட்டதாகவும் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.

வாகன ஓட்டிகளிடம் சூப்பர் கலெக்ஸன்! மோடி அரசின் திட்டம் வேலை செய்ய தொடங்கியது!! என்னவென்று தெரியுமா?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிர முயற்சியால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் எப்படிப்பட்டது? அபராத தொகைகளை இந்த அளவிற்கு மிக கடுமையாக உயர்த்தியிருப்பது சரியா? என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Source:TOI

Most Read Articles
English summary
Bangalore Traffic Police Books 6,800 Cases & Collects Rs 72.5 Lakh in Fines Within Five Days. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X