பவ்ஜுன் 530 (எம்ஜி ஹெக்டர்) எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை படங்கள்!
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், புதுப்பொலிவுடன் வர இருக்கும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதுதொடர்பான, முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சீனாவில் விற்பனை செய்யப்படும் பவ்ஜுன் 530 எஸ்யூவிதான் இந்தியாவில் எம்ஜி பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு ஹெக்டர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பவ்ஜுன் 530 எஸ்யூவி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அங்கு 2020 மாடலாக புதுப்பொலிவுடன் வர இருக்கும் பவ்ஜுன் 530 எஸ்யூவியின் ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. இதே மாடல்தான் இந்தியாவில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்படும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிப்பதற்கு டிசைன், தொழில்நுட்ப அம்சங்கள் தவிர்த்து, சிறப்பான இடவசதி. இந்த நிலையில், ஃபேஸ்லிஃப்ட் மாடலானது 40 மிமீ கூடுதல் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், 10 மிமீ உயரம் குறைக்கப்பட்டுள்ளது.

முகப்பில் புதிய க்ரில் அமைப்பு, புதிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகளுடன் முகப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எந்த பெரிய மாற்றங்களும் இல்லை. டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது சீனாவில் பயன்படுத்தப்படும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. அங்கு 6 ஸ்பீட மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் அல்லது 2021ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மாடலை எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரூ.12.18 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. விலை குறைவான அதிக தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்திருப்பதால், இந்த காருக்கு அமோக முன்பதிவு கிடைத்துள்ளது.

உற்பத்தியைவிட தேவை அதிகமாக இருப்பதால், முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கான முன்பதிவு முடிந்துபோய்விட்டது. உற்பத்தியை படிப்படியாக உயர்த்துவதற்கு எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் முன்பதிவு மீண்டும் துவங்கப்படும் வாய்ப்புள்ளது. புத்தாண்டில் கார் வாங்குவோர் இந்த எஸ்யூவியை முன்பதிவு செய்யும் வாய்ப்பை பெறுவர்.
Source: IAB


Click it and Unblock the Notifications








