ரூ. 4 கோடி மதிப்புள்ள பென்ட்லீ காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்: எதற்கு தெரியுமா..? -வீடியோ..!

இளைஞர் ஒருவர் ரூ.4 கோடி மதிப்புள்ள பென்ட்லீ நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி ப்ளையிங் ஸ்பர் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். எதற்காக அந்த இளைஞர் அவ்வாறு கொளுத்தினார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 4 கோடி மதிப்புள்ள பென்ட்லீ காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்: எதற்கு தெரியுமா..? -வீடியோ..!

இளைஞர் ஒருவர் ரூ. 3.41 கோடி மதிப்பிலான பென்ட்லீ நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி ப்ளையிங் ஸ்பர் காரை பெட்ரோல் ஊற்றி எரிsக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோவை டர்போ எக்ஸ்ட்ரீம் என்ற யுடியூப் தளம் பதிவிட்டுள்ளது.

ரூ. 4 கோடி மதிப்புள்ள பென்ட்லீ காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்: எதற்கு தெரியுமா..? -வீடியோ..!

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பென்ட்லீ நிறுவனம், அதிநவீன சொகுசு வசதிகளைக் கொண்ட லக்சூரி செடான் ரக கான்டினென்டல் ஜிடி ப்ளையிங் ஸ்பர் காரை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விற்பனைச் செய்து வருகிறது. இந்த கார் வி8 மற்றும் டபிள்யூ12 ஆகிய இருவேறு எஞ்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில், வி8 வேரியண்டின் விலை புதுடில்லி எக்ஸ்-ஷோரூமில் ரூ. 3.41 கோடி என்றும், டபிள்யூ12 எஞ்ஜின் வேரியண்ட் ரூ. 3.93 கோடி என்றும் விற்பனையாகி வருகிறது.

ரூ. 4 கோடி மதிப்புள்ள பென்ட்லீ காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்: எதற்கு தெரியுமா..? -வீடியோ..!

இந்நிலையில், இத்தகைய விலையுயர்ந்த காரை இளைஞர் ஒருவர், பெட்ரோல் ஊற்றி எரிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் ஏன் அவ்வாறு செய்கிறார் என, பலருக்கு கேள்வி எழும்பலாம். இதனை விளக்கவே இந்த பதிவு...

ரூ. 4 கோடி மதிப்புள்ள பென்ட்லீ காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்: எதற்கு தெரியுமா..? -வீடியோ..!

இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் வாகன உரிமையாளர்கள், வாகனம் ஸ்கிராட்ச் அடைவது, வாகனத்தின் வண்ணம் வெளுத்து போவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். அவ்வாறு, ஸ்கிராட்ச் மற்றும் வண்ணம் வெளுத்துப்போவதால் வாகனத்தின் மதிப்பு குறைவதுடன், பொலிவு இழந்து விடுகிறது.

ரூ. 4 கோடி மதிப்புள்ள பென்ட்லீ காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்: எதற்கு தெரியுமா..? -வீடியோ..!

மேலும், இதனைச் சீர் செய்வது என்பது பெரியளவிலான பொருட்செலவை ஏற்படுத்துகிறது. அதிலும், பென்ட்லீ, ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார்களுக்கு வண்ணம் கொடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதேபோன்று, பெருமளவிலான செலவீணத்தையும் அது ஏற்படுத்தும்.

ரூ. 4 கோடி மதிப்புள்ள பென்ட்லீ காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்: எதற்கு தெரியுமா..? -வீடியோ..!

இவற்றைத் தவிர்க்கும் விதமாக சந்தையில் சில தீர்வுகள் தற்போது கிடைக்கின்றன. அவை காரின் பொலிவு மற்றும் வண்ணத்தை, தூசு மற்றும் சிராய்ப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

ரூ. 4 கோடி மதிப்புள்ள பென்ட்லீ காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்: எதற்கு தெரியுமா..? -வீடியோ..!

அந்தவகையில், பிபிஎஃப் எனப்படும் ஃபில்ம் விராப்பர் என்பதனை காரின் மேற்புறத்தில் ஒட்டுவதன் மூலம் பல்வேறு பாதிப்பில் இருந்து காரை காக்க முடிகிறது. அவ்வாறு, வேக்ஸ் மற்றும் செராமிக் என்னும் பூச்சு மூலம் விலையுயர்ந்த காரினை, அதன் உரிமையாளர்கள் காத்து வருகின்றனர்.

இதனை நிரூபிக்கும் விதமாகத் தான் இந்த வீடியோவில், விலையுயர்ந்த பென்ட்லீ கார் மீது பெட்ரோல் ஊற்றி அந்த இளைஞர் எரிக்கிறார். அவ்வாறு, கார் மீது பெட்ரோலை ஊற்றிய அவர், லைட்டர் மூலம் பற்ற வைக்கிறார். பற்றி எரிந்த அந்த தீ சிறிது நேரத்தில் அணைந்துவிட, தீ பற்றிய இடத்தை ஊழியர் ஒருவர் தண்ணீர் தெளித்து துடைக்கிறார். ஆனால், தீ பற்றிய இடத்தில், சிறு துளி கூட பாதிப்பில்லாமல் தப்பிக்கிறது. இவ்வாறு, வாக்ஸ் குறித்த பயன்பாட்டை விளக்கவே இந்த வீடியோவை அவர் காட்சிப்படுத்தி, பதிவிட்டுள்ளார்.

ரூ. 4 கோடி மதிப்புள்ள பென்ட்லீ காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்: எதற்கு தெரியுமா..? -வீடியோ..!

இந்த வீடியோவில் வரும் பென்ட்லீ கார், 6.0 லிட்டர் திறன் கொண்ட டபுள்யூ12 எஞ்சின் வேரியண்டாகும். இது 626 பிஎச்பி பவர் மற்றும் 900 டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும், மணிக்கு 333 கி.மீ பறக்கும். இந்த காரில், பென்ட்லீ நிறுவனம் டியுவல் கிளட்ச், 8-ஸ்பீடு கியர்பாக்ஸை பொருத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2019, 13:23 [IST]
English summary
4 Crore Rupee Bentley Set On Fire, Here Why - Video. Read In Tamil.
மேலும்... #பென்ட்லீ #bentley
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+