தானாக நடு ரோட்டில் நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ.. சொகுசு வசதிக்கு ஆசைப்பட்ட செல்வந்தர்கள் அவதி!

டெஸ்ட் டிரைவ் எடுத்துச் சென்ற விலையுயர்ந்த சொகுசு கார் பிரேக் டவுண் ஆகிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தானாக நடு ரோட்டில் நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ... சொகுசு வசதிக்கு ஆசைப்பட்ட செல்வந்தர்கள் கடும் அவதி...!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லக்சூரி கார் தயாரிப்பு நிறுவனம் பென்ட்லீ. இந்நிறுவனம், அதன் புத்தம் புதிய மூன்றாம் தலைமுறை பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி மாடல் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த கார், செல்வம் கொழித்த பணக்கார தொழிலதிபர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற மாடலாக இருக்கின்றது. ஆகையால், இந்த காருக்கென ஓர் தனி ரசிகர்கள் பட்டாளம் இந்தியாவில் உள்ளது.

தானாக நடு ரோட்டில் நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ... சொகுசு வசதிக்கு ஆசைப்பட்ட செல்வந்தர்கள் கடும் அவதி...!

என்னதான் கணிசமான வரவேற்பு இருந்தாலும், இந்த கார் இந்தியாவில் தயார் செய்யப்படுவதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆகையால், இந்த கார் முழுக்க முழுக்க மேலை நாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதன்காரணமாகவே, இந்த காரின் விலை மிக மிக அதிகமாக காணப்படுகின்றது.

தானாக நடு ரோட்டில் நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ... சொகுசு வசதிக்கு ஆசைப்பட்ட செல்வந்தர்கள் கடும் அவதி...!

இந்நிலையில், புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரை வாங்குவதற்காக ஓர் செல்வந்ததாரர், டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார். அப்போது, அனைத்து கார்களையும் சீறிப் பாய்ந்து கடந்துச் சென்ற, அந்த கார் திடீரென நடு ரோட்டில் நின்றுள்ளது.

தானாக நடு ரோட்டில் நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ... சொகுசு வசதிக்கு ஆசைப்பட்ட செல்வந்தர்கள் கடும் அவதி...!

அதை இயக்கிவந்த அந்த இளைஞர்கள் பல முறை முயற்சி செய்தும் கார் ஆனாகவில்லை. மேலும், சர்வீஸ் நபர் முயற்சி செய்தும் பலனில்லை. இந்த கார், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத வகையில், நடு சாலையில் நின்றதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அது பல மணி நேரத்திற்கு நீடித்தது.

இதனால், காரை இயக்கிச் சென்ற இளைஞர்கள் பெரும் அவதிக்குள்ளாகினார்கள். அவர்கள் மட்டுமின்றி அவ்வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

தானாக நடு ரோட்டில் நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ... சொகுசு வசதிக்கு ஆசைப்பட்ட செல்வந்தர்கள் கடும் அவதி...!

நடு ரோட்டில் காலை வாரிய பென்ட்லீ நிறுவனத்தின் இந்த கார் இந்தியாவில் ரூ. 4.5 கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த காரின் அதிகபட்ச திறனை பரிசோதிக்கும் விதமாகவே, இளைஞர்கள் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளனர்.

ஆனால், பாதி வழியிலேயே ஏற்பட்ட சிறு கோளாறின் காரணமாக மேற்கொண்டு முன்னேறி செல்ல முடியாமல் சிக்கி தவித்தது.

தானாக நடு ரோட்டில் நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ... சொகுசு வசதிக்கு ஆசைப்பட்ட செல்வந்தர்கள் கடும் அவதி...!

இதையடுத்து, இழுவை வாகனம் கொண்டுவரப்பட்டு பென்ட்லீ கார் அங்கிருந்து அகற்றப்பட்டது. என்ன கோளாறினால் இந்த கார் திடீரென நின்றுவிட்டது என்பது இதுவரை தெரியிவில்லை.

இருப்பினும், இந்த காரின் எரிபொருள் குழாய் அல்லது வண்டியை ஆன் செய்யும் எந்திரம் ஏதேனும் ஒன்றில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக நின்றிருக்கலாம் என கூறப்படுகின்து.

தானாக நடு ரோட்டில் நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ... சொகுசு வசதிக்கு ஆசைப்பட்ட செல்வந்தர்கள் கடும் அவதி...!

ஒரு வேளை எரிபொருளால் காரணத்தினால் இந்த கார் நின்றிருந்தால், அது தரமற்ற பெட்ரோலை பயன்படுத்தியதால் இவ்வாறாகியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

ஏனென்றால், டபிள்யூ 12 எஞ்ஜினைக் கொண்ட கார்கள் தரமற்ற எரிபொருளில் இயங்காது. தூய்மையான எரிபொருள்களில் மட்டுமே இயங்கும்.

தானாக நடு ரோட்டில் நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ... சொகுசு வசதிக்கு ஆசைப்பட்ட செல்வந்தர்கள் கடும் அவதி...!

ஆனால், இந்த காரில் உறுதியாக தரமற்ற பெட்ரோல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என நாங்கள் கூறவில்லை. இதுகுறித்த தகவலை பென்ட்லீ சர்வீஸ் சென்டர் பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தானாக நடு ரோட்டில் நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ... சொகுசு வசதிக்கு ஆசைப்பட்ட செல்வந்தர்கள் கடும் அவதி...!

தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்து கான்டினென்டல் ஜிடிகார்களும் லேசான மற்றும் அதிக சக்தி வாய்ந்தவையாக தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கார்களில் 6.0 லிட்டர் டபிள்யூ 12 ட்வின் டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

தானாக நடு ரோட்டில் நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ... சொகுசு வசதிக்கு ஆசைப்பட்ட செல்வந்தர்கள் கடும் அவதி...!

இது அதிகபட்சமாக 635 பிஎஸ் பவர் மற்றும் 900 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த திறனானது மணிக்கு 100 என்ற கிமீ வேகத்தை 3.7 செகண்டுகளிலேயே கடக்க உதவும். தொடர்ந்து அதன் அனைத்து மாடல்களிலும் 8-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கிடைக்கின்றது.

தானாக நடு ரோட்டில் நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ... சொகுசு வசதிக்கு ஆசைப்பட்ட செல்வந்தர்கள் கடும் அவதி...!

இந்த உச்சபட்சமாக 333 கிமீ என்ற வேகத்தில் செல்லக்கூடியது. இந்த காரில் 48வோல்ட் திறன் கொண்ட எலெக்ட்ரிக்கல் டைனமிக் ரைட் சிஸ்டம் அடாப்டிவ் சேஸிஸ் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bentley Continental GT Breaks Down During Test Drive. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X