மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

டாடா நெக்ஸான் கார் கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றி மீண்டும் நம் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது.

அதிசய கார்... கோர விபத்தில் இருந்து மீண்டும் உரிமையாளரை காப்பாற்றிய டாடா நெக்ஸான்...

இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம் சிறப்பான கட்டுமான தரத்துடன் கூடிய பாதுகாப்பான கார்களை தயாரித்து வருகிறது. இதற்கு நெக்ஸான் காரை ஒரு உதாரணமாக சொல்லலாம். கார் க்ராஷ் டெஸ்ட்டிங் ஏஜென்சியான குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் இந்திய கார் டாடா நெக்ஸான்தான்.

அதிசய கார்... கோர விபத்தில் இருந்து மீண்டும் உரிமையாளரை காப்பாற்றிய டாடா நெக்ஸான்...

தற்போது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் உடன் இருக்கும் ஒரே ஒரு இந்திய காரும் நெக்ஸான்தான். குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றதன் மூலம் டாடா நெக்ஸான் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது என்று சொன்னால் மிகையல்ல. டாடா நெக்ஸான் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.

அதிசய கார்... கோர விபத்தில் இருந்து மீண்டும் உரிமையாளரை காப்பாற்றிய டாடா நெக்ஸான்...

டாடா நெக்ஸான் உரிமையாளர்கள் பலர் அதன் சிறப்பான கட்டுமான தரத்தையும், பாதுகாப்பு வசதிகளையும் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். ஏனெனில் சாலை விபத்தில் இருந்து பயணிகளின் உயிரை டாடா நெக்ஸான் பல முறை காப்பாற்றியுள்ளது. இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு சாலை விபத்து தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

அதிசய கார்... கோர விபத்தில் இருந்து மீண்டும் உரிமையாளரை காப்பாற்றிய டாடா நெக்ஸான்...

ஆனால் இம்முறையும் டாடா நெக்ஸான் கார் அதன் உரிமையாளரை பத்திரமாக காப்பாற்றி விட்டது. தில்பிரீத் சிங் என்பவர்தான் அந்த அதிர்ஷ்டசாலி. இவரிடம் டாடா நெக்ஸான் கார் ஒன்று உள்ளது. இவர் சமீபத்தில் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தனது டாடா நெக்ஸான் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அது நள்ளிரவு சமயம்.

அதிசய கார்... கோர விபத்தில் இருந்து மீண்டும் உரிமையாளரை காப்பாற்றிய டாடா நெக்ஸான்...

அப்போது மிகவும் குறுகலான சாலை ஒன்றில் அவரது டாடா நெக்ஸான் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தில்பிரீத் சிங்கிற்கு எதிர் திசையில் மற்றொரு வாகனம் வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே குறிப்பிட்டதை போல் அது மிகவும் குறுகலான சாலை. ஆனால் எதிர்திசையில் வந்த வாகனத்தின் டிரைவர் வேகத்தை குறைக்கவில்லை. மேலும் அவருக்கு வழிவிடவும் இல்லை.

அதிசய கார்... கோர விபத்தில் இருந்து மீண்டும் உரிமையாளரை காப்பாற்றிய டாடா நெக்ஸான்...

எனவே அந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதாமல் இருப்பதற்காக தில்பிரீத் சிங் தனது டாடா நெக்ஸான் காரை திருப்பினார். அப்போது நிலை தடுமாறிய அவரது கார் சாலையோரமாக இருந்த அரச மரம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. அந்த சமயத்தில் கார் எந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தது என்பது தில்பிரீத் சிங்கிற்கு சரியாக நினைவில்லை.

அதிசய கார்... கோர விபத்தில் இருந்து மீண்டும் உரிமையாளரை காப்பாற்றிய டாடா நெக்ஸான்...

எனினும் மணிக்கு 55-60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் சென்று கொண்டிருந்திருக்கலாம் என தில்பிரீத் சிங் தெரிவித்தார். விபத்து நேரும் சமயங்களை பொறுத்தவரை இது மிகவும் அதிவேகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாமல் இருந்தது.

அதிசய கார்... கோர விபத்தில் இருந்து மீண்டும் உரிமையாளரை காப்பாற்றிய டாடா நெக்ஸான்...

ஆனால் இங்கே ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், டாடா நெக்ஸான் காரின் ஏர்பேக்குகள் சரியான நேரத்தில் விரிவடைந்து தில்பிரீத் சிங்கின் உயிரை காப்பாற்றி விட்டன. அத்துடன் வேதனை தரக்கூடிய அளவிற்கான காயங்கள் எதுவும் கூட அவருக்கு ஏற்படவில்லை. இதற்காக தனது டாடா நெக்ஸான் காருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிசய கார்... கோர விபத்தில் இருந்து மீண்டும் உரிமையாளரை காப்பாற்றிய டாடா நெக்ஸான்...

இதில், ஆச்சரியப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், டாடா நெக்ஸான் காரின் பில்லர்கள் அப்படியே நல்ல வடிவில் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் டிரைவர் சைடு டோர் கூட இன்னும் வேலை செய்ய கூடிய நிலையில் இருப்பதாகதான் கூறப்படுகிறது. விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றிய தனது நெக்ஸான் கார் குறித்த கூடுதல் தகவல் ஒன்றை தில்பிரீத் சிங் கூறியுள்ளார்.

அதிசய கார்... கோர விபத்தில் இருந்து மீண்டும் உரிமையாளரை காப்பாற்றிய டாடா நெக்ஸான்...

விபத்தில் சிக்கிய தனது டாடா நெக்ஸான் 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முந்தைய மாடல் என தில்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். அதாவது இது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற டாடா நெக்ஸான் கிடையாது. 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட டாடா நெக்ஸான் கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றிருந்தன.

அதிசய கார்... கோர விபத்தில் இருந்து மீண்டும் உரிமையாளரை காப்பாற்றிய டாடா நெக்ஸான்...

அதன்பின்பு டாடா நிறுவனம் நெக்ஸான் காரின் பாதுகாப்பு தரத்தை மேலும் உயர்த்தி, குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இருந்தபோதும் 4 ஸ்டார் ரேட்டிங் உடன் கூடிய நெக்ஸானே எவ்வளவு பாதுகாப்பான கார்? என்பதை இந்த விபத்தின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

அதிசய கார்... கோர விபத்தில் இருந்து மீண்டும் உரிமையாளரை காப்பாற்றிய டாடா நெக்ஸான்...

ஆனால் டாடா நெக்ஸான் பயணிகளை காப்பாற்றியதாக வெளிவரும் முதல் இது செய்தி இது என கூற முடியாது. ஏனெனில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் டாடா நெக்ஸான் தங்கள் உயிரை காப்பாற்றியதாக பலர் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான பதிவுகள் சமூக வலை தளங்களில் வைரலாவது வாடிக்கையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata Nexon Saves Owner From Big Accident. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X