சொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... வைரலாகும் புகைப்படம்...

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் சொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு, கடை ஒன்றின் முன்பாக வரிசையில் நின்றார். இந்த புகைப்படம் வைரலாக பரவி கொண்டிருக்கும் சூழலில், அதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ் (Bill Gates). அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் எனும் நகரில் பிறந்தவரான பில் கேட்ஸை அறியாதவர்கள் யாரும் நிச்சயமாக இருக்க முடியாது. பச்சை குழந்தைக்கு கூட பில் கேட்ஸை நன்கு தெரியும்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

அந்த அளவிற்கு உலகம் முழுக்க மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக பில் கேட்ஸ் திகழ்ந்து வருகிறார். மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான பில் கேட்ஸ், கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சியை செய்தவர்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதன் காரணமாகதான் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வகையில் பில் கேட்ஸால் கோடி கோடியாய் வருமானம் ஈட்ட முடிகிறது. இன்றைய தேதியில் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல். ஒன்றல்ல... இரண்டல்ல... 6 லட்சம் கோடி ரூபாய்கள்!!!

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஏழை, எளிய மக்களுக்கு தான தர்மங்கள் செய்வதிலும் பில் கேட்சுக்கு நிகர் பில் கேட்ஸ் மட்டுமே. இதனால் உலக மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றுள்ளார் பில் கேட்ஸ். ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, உலகின் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை அவர் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து பல ஆண்டுகளாக பில் கேட்ஸ்தான் முதல் இடத்தில் இருந்து வந்தார். ஆனால் அமேசான் (Amazon) ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) சமீபத்தில் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஏழை மக்களுக்கு உதவுவதற்காக பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஒன்றாக இணைந்து தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கினர். இதற்காக பில் கேட்ஸ் தனது சொத்தின் பெரும் பகுதியை நன்கொடையாக வழங்கினார்.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

பில் கேட்ஸின் சொத்து மதிப்பு சரிவடைந்து, உலகின் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை அவர் இழக்க இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் நலப்பணியாற்றி வருகிறார் பில் கேட்ஸ்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்த சூழலில் கடை ஒன்றின் முன்பாக பில் கேட்ஸ் வரிசையில் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களின் வாயிலாக உலகம் முழுவதும் வைரலாக பரவி கொண்டுள்ளது.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்த புகைப்படத்தில், சிகப்பு நிற ஸ்வெட்டர் அணிந்திருக்கும் பில் கேட்ஸ், தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு கொண்டு, ஒரு சாமானிய மனிதரை போல் மிக பொறுமையாக வரிசையில் காத்து கொண்டிருக்கிறார்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

புகைப்படம் வைரல் ஆக தொடங்கியதால், உலகின் பெரும் பணக்காரர் ஒருவர், கடும் குளிர் வீசும் இரவு நேரத்தில், வரிசையில் காத்து கொண்டிருந்தது ஏன்? என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவர் மத்தியிலும் மேலோங்கியது.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

தற்போது இந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. பில் கேட்சுக்கு பர்கர் (Burger) என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக தான் பிறந்த ஊரான சியாட்டில் நகரில் உள்ள டிக்ஸ் டிரைவ் இன் (Dick's Drive-In) என்ற பிரபல ரெஸ்டாரென்ட்டின் பர்கர் என்றால் பில் கேட்சுக்கு கொள்ளை பிரியம்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

எனவே பர்கர் வாங்குவதற்காக டிக்ஸ் டிரைவ் இன் ரெஸ்டாரெண்டிற்கு பில் கேட்ஸ் சென்றுள்ளார். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் வரிசையில் நின்றுள்ளார். ஆனால் அங்கிருந்த பெரும்பாலானோரால் பில் கேட்ஸை அடையாளம் காண முடியவில்லை.

MOST READ: 2019ல் விற்பனையில் மோதவுள்ள 7 எஸ்யூவி கார்கள்..!!!

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

எனினும் பில் கேட்ஸ் தோற்றுவித்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான மைக் கலோஸ் (Mike Galos) என்பவர் பில் கேட்ஸை அடையாளம் கண்டு கொண்டார். உடனடியாக அவர் வரிசையில் நிற்பதை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டார்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

அதன்பின்புதான் அந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக தொடங்கியது. கடந்த ஞாயிற்று கிழமையன்று (13ம் தேதி) இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் விருப்பப்பட்டு வாங்க வந்த பர்கரின் விலை இந்திய மதிப்பில் வெறும் 200 ரூபாய் மட்டுமே.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

நம்மில் பலருக்கும் வரிசையில் காத்திருப்பது என்பது சுத்தமாக பிடிக்காது. ஆனால் பில் கேட்ஸ் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தபோதும் கூட, மற்றவர்களுக்கு எவ்வித தொந்தரவும் தராமல், வரிசையில் பொறுமையாக காத்திருந்து பர்கரை வாங்கி சென்றுள்ளார்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

எனவே சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலர் பில் கேட்ஸை பாராட்டு மழையில் நனைய வைத்து கொண்டிருக்கின்றனர். தற்போது ஆன்லைன் மூலம், ஜொமோட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) போன்றவற்றில் ஆர்டர் செய்தால், வீடு தேடி உணவு வருகிறது.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

நம்மில் பலரும் அதைதான் பெரிதும் விரும்புகிறோம். ஆனால் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தபோதும் கூட, பொறுமையை இழக்காமல் வரிசையில் காத்திருந்த பில் கேட்ஸ் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர்தான் என்பதில் சந்தேகமில்லை.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

பில் கேட்ஸின் எளிமைக்கு இச்சம்பவம் ஓர் உதாரணம் மட்டும்தான். ஆனால் அனைத்து விஷயங்களிலும் பில் கேட்ஸ் எளிமையான நபர்தானா? என்று கேள்வி எழுப்பினால், நிச்சயமாக இல்லை என்பதுதான் உங்களுக்கு பதிலாக கிடைக்கும்.

MOST READ: சிறப்பு செயற்கைகோளை ஏவும் இந்தியா... இதன் பவர் தெரிந்தால் இனி காஷ்மீர் பக்கமே பாகிஸ்தான் வராது...

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஏனெனில் மிகவும் விலை உயர்ந்த லக்ஸரி கார்களை பில் கேட்ஸ் பெரிதும் விரும்பக்கூடியவர். பல்வேறு லக்ஸரி கார்களை பார்த்து பார்த்து வாங்கி சேகரித்து வைத்துள்ளார் பில் கேட்ஸ். அதுவும் ஜெர்மனியை சேர்ந்த போர்ஷே (Porsche) நிறுவனத்தின் கார்கள் என்றால் பில் கேட்சுக்கு கொள்ளை பிரியம்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 1975ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு, போர்ஷே 911 சூப்பர் காரை (Porsche 911 Supercar) பில் கேட்ஸ் வாங்கினார். அவர் முதன் முதலில் வாங்கிய விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

என்றாலும் பின்னாளில், போர்ஷே 911 சூப்பர் காரை ஏலம் மூலம் பில் கேட்ஸ் விற்பனை செய்து விட்டார். அந்த கார் இந்திய மதிப்பில் சுமார் 57 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால் பில் கேட்ஸின் போர்ஷே கார் கலெக்ஸன் அத்துடன் நின்று விடவில்லை.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஏனெனில் அதன்பின் 1988ம் ஆண்டு மாடல் போர்ஷே 959 கூபே (1988 Porsche 959 Coupe), 1991ம் ஆண்டு மாடல் போர்ஷே 911 கரீரா (1991 Porsche 911 Carrera), போர்ஷே 930 (Porsche 930) என வரிசையாக பல போர்ஷே கார்களை வாங்கி தனது வீட்டில் நிறுத்தினார் பில் கேட்ஸ்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதில், 1988ம் ஆண்டு மாடல் போர்ஷே 959 கூபே காரை, பில் கேட்ஸ் தனது தினசரி உபயோகத்திற்கு பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ஷே தவிர மேலும் பல முன்னணி நிறுவனங்களின் விலை உயர்ந்த கார்களையும் பில் கேட்ஸ் வாங்கியுள்ளார்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதில், புகாட்டி வேரோன் (Bugatti Veyron) கார் குறிப்பிடத்தக்கது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய். இதுதவிர லம்போர்கினி அவெண்டெடார் (Lamborghini Aventador) கார் ஒன்றையும் பில் கேட்ஸ் வாங்கியுள்ளார். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய்.

MOST READ: அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்?

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

அத்துடன் இந்திய மதிப்பில் சுமார் 3.18 கோடி ரூபாய் விலை கொண்ட ஆடி ஆர்8 (Audi R8) மற்றும் 1 கோடி ரூபாய் விலை கொண்ட டெஸ்லா மாடல் எக்ஸ் (Tesla Model X) உள்ளிட்ட கார்களையும் பில்கேட்ஸ் வாங்கியுள்ளார்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

கோடிகளில் விலை கொண்ட கார்களை மட்டும்தான் பில் கேட்ஸ் வாங்குவாரா? என்ற கேள்வி தற்போது உங்களுக்கு எழலாம். ஆனால் அப்படி இல்லை. லட்சங்களில் விலை கொண்ட கார்களையும் பில் கேட்ஸ் வாங்கியுள்ளார். ஆனால் அவற்றின் விலை பல லட்சங்களில் இருக்கும்.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதில், கேடிலாக் எஸ்கலேடு (Cadillac Escalade) கார் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 70 லட்ச ரூபாய். விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தினாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பில் கேட்ஸிடம் பல எளிமையான பண்புகள் உள்ளன.

கடும் குளிரில் கடை முன்பாக வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

பர்கர் வாங்குவதற்காக அவர் வரிசையில் நின்ற சம்பவம் அதற்கு ஓர் உதாரணம் மட்டுமே. ஆனால் நம்மூரிலும்தான் சில அரசியல்வாதிகள் இருக்கின்றனரே. பில் கேட்ஸின் செயலுடன் ஒப்பிடும்போது, நம்மூர் அரசியல்வாதிகள் பலரின் செயல்பாடுகள் நமக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துவதாகதான் உள்ளன.

Most Read Articles

Tamil
English summary
Bill Gates Waiting In Line For A Burger: Picture Goes Viral. Read in Tamil
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more