530ஐ எம் ஸ்போர்ட் காரை இந்தியாவில் களமிறக்கிய பிஎம்டபிள்யூ: போட்டி நிறுவனங்கள் கலக்கம்!
பிஎம்டபிள்யூ நிறுவனம், அதிநவீன சொகுசு வசதிகள் 7ம் தலைமுறை 530ஐ எம் ஸ்போர்ட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஏழாம் தலைமுறை 5ம் சீரிஸ் ஜி30 மாடல் காரை கடந்த 2017ம் ஆண்டு ஜுன் மாதம் அறிமுகம் செய்தது. தற்போது இந்த காரானது, எம் ஸ்போர்ட் என்ற பெட்ரோல் வேரியண்டில் கிடைக்கின்றது. இதைத்தொடர்ந்து, பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

உலகளவில் சொகுசு அதிகம் விற்பனையாகும் சொகுசு செடான் காராக விளங்கிவரும் இந்த 5ம் சீரிஸ் மாடல் கார்கள் கடந்த 1972ம் ஆண்டு முதல் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று, இந்தியாவிலும் இந்த கார் அதிகம் விற்பனையாகும் மாடலாக உள்ளது. நவீனம் மற்றும் சொகுசு வசதிகளுக்கு எந்தவொரு குறைவும் இன்றி இந்த மாடல் உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும்.

அந்த வகையில், பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட் வேரியண்டில் எம் ஸ்போர்ட் பேக்கேஜ்களுக்கே உரித்தான கட்டமைப்புகளும், வசதிகளும் புகுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு, அதிகளவு காற்றை உள்ளெடுக்கும் வகையில் ஸ்போர்ட்டியர் முன்பக்க பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பின்பக்க பம்பரானது டுயூவல்-டோன் ரெக்டாங்குளர் எக்சாஸ்ட் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

அடாப்டிப் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள் மற்றும் 18 இன்ச் அல்லாய் வீல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, காரின் உள்பக்க அலங்கரமானது பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தக்கோடா லெதர் என்னும் மிகவும் மிருதுவான இருக்கைகள் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, டுயூவல்-ஜோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், 12.3 இன்ச் மல்டி இன்பர்மேஷன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் திரை மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை இதில் இணைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, காரை ரிமோட் மூலம் பார்க்கிங் செய்யும் கண்ட்ரோல் வசதி, டிஸ்பிளே கீ, 360 டிகிரி வியூவுடன் கூடிய கேமிரா பார்க் அசிஸ்டண்ட், கம்ஃபோர்ட் அக்சஸ் சிஸ்டம் மற்றும் வெயர்லெஸ் சார்ஜிங் ஆகிய வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட் மாடல் காரில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினில் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 248 பிஎச்பி பவரை 5,200ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், உச்சகட்ட 350என்எம் டார்கில் 1,450 முதல் 4,800 ஆர்பிஎம் திறனை வெளிப்படுத்தும். 8 ஸ்பீட் ஆடோமேடிக் டிரான்மிஷன் கியர்பாக்ஸ் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் சொகுசு வசதிகளை பிரம்மிக்க வைக்கும் வகையில் கொண்டுள்ள இந்த கார் நான்கு வண்ணத் தேர்வுகளில் இந்தியச் சந்தையில் கிடைக்கின்றது. அதன்படி, ஆல்பைன் வெள்ளை, பிளாக் சபையர், மெடிடெர்ரனியன் ப்ளூ மற்றும் புளூஸ்டோன் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.
பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் ரூ. 53.80 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








