பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய டீசல் வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

சொகுசு கார் மார்க்கெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் சந்தைப் போட்டி நிலவுகிறது. பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி கார் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி இப்போது வால்வோ மற்றும் லெக்சஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வருகையும் சந்தைப் போட்டியை கடுமையாக்கி இருக்கிறது.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இதனால், போட்டிப் போட்டுக் கொண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன சொகுசு கார் நிறுவனங்கள். அந்த வகையில், பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரில் புதிய டீசல் வேரியண்ட்டை இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ 620டீ என்று குறிப்பிடப்படும் இந்த மாடலானது ரூ.63.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது டீசல் மாடலில் விலை குறைவான தேர்வாக இருக்கும்.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஏனெனில், கடந்த ஆண்டு ஜூனில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் 630டீ என்ற டீசல் வேரியண்ட்டிற்கு ரூ.66.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்தது. அதன் விலை தற்போது ரூ.68.90 லட்சமாக உயர்த்தப்பட்டுவிட்டது.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த புதிய வேரியண்ட்டில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

எஞ்சின் சக்தி பின்புற சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 220 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த காரில் ஏராளமான க்ரோம் அலங்கார பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்போர்ட்ஸ் லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் குறிப்பிடத்தக்க விஷயம். சில் பிளேட்டுகளக், மர அலங்கார வேலைப்பாடுகள். 8.8 அங்குல மின்னணு திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும். மேலும், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விசேஷ நேவிகேஷன் சாஃப்ட்வேரும் உள்ளது.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

மினரல் ஒயிட், கிளேசியர் சில்வர், மெடிட்டாரானியன் புளூ மற்றும் ராயல் பர்கண்டி ரெட் பிரில்லியன்ட் எஃபெக்ட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். உட்புறத்திற்கும் மூன்றுவிதமான அப்ஹோல்ஸ்ட்ரியை பிஎம்டபிள்யூ வழங்குகிறது.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இரு தினங்களுக்கு முன் இசட்-4 ரோட்ஸ்டெர் காரை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது. அடுத்து இந்த புதிய மாடலை களமிறக்கி இருக்கிறது. இதைத்தொடர்ந்து, புதிய எக்ஸ்-5 எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 10, 2019, 17:43 [IST]
English summary
BMW has launched the 6 Series Gran Turismo in a new diesel model variant - 620d in India today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+