2019ம் ஆண்டை கொண்டாடும் பிஎம்டபிள்யூ... காரணம் என்ன தெரியுமா...?
2019ம் ஆண்டில் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதால், பிஎம்டபிள்யூ நிறுவனம் நடப்பாண்டை கொண்டாடி வருகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

சொகுசு கார்களை தயாரித்து விற்பனைச் செய்து வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, 2019ம் ஆண்டின் கால்பகுதி நிதியாண்டில் அதிக அளவில் வாகனங்களை விற்பனையைச் செய்து புதிய உச்சத்தைச் தொட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மூன்று வித பிராண்டுகளான, பிஎம்டபிள்யூ, பிஎம்டபிள்யூ மோடாராட் மற்றும் மினி ஆகிய பிராண்டுகளின் கீழ் விற்பனையாகும் வாகனங்கள் வலிமையான விற்பனையைப் பெற்று, கடந்த காலச் சந்தையை மீட்டுக் கொண்டு வந்திருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அந்த வகையில், பிஎம்டபிள்யூ குழுமம் மொத்தம் 2 ஆயிரத்து 822 யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்து 19 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இது முன்பு எப்போதும் இல்லாத விற்பனையாகக் கருதப்படுகிறது. இதேபோன்று, பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் இரண்டு சக்கர வாகனங்களும் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு, பிஎம்டபிள்யூவின் 597 மோட்டார்சைக்கிள்கள் 2019ம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை விற்பனையாகி உள்ளது.

இதுகுறித்து, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தலைவர் ஹேன்ஸ் கிறிஸ்டியன் பியர்டல்ஸ் கூறியதாவது, "கடந்த 2018ம் ஆண்டு முடிவின்போது, பிஎம்டபிள்யூ கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியே 2019-இன் காலாண்டு வரை நீடித்து வருகிறது. இதன் காரணமாகவே நிதியாண்டின் காலாண்டு பகுதியில் நல்ல விற்பனை வளர்ச்சியை பிஎம்டபிள்யூ பெற்றிருக்கிறது" என்றார்.

மேலும் பேசிய அவர், "பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியாவில் தனக்கென பரந்த சந்தையை உருவாக்கும் விதமாக பெர்ஃபார்மன்ஸ் மற்றும் உயர்தர வகுப்பு வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேசமயம், இந்தியர்களுக்கு எங்களது சேவையை முழு வீச்சில் செய்து வருகிறோம். ஆகையால், வரும் காலங்களில் எங்கள் குழுமம் தயாரித்து விற்பனைச் செய்யும் வாகனங்கள் கூடுதல் விற்பனை வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார்.

பிஎம்டபிள்யூ-வின் இந்த விற்பனை வளர்ச்சியில், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் மாடல் கார்கள் பெரும் பங்கினை வகிக்கின்றன. ஏனென்றால், இந்த கார்கள்தான், நடப்பாண்டின் கால்பகுதி நிதியாண்டில் அதிகம் விற்பனையாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, எக்ஸ் ரேஞ்சில் வெளியான ஆல் நியூ பிஎம்டபிள்யூ எக்ஸ்4 ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி கூப் கார்கள் சிறந்த விற்பனையைப் பெற்றுள்ளது.

இதேபோன்று, மினி பிராண்டில், ஐகானிக் மினி ஹேட்ச்பேக் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் மினி கன்ட்ரிமேன் ஆகிய இரண்டு கார்களும் 80 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications








