ரூ. 1-க்கு கார் சர்வீஸ்: பிஎம்டபிள்யூ-வின் அதிரடி அறிவிப்பு...!
வாடிக்கையார்கள் கார்களை முறையான தேதியில் சர்வீஸ் விடவைக்கும் வகையில், கிமீட்டருக்கு ரூ. 1 என்ற புதிய சர்வீல் பேக்கேஜ் திட்டத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.

சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சர்வீஸ் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'ஜாய் ரிவார்ட்' என அழைக்கப்படும் இந்த சலுகை முறை சர்வீஸில், பிஎம்டபிள்யூ காரின் உரிமையாளர்களுக்கு குறைக்கப்பட்ட விலையில் உதிரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் செய்யப்பட இருக்கிறது.

இந்த திட்டத்தினை பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த மாதமே அறிமுகம் செய்துவிட்டநிலையில், இன்று அதனை மீண்டும் புதுப்பித்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, புதிய சர்வீஸ் கட்டணத் தொகையானது நாட்டில் உள்ள அனைத்து ரக பிஎம்டபிள்யூ கார்களுக்கும் வழங்கப்பட உள்ளது. ஆனால், தற்போது இதன் முன்னோட்டமாக பிஎம்டபிள்யூ-வின் 3 செரீஸ் மற்றும் எக்ஸ்1 மாடலுக்கு வழங்கப்பட உள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சர்வீஸ் கட்டணத் தொகையானது காரின் கிலோ மீட்டருக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட உள்ளது. அதன்படி, பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ஒரு தொகையும், டீசல் வேரியண்ட்டிற்கு ஒரு தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, பெட்ரோல் மாடல் காருக்கு ஒரு கிமீட்டருக்கு 97 காசுகளும், டீசல் எஞ்ஜின் கார்களுக்கு ஒரு கிமீட்டருக்கு ரூ.1.38 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டணத் தொகையானது, முந்தைய சர்வீஸ் கட்டணத்தைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. காரின் உரிமையாளர்களைத் தவறாமல் சர்வீஸ் விடச் செய்யும் வகையில் இந்த புதிய ஜாய் ரிவார்ட் சர்வீஸ் சேவை வழங்கப்பட உள்ளது.

இந்த சர்வீஸ் திட்டத்தில், சாதரணமாக வாகனத்திற்கு செய்யப்படும் சோதனைகள் மற்றும் ஆயில் மாற்றங்கள் செய்யப்படும். இத்துடன், ஏர் ஃபில்டர்கள், ஃப்யூவல் ஃபில்டர்கள், பிலக்குகள் மற்றும் பிரேக் ஃப்ளூட் ஆகியவை மாற்றம் செய்யப்படும். இந்த பேக்கேஜ் முறையானது வாடிக்கையாளர்களின் கோரிக்கயைத் தொடர்ந்து சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, காரின் ட்யூரேஷன் மற்றும் மைலேஜைக் கணக்கில் கொண்டு இந்த சர்வீஸ் வழங்கப்பட இருக்கிறது. மேலும், மூன்று வருடங்கள் மற்றும் 40,000 கிலோமீட்டர்களில் இருந்து, 10 வருடங்கள் மற்றும் 2 லட்சம் கிலோமீட்டர்கள் வரை இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பிஎம்டபிள்யூவின் இரண்டாம் உரிமையாளர் கூட பெற முடியும். அதாவது, வேறொருவரிடம் இருந்து காரை செகண்ட் ஹேண்ட்டாக வாங்கியிருப்பவரும் இந்த சலுகையைப் பயன்படுத்த முடியும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
பிஎம்டபிள்யூ-வின் புதிய சர்வீஸ் பேக்கேஜை பட்டியலாக கீழே பார்க்கலாம்:
| Warranty (3 years or 40,000 kms) | Package | Per Kilometre Cost (Rs) |
| BMW X1 Petrol | Rs 38,800 | 0.97 |
| BMW X1 Diesel | Rs 55,400 | 1.38 |
| BMW 3-Series Petrol | Rs 39,600 | 0.99 |
| BMW 3-Series Diesel | Rs 56.500 | 1.41 |

இதற்கு முந்தைய ஜாய் ரிவார்ட் சலுகையில், குறிப்பிட்ட உதிரி பாகத்திற்கு மட்டுமே சலுகை வழங்கப்பட்டது. மேலும், சர்வீஸ் சார்ஜானது சில வேலைகளுக்கு மாறுதல் கொண்டிருந்தது. இந்த நிலையில், தான் மேற்கூரிய புதிய அப்டேட்களை பிஎம்டபிள்யூ சமீபத்தில் வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








