என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்!

வெடிகுண்டு மழையே பொழிந்தாலும் உங்களைப் பாதுகாக்கின்ற வகையிலான புதிய காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்த காரின் கூடுதல் சிறப்பம்சங்கள் வாயை பிளக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

பொதுவாக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுவது வாடிக்கையான ஓர் விஷயம்தான். அத்தகையோருக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதீத பாதுகாப்பு நிறைந்த கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

இந்நிலையில், பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, அதி நவீன மற்றும் பாதுகாப்பு நிறைந்த காரை தயாரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 புரடெக்சன் விஆர்6 என்று அழைக்கப்படும் அந்த கார், இதுவரை வெளி வந்த எக்ஸ்யூவி மாடல்களைக் காட்டிலும் பிரம்மிக்க வைக்கும் வகையிலான பாதுகாப்பைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

இந்த கார் ஓர் டேங்கரைப் போன்று தயார் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், கார் மீது குண்டு மழை பொழிந்தாலும் சரி, வெடிகுண்டு வீசப்பட்டாலும் சரி அசாரமல் முன்னேறிக் கொண்டே இருக்கும்.

அந்தவகையில், 15 கிலோ வரையிலான டிஎன்டி-யின் சக்தியை இந்த கார் தாங்கிக்கொள்ளும் என தகவல் தெரிவிக்கின்றன.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

அதேபோன்று, ஒரு ட்ரோனின் தாக்குதலை எதிர்கொள்ளக்கூடிய மேற்கூரையையும் இந்த கார் பெற்றிருக்கின்றது. இந்த பாதுகாப்பு அம்சமானது, முன்பக்க பம்பரிலிருந்து, பின் பக்க பம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

இத்தகைய பாதுகாப்பிற்காக, மேற்கூரைக்கு அதீத பாதுகாப்பு திறன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் மிக உறுதியான ஸ்டீல் தகட்டால் அது போர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை வெளிவந்த க்ராஸோவர் ரக கார்களில் இல்லாத அளவிற்கு புதிய பாதுகாப்பு வசதி புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 விஆர்6 காருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏகே 47 ரக துப்பாக்கியின் நீண்ட 7.62*39 மிமீ அளவுகொண்ட தோட்டாவை தாங்கிக் கொள்ளும் வகையிலான அம்சம்தான் அது.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

இத்துடன், இந்த காருக்கு மிக அடர்த்தியான அலுமினியம் ஸ்பிளின்டர் ஷுல்ட் குவார்ட் எஞ்ஜின் மற்றும் அடிப்பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இது, நெருப்பு பிழம்புகளில் இருந்து காரை காப்பாற்றும்.

மேலும், இந்த காரின் ஜன்னல்களில் 33மிமீ அளவு அடர்த்திக் கொண்ட பாலிகார்பனேட் ரெயின்ஃபோர்ஸ்ட் கண்ணாடியைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

அதேபோல, தாக்குதலின்போது பாதிக்காத வண்ணம் இருக்கும் வகையில், இந்த காரின் ப்யூவல் டேங்கிற்கு சிறப்பான வடிவமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், அதன் டயர்களுக்கும் எளிதில் பஞ்சராகாத வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பஞ்சாரானாலும்கூட சிறப்பான ஓடு திறனை இந்த டயர்கள் காருக்கு வழங்குகின்றது.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

புதிய எம்டபிள்யூ எக்ஸ்5 விஆர்6 காரின் அனைத்து ஜன்னல்களையும் எலக்ட்ரானிக் முறையில் கன்ட்ரோல் செய்யும் வகையில், வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் நான்கு பேர் அமர்ந்து செல்லும் வகையிலான இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது, பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 மாடலில் இருப்பதைப் போன்றே காட்சியளிக்கின்றது.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

மேலும், பின்புறம் அமர்பவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், பின்பக்கத்தில் பாதுகாப்பு கவச பெட்டி அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக இந்த காரில், கடத்தலின்போது பாதுகாப்பு அலர்ட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது, காரின் உரிமையாளர் கடத்தப்பட்டிருப்பதாக உணர்ந்தால், அதில் உதவிக்காக மற்றவரை அழைக்கும் வகையில் பொத்தான் வழங்கப்பட்டுள்ளது.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

இதனை பயன்படுத்தும்போது, காரின் அனைத்து கதவுகளும் தானாக மூடிக் கொள்ளும். இந்த செயலானது, பொத்தானை அழுத்திய பின்னர் எப்போது கார் நிறுத்தப்படுகின்றதோ அப்போது நடைபெறும். இது குற்றவாளியைத் தப்பிக்க விடாமல் தடுத்து நிறுத்த உதவும்.

இதைத்தொடர்ந்து, விபத்து காலத்தில் பாதுகாக்கும் விதமாக சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது, விபத்தின்போது, எஞ்ஜின் திறனை முடக்காமல், காரில் உள்ள பயணிகள் எளிதில் வெளியேறுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

பாதுகாப்பு வசதிகளுடன், பிஎம்டபிள்யூ விஆர்6 காரில் பயணிகளின் சொகுசான பயண அனுபவத்திற்க ஏற்ப வகையிலான வசதி வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், ஆம்பிஸியன்ட் மின் விளக்குகள், பிஎம்டபிள்யூ ஐ டிரைவ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் வென்டிலேடட், மஸ்ஸாஜ் செய்யக்கூடிய இருக்கைகள் மற்றும் மென்மையாக மூடிக் கொள்ளும் கதவுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

இந்த காரில் சிறந்த எஞ்ஜின் திறனுக்காக 4.4 லிட்டர், ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 523 பிஎஸ் பவரையும், 750 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 5.9 செகண்டுகளில் தொட்டுவிடும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 210 கிமீ ஆகும்.

இந்த காரில் ஸ்டீல் ஸ்பிரிங் எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு டம்பர்கள் மற்றும் மேம்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

என்ன சொல்றீங்க வெடிகுண்டு மழையே பொழிஞ்சாலும் ஒன்னும் ஆகாத: ஆச்சரியமளிக்கும் பாதுகாப்பு நிறைந்த கார்... வீடியோ!

பிஎம்டபிள்யூவின் இந்த பாதுகாப்பு நிறைந்த எக்ஸ்5 விஆர்6 மாடல், அந்நிறுவனத்தின் அமெரிக்க உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதன் சாதாரண எக்ஸ்5 மாடலும் இங்குதான் தயாரிக்கப்பட்டு வருகின்றது. புதிய விஆர்6 மாடல் சாதாரண எக்ஸ்5 மாடலைக் காட்டிலும் சற்று கூடுதல் விலையைப் பெறலாம். இது, அந்த காரில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு வசதிக்கு ஏற்றதுதான்.

அந்த வகையில், 72.9 லட்சம் ரூபாயில் இருந்து 82.4 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அதீத பாதுகாப்பு நிறைந்த காரை, விவிஐபி மற்றும் அரசு முக்கிய அதிகாரிகளுக்கு மட்டுமின்றி சாதாரண பொதுமக்களுக்கும் விற்பனைச் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த காரின் இந்திய வருகை குறைத்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2019, 11:36 [IST]
English summary
BMW X5 VR6 Will Save You From Bullets & Bomb Blasts. Read IN Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+