விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன... புகைப்படங்கள் உள்ளே...!

பிஎம்டபிள்யூ நிறுவனம், இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கும் புதிய மாடல் எக்ஸ்7 கார் குறித்த ஸ்பை படங்கள் கசிந்துள்ளன. இந்த கார் குறித்த பிரத்யேக தகவலை இந்த பதிவில் காணலாம்.

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

சொகுசு கார் விற்பனையில் ஈடுபட்டு வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம், அதன் புதிய மாடலான எக்ஸ்7 எனும் பிரீமியம் ரக எஸ்யூவி காரை இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே, இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

இந்நிலையில், இந்தகாரின் உள்பகுதியில் வழங்கப்பட்டுள்ள சொகுசு அம்சங்கள் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த, புகைப்படங்களை ஆட்டோமொபிலி ஆர்டெண்ட் எனும் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்எஸ், லேண்ட்ரோவரின் ரேஞ்ச்ரோவர், லெக்ஸஸ் எல்எக்ஸ் மற்றும் டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக களமிறங்க இருக்கும் இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ப்ரீமியம் எஸ்யூவியில், அதன் பெயருக்கேற்ப பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின்மூலம், விற்பனைக்கு வரும் எஸ்யூவி கார்களிலேயே மிகப்பெரிய அளவிலான காராக இருக்கும் இந்த எக்ஸ்7 கார், 7 சீட்டர் அம்சத்தைக் கொண்டதாக இருக்கின்றது. அதேசமயம், இந்த காரின் கேபின் அமைப்பில் பயணிகளுக்கு தேவையான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலை, அந்த நிறுவனம், சென்னையிலுள்ள உற்பத்தி தொழிற்சாலையில் வைத்துதான் தயாரித்து வருகின்றது.

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

உள்நாட்டிலேயே வைத்து உற்பத்திச் செய்யப்படுவதால், இதன் விலையும் சற்று குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், குறிப்பிட்ட டீலர்கள் மூலம், சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த கார் பிரைவேட்டாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

அவ்வாறு, பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காரை பார்வையிட்ட வாடிக்கையாளர் அளித்த தகவலின்படி, இந்த புதிய மாடலில் மூன்று பகுதிகளைக் கொண்ட பனோரமிக் சன் ரூஃப் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், காரின் முகப்பு பகுதியில், பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கே உரித்தான கிட்னி வடிவிலான க்ரில் வழங்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

MOST READ: மிகவிரைவில் இந்திய சாலைகளை ஆள போகும் வாகனங்கள் இதுதான்... பெட்ரோல் டூ விலர்களுக்கு மோடி அரசின் செக்!

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

இதைத்தொடர்ந்து, காரின் கேபினுக்குள், 12.3 இன்ச்சிலான இரண்டு ஸ்கிரீன்கள் டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ளன. அதிலொன்று, ஓட்டுநர் டேட்டாக்களை வழங்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரகாவும், மற்றுமொன்று டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமாகவும் பயன்படும். மேலும், வாய்ஸ் கமெண்ட் அம்சமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

இந்த கேபினானது இரண்டு ஃபயர் வால்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும், சப்தத்தை உள் வாங்கிக்கொள்ளும் தன்மையைக் கொண்டவையாக இருக்கின்றன. மேலும், இன்டீரியரில் ரிச் லுக்கிற்காக பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தவகையில், டேன் மற்றும் கருப்பு நிறத்திலான இருக்கை, கிரிஸ்டால் கோடட் ஐடிரைவ் க்னாப் மற்றும் கிரிஸ்டால் கியர் லிவர் மற்றும் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

MOST READ: தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

மேலும், பயணிகளின் சொகுசான இருக்கை அனுபவத்திற்காக மிருதுவான குஷ்ஷன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நடுவில் இருக்கும் இருக்கைக்கு ஹெட்ரெஸ்ட் மற்றும் ஹார்ம் ரெஸ்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் தண்ணீர் பாட்டில் மற்றும் கப்புகளை தாங்கிப் பிடிக்கும் வகையில் ஹோல்டர்களும் இணைக்கப்பட்டுள்ளன.

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் பாதுகாப்பு வசதியாக, ஆன்டி லாக் பிரேக்கிங் வசதியுடன் கூடிய டிஸ்க் பிரேக்கும், பிரேக் அசிஸ்டும் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, ஆக்குபேஷன் புரெடெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய ஏர்பேக்குகள் டிரைவருக்கும், முன் சீட் பயணிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மத்தியில் மற்றும் பின்னிருக்கையில் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

MOST READ: ஆந்திர புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் அட்டகாசம்... சட்டத்தை மீறுவதால் சர்ச்சை...

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

மேலும், பிரத்யேக அம்சங்களாக, டிரைவர் அலர்ட் சிஸ்டம், பாதசாரிகள் அலர்ட், அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஆடியோ, வீடியோ அலர்ட்டுடன் கூடிய பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

தற்போது காட்சிக்குள்ளாகியிருக்கும் இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில், 3.0 லிட்டர், இன்லைன், 6 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 400 பிஎஸ் பவரையும், 760 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டுள்ளது. இத்துடன், இந்த எஞ்ஜினில் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

விரைவில் களமிறங்க உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஸ்பை படங்கள் கசிந்தன...! பிரத்யேக புகைப்படங்கள் உள்ளே...!

இந்த ஆப்ஷனே இதன் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய மாடல் எக்ஸ்7 காரை பிஎம்டபிள்யூ நிறுவனம், ரூ. 1.5 கோடி என்ற விலையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
BMW X7 Spied Inside Out At Dealership. Read In Tamil.
Story first published: Thursday, June 6, 2019, 13:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X