இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...
இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கியுள்ளார். இதன் விலை தலை சுற்ற வைக்கும் வகையில் உள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காத்ரீனா கைப். பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த கனவுக்கன்னி இவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரபல பத்திரிக்கை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், உலகிலேயே மிகவும் செக்ஸியான பெண்ணாக காத்ரீனா கைப் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் காத்ரீனா கைப் திகழ்கிறார். எனவே விலை உயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்துவது காத்ரீனா கைப்பின் வழக்கமாக உள்ளது. மும்பையில் தங்கியிருக்கும் நாட்களில் தனது தினசரி பயன்பாட்டிற்கு ஆடி க்யூ7 (Audi Q7) காரை காத்ரீனா கைப் பயன்படுத்தி வந்தார்.

ஜெர்மனியை சேர்ந்த ஆடி லக்ஸரி கார் நிறுவனத்தின் முதன்மையான எஸ்யூவி வகை கார்களில் ஒன்றுதான் க்யூ7. பாலிவுட் திரையுலக பிரபலங்கள் மத்தியில் ஆடி க்யூ7 மிகவும் பிரபலமான காராக திகழ்ந்து வருகிறது. பாலிவுட்டை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் ஆடி க்யூ7 காரை சொந்தமாக வைத்துள்ளனர்.

இந்த சூழலில் ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ டீசல் எல்டபிள்யூபி காரை (Range Rover Vogue SE Diesel LWB) காத்ரீனா கைப் தற்போது வாங்கியுள்ளார். சூப்பர் லக்ஸரி காரான இதன் விலை 2.33 கோடி ரூபாய். அதிர்ச்சியடைய வேண்டாம். இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு வருகையில், இந்த காரின் விலை இன்னும் சில லட்சங்கள் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ டீசல் எல்டபிள்யூ காரில், காத்ரீனா கைப் வலம் வந்ததை சமீபத்தில் பார்க்க முடிந்தது. ஆடி க்யூ7 காரை போன்று, ரேஞ்ச் ரோவர் வோக் காரும் எஸ்யூவி வகையை சேர்ந்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செக்மெண்ட்டில் விற்பனையாகி கொண்டிருக்கும் மிகவும் லக்ஸரி எஸ்யூவியாக இது திகழ்கிறது.

லக்ஸரி எஸ்யூவி ரக கார்கள் மீது காத்ரீனா கைப்பிற்கு இருக்கும் விருப்பம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. ஆடி க்யூ 7 காரின் பதிவு எண்ணைதான் புதிதாக வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ டீசல் எல்டபிள்யூ காருக்கும் காத்ரீனா கைப் பெற்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ டீசல் எல்டபிள்யூபி காரில், 4.4 லிட்டர், எஸ்டிவி8 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3,500 ஆர்பிஎம்மில் 335 எச்பி பவரையும், 1,750 ஆர்பிஎம்மில் 740 என்எம் டார்க் திறனையும் உருவாக்கி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய திறன் வாய்ந்தது. இதில், 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ டீசல் எல்டபிள்யூபி காரில், சௌகரியமான மற்றும் லக்ஸரியான பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர இது மிகச்சிறந்த ஆஃப் ரோடு கார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காத்ரீனா கைப் வெள்ளை நிற காரை தேர்வு செய்துள்ளார்.

காத்ரீனா கைப் வாங்கியுள்ள கார் எல்டபிள்யூபி வேரியண்ட் ஆகும். எல்டபிள்யூ என்பது லாங் வீல் பேஸ் (LWB- Long Wheel Base) என்பதை குறிக்கிறது. எஸ்டபிள்யூபி எனப்படும் ஷார்ட் வீல் பேஸ் (SWB- Short Wheel Base) வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில், இதில் அதிக இடவசதி மற்றும் சௌகரியம் கிடைக்கும்.

பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில், ஷாருக்கான், ரன்பீர் கபூர், அஜய் தேவ்கன், கரீனா கபூர், அலியா பட், ஜாகுலின் பெர்ணாண்டஸ் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்.


Click it and Unblock the Notifications








