பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

பிரபல நடிகர் ஒருவரின் சொகுசு பென்ஸ் கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

இந்தியாவில் திரைத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலர் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி குவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரிடம் மிகவும் விலை உயர்ந்த பல்வேறு லக்ஸரி கார்கள் உள்ளன.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இதற்கு விதி விலக்கு அல்ல. அமிதாப் பச்சன் குடும்பத்தில் சொகுசு கார்களுக்கு பஞ்சமே இல்லை. லெக்ஸஸ் எல்எக்ஸ்570, மெர்சிடிஸ்-மேபேக் எஸ்500, பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி, போர்ஷே கேமேன் என அவர்களிடம் உள்ள லக்ஸரி கார்களை அடுக்கி கொண்டே போகலாம்.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

இந்த சூழலில் மெர்சிடிஸ்-பென்ஸ் வி கிளாஸ் காரை அமிதாப் பச்சன் சமீபத்தில் வாங்கினார். தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனையாகும் மிகவும் லக்ஸரியான எம்பிவி ரக கார் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

முன்னதாக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் 350 எல் கார் ஒன்றையும் அமிதாப் பச்சன் பயன்படுத்தி வந்தார். இது லக்ஸரி செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரில் பயணம் செய்வதை அமிதாப் பச்சனும், அவரது குடும்பத்தினரும் மிகவும் விரும்பினர்.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த காரில் பயணம் செய்வதை நம்மால் பல முறை பார்க்க முடிந்திருக்கிறது. அத்துடன் இது தொடர்பான பல்வேறு புகைப்படங்களும் கூட வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

இந்த சூழலில் அமிதாப் பச்சன் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் 350 எல் கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அமிதாப் பச்சன் குடும்பத்தினர் சில சமயங்களில் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

அந்த சமயங்களில் பழைய மாடல்கள் யூஸ்டு கார் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு விடும். அந்த வரிசையில்தான் தற்போது இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஓஎல்எக்ஸில் (OLX) விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

தற்போது இந்த கார் மூன்றாவது உரிமையாளர் வசம் உள்ளது. அப்படியானால் முந்தைய ஆண்டுகளில் இந்த கார் சில கைகள் மாறி வந்துள்ளது. இது 2007ம் ஆண்டு மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் 350 எல் கார் ஆகும்.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

இதில், 'எல்' என்பது கூடுதல் வீல் பேஸை குறிக்கிறது. அதாவது ரெகுலர் எஸ்-கிளாஸ் மாடலை காட்டிலும், இதன் உட்புறத்தில் அதிகமான இடவசதி வழங்கப்பட்டிருக்கும். இந்த காரில் 3,498 சிசி வி6 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 365 எச்பி பவர் மற்றும் 345 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த கார் இதுவரை வெறும் 55 ஆயிரம் கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியுள்ளதாக அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

இந்த கார் அமிதாப் பச்சன் பயன்படுத்தியதுதான் என்பதை நாங்களாக முடிவு செய்யவில்லை. ஓஎல்எக்ஸ் விளம்பரத்தில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அமிதாப் பச்சன் குடும்பம் பயன்படுத்திய வண்ணம் (கிரே) மற்றும் பதிவு எண்ணைதான் (MH 02 BD 5050) இந்த காரும் பெற்றுள்ளது.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

இதனிடையே அமிதாப் பச்சன் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் 350 எல் காருக்கு வெறும் 9.99 லட்ச ரூபாய் மட்டுமே விலை கோரப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இது மிகவும் குறைவான விலை ஆகும்.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

இந்தியாவில் தற்போது விற்பனையாகும் சில பட்ஜெட் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் விலையை விட இந்த விலை மிகவும் குறைவுதான். இந்த கார் பேன்ஸி நம்பரை பெற்றிருப்பதுடன், 55 ஆயிரம் கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியுள்ளது.

பிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்

அத்துடன் அமிதாப் பச்சன் பயன்படுத்திய சொகுசு கார் என்ற பெருமையும் இதற்கு உள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கையில் இதன் விலை குறைவுதான். ஆனால் ஏற்கனவே சில கைகள் மாறி தற்போது 3வது உரிமையாளரிடம் உள்ளதால், மிகவும் குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2019, 15:05 [IST]
English summary
Bollywood Superstar Amitabh Bachchan’s Mercedes-Benz S-Class 350 L Put Up For Sale At OLX. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+