கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

சாலையில் காரில் பயணம் செய்யும்போது பிரேக் பிடிக்கவில்லை அல்லது செயலிழந்தால் இனி பதட்டம் அடைய தேவையில்லை 8 நொடிகளில் காரை நிறுத்தலாம்.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

நாம் தினமும் காரில் பயணம் செய்து வருகிறோம். கார் பயணத்தில் பிரேக் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதையும் நாம் அறிவோம். ஆனால் பிரேக் பயணம் செய்யும்போது செயலிழந்தால்?

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

நினைத்தாலே உடல் நடுங்குகிறதா இனி பயப்பட தேவையில்லை 8 நொடிகளில் சுலபமாக காரினை நிறுத்தலாம். எப்படி நிறுத்துவது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

நவீன கார்களில் நான்கு வீல்களிலும் ஹைட்ராலிக் பிரேக் முறைகளேயே கையாள்கின்றனர். அதுவும் டிஸ்க் மற்றும் டிரம் ஆகிய இரண்டு வகை பிரேக்குளாக வருகிறது.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

காருக்கு நான்கு வீல்களிலும் பிரேக் இருந்தாலும், முன்பக்க வீல்களில் உள்ள பிரேக் பின்பக்க வீல்களின் பிரேக்கை காட்டிலும் சற்று உறுதியானதாக இருக்கும்.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

உயர் ரக, விலை அதிகம் உள்ள கார்களில் டிஸ்க் வகை பிரேக்கள் பயன்படுத்தப்படும். சிறிய ரக, குறைந்த விலை கார்களில் டிரம் வகை பிரேக்குகள் பயன்படுத்தப்படும்.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

ஹைட்ராலிக் தொழிற்நுட்பம்:

ஹைட்ராலிக் தொழிற்நுட்பத்தில் மாஸ்டர், ஸ்லேவ் ஆகிய இரண்டு சிலிண்டர்கள் இருக்கும் மாஸ்டர் சிலிண்டரின் ஒரு புறம் பிஸ்டனும், மறுபுறம் ஸ்லேவ் சிலிண்டருக்கான இணைப்பு இருக்கும்.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

ஸ்லேவ் சிலிண்டரில் நடுவில் மாஸ்டர் சிலிண்டரில் இருந்து வரும் இணைப்பும், இரண்டு புறங்களிலும் பிஸ்டனும் இருக்கும்.இந்த இரண்டுசிலிண்டர்களும் திரவத்தால் இணைக்கப்பட்டிருக்கும். மாஸ்டர் சிலிண்டரின் பிஸ்டன் இருக்கும் பகுதி பிரேக் பெடலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

இதனால் பிரேக் பெடலை அழுத்தும் போது மாஸ்டர் சிலிண்டரில் உள்ள பிஸ்டர் திரவத்தை அழுத்தும் அது ஸ்லேவ் சிலிண்டருக்குள் சென்று இரண்டு புறங்களிலும் உள்ள பிஸ்டனை அழுத்தி பிரேக் பிடிக்க வழிசெய்யும் இந்த தொழிற்நுட்பத்திற்கு பெயர் தான் ஹைட்ராலிக் தொழிற்நுட்பம்.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

டிஸ்க் பிரேக்:

டிஸ்க் பிரேக் என்பது கார் வீலுடன் பொருத்தப்பட்டுள்ள டிஸ்க் மூலம் பிரேக் பிடிப்பதாகவும், கார் வீலுடன் டிஸ்க் பொருத்தப்பட்டிருக்கும், அதில் கேளிபர் என்ற கருவி பொருத்தப்படும். அதில் சிறிய ஹைட்லாரலிக் சிலிண்டர்கள் இருக்கும். நாம் பிரேக் பிடிக்கும் போது இந்த ஹைட்ராலிக் சிலிண்டர்கள் பிரேக் பிடித்து டிஸ்கை நிறுத்தும்.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

இதன் மூலம் காரும் நிறுத்தப்படும். காரின் டிசைனை பொருத்து ஒரு கேளிபர் அல்லது இரண்டா என்பது முடிவு செய்யப்படும். காரின் முன் வீல்களில் இரண்டு கேளிபர்கள், பின் வீலில் ஒரு கேளிபர் என்ற டிசைன் பொதுவாக இருக்கும் எனினும் இதுகாருக்கு கார் மாறுபடலாம்.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

டிரம் பிரேக்:

டிரம் பிரேக் என்பது காரின் விலில் உள்ள ஹாலோ டிரம் மூலம் செயல்படுத்துவது. கார்விலில் உள்ள ஹாலோ டிரம் உட்புறம் இரண்டு பிரேக் ஷூக்கள் இருக்கும் இது நாம் பிரேக் பிடிக்கும் போது ஹாலோ டிரம்முடன் உராய்வை ஏற்படுத்தி பிரேக் பிடிக்கக்கூடியது.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

இதில் உள்ள இரண்டு பிரேக் ஷூக்களுக்கும் தனித்தனி ஹைட்ராலிக் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஷூக்கும் தனி சிலிண்டர் என்பதால் பிரேக்கிற்காக அதிக அளித்தத்தை தர முடியும்.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

ஆனால் இதில் உராய்வு காரணமாக ஷீக்கள் அடிக்கடி தேய்ந்து போகக்கூடும், அதே நேரத்தில் அதிக வேகத்தில் செல்லும் போது பிரேக் பிடிக்க முயன்றால் அதிக சூடு காரணமாக பிரேக் பிடிக்காமல் கூட போகும் வாயப்புள்ளது. இந்த வகை பிரேக்குள் சிறிய ரக கார்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

காரில் பயணம் செய்யும்போது பிரேக் பிடிக்கவில்லை அல்லது செயலிழந்தால் பதட்டம் அடையாமல் முதலில் காரின் வேகத்தை முழுமையாக குறைக்க வேண்டும்.அதன்பின்னர் கை பிரேக்கினை பாதி அளவில் வைத்து கியரினை 4 கியரிலிருந்து படிப்படியாக இரண்டாவது கியருக்கு குறைக்க வேண்டும்.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

இதன்மூலம் காரின் வேகம் முழுமையாக குறையும் அதன்பின் கை பிரேக்கினை முழமையாக இழுத்தால் கார் மெதுவாக நின்றுவிடும் இதனை என்ஜின் பிரேக் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கார் ஓட்டும்போது காரில் பிரேக் பிடிக்கவில்லையா???... கவலை வேண்டாம்!!...

விபத்தினை தவிர்க்க இந்த முறையை கையாண்டால் சுலபமாக 8 வினாடிகளில் காரை நிறுத்திவிடலாம்.

Most Read Articles
English summary
How to stop a car Brake failure in just 8 seconds?: Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X