110ம் ஆண்டு கொண்டாட்டாம்: சிரோன் காரின் ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் செய்த புகாட்டி!

புகாட்டி நிறுவனம் துவங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், சிரோன் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புகாட்டி சிரோன் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

உலகின் அதிவேக சொகுசு கார்களை தயாரிப்பதில் புகாட்டி நிறுவனம் சிறந்து விளங்குகிறது. புகாட்டி என்றாலே, வேகம் எனும் அளவுக்கு கார் பிரியர்கள் மத்தியில் முத்திரை பதித்துள்ளது. 1909ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எட்டோர் புகாட்டி என்பவரால் துவங்கப்பட்டது.

கார் பொறியியல் துறையின் உச்சத்தை பரைசாற்றி இருக்கும் புகாட்டி நிறுவனம் துவங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகிறது. அதனை கொண்டாடும் விதத்தில், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட சிரோன் காரை அறிமுகம் செய்துள்ளது.

புகாட்டி சிரோன் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த சிறப்பு பதிப்பு மாடலானது 'புகாட்டி சிரோன் ans 110' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. புகாட்டி சிரோன் ஸ்போர்ட் அடிப்படையில் இந்த ஸ்பெஷல் எடிசன் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தனது தாயகமான பிரான்ஸ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் பல இடங்களில் பிரான்ஸ் நாட்டின் மூவர்ண தேசியக் கொடி வர்ணமும் சைடு மிரர்கள், ரியர் விங், ஸடீயரிங் வீல் மற்றும் ஹெட்ரெஸ்ட் ஆகிய பல இடங்களில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புகாட்டி சிரோன் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இதர புகாட்டி சிரோன் கார்களை போல இரட்டை வண்ணத்தில் இல்லாமல் ஸ்டீல் புளூ என்ற புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சக்கரங்கள் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருப்பது கூடுதல் கவர்ச்சியை தருகிறது.

அதேபோன்று, புகைபோக்கி குழல்களும் கருப்பு வண்ண மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி தருகிறது. புகாட்டி லோகோவும் கருப்பு வண்ண மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுளளது. பெட்ரோல் டேங்க் மூடியிலும் பிரான்ஸ் நாட்டு கொடியின் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த காரில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் பிரான்ஸ் நாட்டு தேசியக் கொடி வர்ணத்திலான ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டுள்ளன. விசேஷமான இருக்கைகள் கொாடுக்கப்பட்டுள்ளன.

கார்பன் ஃபைபர் பாகங்கள், அல்காண்ட்ரா லெதர் இருக்கைகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரில் இரண்டு தனித்தனி கண்ணாடி கூரைகள் அமைப்பும் இடம்பெற்றுள்ளது இதன் முக்கிய விஷேசமான அம்சம்.

புகாட்டி சிரோன் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த காரின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. இந்த காரில் இருக்கும் டபிள்யூ16 சிலிண்டர் அமைப்புடைய 8.0 லிட்டர் எஞ்சின் 1,479 பிஎச்பி பவரையும், 1,600 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் பவர் செலுத்தப்படுகிறது.

இந்த கார்0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 420 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் மாடல்களில் ஒன்றாக தொடர்ந்து பெயர் பெற்று விளங்குகிறது.

மொத்தமாக 20 புகாட்டி சிரோன் ans 110 எடிசன் கார்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருக்கின்றன. அனைத்து கார்களுக்கும் முன்பதிவு குறித்த வாடிக்கையாளர்கள் வினவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது, ஏற்கனவே முடிந்து போகும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 11, 2019, 11:26 [IST]
English summary
Bugatti Celebrates 110th Anniversary with Limited Edition Chiron Sport car.
மேலும்... #புகாட்டி #bugatti
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X