தவறு செய்த வாலிபரை நிறுத்த ஸ்பைடர் மேனாக மாறிய கேப் டிரைவர்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...
தவறு செய்த வாலிபரை நிறுத்துவதற்காக கேப் டிரைவர் ஒருவர் ஸ்பைடர் மேனாகவே மாறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சாலையில் வாகன ஓட்டிகள் சண்டையிட்டு கொள்வது என்பது இந்தியாவை பொறுத்தவரை வாடிக்கையான ஒரு நிகழ்வுதான். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளை போல், சாலையில் காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளை நீங்கள் கண் கூடாக பார்த்திருக்க முடியும்.

சில சமயங்களில் இந்த வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறி, விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று விடும். ஆங்கிலத்தில் இதனை Road Rage என்கின்றனர். சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறு ஏற்படுவது ஏன்? என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இடைவிடமால் ஹாரன் அடிப்பது, மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல் பயணிப்பது, அவசரமாக செல்லும்போது மற்ற வாகனங்களின் மீது மோதி விடுவது போன்ற காரணங்களால்தான், வாகன ஓட்டிகளுக்கு இடையே தேவையில்லாமல் பிரச்னை ஏற்படுகிறது.

இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் நகரில், இரு வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் வினோத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. காஸியாபாத்தில் உள்ள இந்திராபுரம் என்ற பகுதியில்தான் இந்த வினோதம் நடைபெற்றுள்ளது.

இந்திராபுரம் பகுதி வழியாக, ஹூண்டாய் ஐ20 காரில், வாலிபர் ஒருவர் நேற்று (மார்ச் 6) சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார், கேப் டிரைவர் ஒருவரின் கார் மீது மோதிவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட கேப் டிரைவர், நியாயம் கேட்க முயன்றுள்ளார்.

ஆனால் ஐ20 காரை ஓட்டி வந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கேப் டிரைவர், ஐ20 காருக்கு முன்பாக சென்று நின்று கொண்டார். இதன் காரணமாக ஐ20 காரில் வந்த வாலிபர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டார். எனவே அவர் திடீரென காரை இயக்கினார்.

அப்போது ஐ20 காரின் முன்னால் நின்று கொண்டிருந்த கேப் டிரைவர், அதன் பானெட் மீது விழுந்தார். வாலிபர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கியதால், கேப் டிரைவர் ஸ்பைடர் மேன் போல், பானெட்டை கெட்டியாக பிடித்து கொண்டார்.

கேப் டிரைவர் கதறி பார்த்தும் கூட அந்த வாலிபர் காரை நிறுத்தவே இல்லை. இச்சம்பவத்தால் சாலையில் பயணித்து கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் அதனை செல்போனில் வீடியோ எடுக்கவும் செய்தனர்.

இவ்வாறு சுமார் 2 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு அந்த வாலிபர் காரை அப்படியே ஓட்டி சென்றார். அவர் காரை நிறுத்தும் வரை, கேப் டிரைவர் உயிரை கையில் பிடித்து கொண்டு, பானெட்டின் மீது பசை போல் ஒட்டி கொண்டிருந்தார்.

தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில், இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
இதனிடையே ஐபிசி 307, 338 மற்றும் 427 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ஐ20 காரை ஓட்டி வந்த வாலிபரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டபடி சாலையில் இவ்வாறு வாகன ஓட்டிகளுக்கு இடையே பல்வேறு வழிகளில் தகராறு ஏற்படுகிறது.

சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுடன் தகராறு ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்? என்பது குறித்து இனி பார்க்கலாம். ஒரு இடத்திற்கு செல்லும்போது முன்கூட்டியே கிளம்புங்கள். அவசரம் காரணமாகதான் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்படுகிறது.

வாகனங்களை இயக்கும்போது பொறுமையாக இருங்கள். இனிமையான பாடல்களை கேட்பதன் மூலம் மனதை அமைதியாக வைத்து கொள்ளலாம். பொறுமை இல்லாத சமயத்திலும், மனது குழப்பமாக உள்ள சூழ்நிலையிலும் வாகனங்களை இயக்க வேண்டாம்.

ஒரு வகையில் மன அழுத்தம் கூட இவ்வகையான தகராறுகளுக்கு காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேவைப்படும் இடங்களில் சரியான அளவில் மட்டும் ஒலி எழுப்புங்கள். தேவையில்லாமல் தொடர்ச்சியாக ஒலி எழுப்பினால், மற்ற வாகன ஓட்டிகளின் கோபத்திற்கு நீங்கள் ஆளாகக்கூடும்.

வேறு வாகன ஓட்டி யாராவது உங்களிடம் சண்டைக்கு வந்தால், அவர்களுடன் ஐ கான்டாக்ட்டை தவிர்த்து விடுவது நல்லது. ஆத்திரத்தின் உச்சியில் உள்ள வாகன ஓட்டி யாராவது உங்களை பின் தொடர்ந்தால் வீட்டிற்கு செல்லாதீர்கள். நேராக அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விடுங்கள்.


Click it and Unblock the Notifications








