அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் என்னென்ன தந்திரங்களை செய்கின்றனர் என தெரியுமா? அந்த தில்லுமுல்லுகளை இந்த செய்தியில் அம்பலப்படுத்தியுள்ளோம்.

அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

புதிய கார் வாங்குவது என்பது, ஒருவர் தன் வாழ்க்கையில் எடுக்கும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்வதே இதற்கு காரணம். பொதுவாக எந்த காரை வாங்க போகிறோம்? என்பதை முடிவு செய்த பின், டீலர்ஷிப் பணியாளர்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்வது நல்லது.

அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

ஏனெனில் நீங்கள் காரை தேர்வு செய்த பின் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக அவர்கள் சில தந்திரங்களை செய்வார்கள். இதனை நீங்கள் கவனமாக கையாளாவிட்டால், காரின் உண்மையான விலையை விட அதிக தொகையை கொடுக்க வேண்டியதாக இருக்கும். எனவே கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக, கார் டீலர்கள் செய்யும் தந்திரங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

இந்தியாவில் உள்ள கார் டீலர்ஷிப்களில் அரங்கேற்றப்படும் அதிர வைக்கும் மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாப்பதுடன், கடினமான உழைப்பின் மூலம் நீங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை சேமிக்கவும் இந்த தகவல்கள் உதவும் என நம்புகிறோம்.

அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

கூடுதல் கட்டணங்கள்:

பெரும்பாலும் உற்பத்தியாளர்கள் எக்ஸ் ஷோரூம் விலையைதான் சொல்வார்கள். அதாவது ஷோரூமுக்கு உள்ளே எவ்வித வரிகளும் இல்லாமல் காரின் விலை. ஆனால் அந்த காரை சட்டப்பூர்வமாக பதிவு செய்து ஓட்டுவதற்கு பதிவு கட்டணங்கள் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்களை நீங்கள் செலுத்தியாக வேண்டும். அது ஓகேதான்.

அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

ஆனால் புதிய கார்களை வாங்கும்போது இன்னும் பல்வேறு வகையான கட்டணங்களை உங்கள் மீது டீலர்கள் திணிப்பார்கள். இதில், ஹேண்ட்லிங் சார்ஜ் என்பதும் ஒன்று. இது முழுக்க முழுக்க சட்ட விரோதமானது. உங்கள் மீது ஹேண்ட்லிங் சார்ஜ் திணிக்கப்பட்டால், நீங்கள் கண்டிப்புடன் அதற்கு 'நோ' சொல்ல வேண்டும். ஹேண்ட்லிங் சார்ஜ்களை பல்வேறு நீதிமன்றங்கள் சட்ட விரோதம் என கூறியுள்ளன.

அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

டெமோ கார்கள் உங்கள் தலையில் கட்டப்படலாம்:

அனைத்து டீலர்ஷிப்களிலும் டெமோ கார்கள் இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதற்காக அவை வைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கும் இந்த கார்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அல்லது புதிய மாடல் மார்க்கெட்டிற்கு வந்துவிட்டால், அவை அப்புறப்படுத்தப்பட்டு விடும்.

அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

அந்த சமயத்தில் ஒரு சில டீலர்கள் மிகப்பெரிய தள்ளுபடியை கொடுத்து அந்த காரை விற்பனை செய்து விடுவார்கள். ஆனால் வேறு சில டீலர்களோ, அந்த காருக்கு புதுப்பொழிவு கொடுத்து புதிய கார் என்ற போர்வையில் அதனை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டி விடுகின்றனர். டெமோவிற்கு நிறுத்தப்பட்ட கார்களின் ஸ்கிராட்களை மறைப்பதற்காக காரின் பாடிக்கு டீலர்கள் பெயிண்ட் செய்கின்றனர்.

அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

ஒருவேளை அவை டெஸ்ட் டிரைவிற்கு பயன்படுத்தப்பட்டிருந்தால், ஓடோமீட்டரில் தில்லுமுல்லு செய்து அது புதிய கார் என வாடிக்கையாளர்களை நம்ப வைத்து விடுகின்றனர். எனவே நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி காரை பார்வையிட்டால் மட்டுமே இந்த மோசடியில் இருந்து தப்ப முடியும். இல்லாவிட்டால் பழைய காரை உங்கள் தலையில் கட்டி விடுவார்கள்.

அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

டேஷ்போர்டு மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் ஸ்கிராட்ச்கள் இருக்கிறதா? என நீங்கள் சோதித்து பார்க்கலாம். அதே சமயம் இருக்கைகள் மற்றும் பெடல்களின் நுனிகளை உற்று நோக்கினால், ஏதேனும் சேதாரங்கள் உள்ளதா? என்பதை கண்டறிய முடியும். அது பழைய காரா? அல்லது புதிய காரா? என்பதை இதன் மூலம் நீங்கள் தீர்மானித்து கொள்ளலாம்.

அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

கட்டாய ஆக்ஸஸரீஸ்கள்:

கார் டீலர்ஷிப்கள் கையாளும் முக்கியமான தந்திரங்களில் ஒன்று கட்டாய ஆக்ஸஸரீஸ்கள். அதாவது இந்த கட்டாய ஆக்ஸஸரீஸ்கள் இல்லாமல் கார்களை டெலிவரி செய்ய முடியாது என டீலர்ஷிப் பணியாளர்கள் கூறுவார்கள். ஆனால் டீலர்களிடம் இருந்துதான் ஆக்ஸஸரீஸ்களை வாங்க வேண்டும் என்ற எந்த விதிமுறையும் இல்லை.

அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

ஆக்ஸஸரீஸ்கள் கொஞ்சம் விலை உயர்ந்த தயாரிப்புகள். அதனை பல்வேறு வழிகளில் உங்கள் தலையில் கட்ட டீலர்கள் முயல்வார்கள். இதுபோன்ற ஆக்ஸஸரீஸ்களை வாங்குவதை தவிர்த்து விடுங்கள். குறிப்பாக புதிய கார் வாங்கும்போது இதனை கட்டாயம் செய்யாதீர்கள். அதற்காக ஆக்ஸஸரீஸ்களை வாங்கவே வேண்டாம் என சொல்லவில்லை.

அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

முதலில் ஆக்ஸஸரீஸ்களை புரிந்து கொள்ளுங்கள். அது நமக்கு பலன் அளிக்கும் என உங்களுக்கு தோன்றினால் மட்டும் அவற்றை வாங்குங்கள். இல்லாவிட்டால் டீலர்களின் தந்திரத்திற்கு இரையாகி உங்கள் பணம் வீணாக கரைய கூடிய அபாயம் உள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Car Dealership Frauds. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X