ஆட்டோமொபைல் துறைக்கு கஷ்டகாலம்... ரூ.35,000 கோடி மதிப்புடைய புதிய கார்கள் தேக்கம்!

கடந்த சில மாதங்களாகவே, கார் விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. கார் மார்க்கெட் இதுவரை இல்லாத மந்தநிலையை சந்தித்து வருகிறது. கார் விற்பனையை அதிகரிப்பதற்காக தள்ளுபடி மற்றும் சிறப்பு திட்டங்களை அறிவித்தும் கூட சுணக்க நிலை நீடிக்கிறது.

ஆட்டோமொபைல் துறைக்கு கஷ்டகாலம்... ரூ.35,000 கோடி மதிப்புடைய புதிய கார்கள் தேக்கம்!

வேலைவாய்ப்பின்மை, ஜிஎஸ்டி வரியால் சிறு, குறு தொழில்கள் முடங்கியது, எரிபொருள் விலை ஏற்றம் போன்ற பல காரணங்களால் கார் விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பின்னர் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இதுவரையிலான மந்த நிலையால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையான பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளன.

ஆட்டோமொபைல் துறைக்கு கஷ்டகாலம்... ரூ.35,000 கோடி மதிப்புடைய புதிய கார்கள் தேக்கம்!

கடந்த ஜனவரி மாதம் முதலே கார் விற்பனையில் தள்ளாட்டம் காணப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸகியின் விற்பனை தொடர்ந்து சரிவு முகத்திலேயே உள்ளது. மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனையும் கணிசமாக குறைந்துள்ளது.

ஆட்டோமொபைல் துறைக்கு கஷ்டகாலம்... ரூ.35,000 கோடி மதிப்புடைய புதிய கார்கள் தேக்கம்!

டீலர்களில் இருப்பு அதிகரித்து வருவதையடுத்து, மாருதி, மஹிந்திரா,டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் கார் உற்பத்தியை குறைத்து வருகின்றன. எக்கனாமிக் டைம்ஸ் இதழ் செய்தியின்படி, ரூ.35,000 கோடி மதிப்புடைய கார்கள் டீலர்களில் தேக்கமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆட்டோமொபைல் துறைக்கு கஷ்டகாலம்... ரூ.35,000 கோடி மதிப்புடைய புதிய கார்கள் தேக்கம்!

டீலர்களி்ல கார்கள் கணிசமாக தேக்கமடைந்துள்ளதால், மே மற்றும் ஜூன் மாதங்களில் உற்பத்தியை 20 சதவீதம் வரை முன்னணி கார் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதன்மூலமாக, கார்கள் தேக்கமடைவதை தவிர்க்க முடியும் வாய்ப்பாக இருக்கிறது.

ஆட்டோமொபைல் துறைக்கு கஷ்டகாலம்... ரூ.35,000 கோடி மதிப்புடைய புதிய கார்கள் தேக்கம்!

ஸ்டாக்யார்டில் கார்களை வைத்திருந்தாலும், டீலர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்பதால், இதனை தவிர்ப்பதற்காக கார் உற்பத்தியை குறைத்துக் கொள்ளும் யுக்தியை கார் நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன. மேலும், டீலர்களும் கார் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதால் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறைக்கு கஷ்டகாலம்... ரூ.35,000 கோடி மதிப்புடைய புதிய கார்கள் தேக்கம்!

மாருதி சுஸுகி, மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் பல நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. ஹோண்டா, ரெனோ - நிஸான், ஸ்கோடா ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் குறைந்தது 10 நாட்களுக்கு தங்களது கார் ஆலைகளை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளன.

ஆட்டோமொபைல் துறைக்கு கஷ்டகாலம்... ரூ.35,000 கோடி மதிப்புடைய புதிய கார்கள் தேக்கம்!

கார் உற்பத்தி குறைந்து வருவது தயாரிப்பு நிறுவனங்களுக்கும், டீலர்களுக்கும் பெரும் கவலையை அளித்துள்ளன. மேலும், பிஎஸ்-6 மற்றும் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்றவாறு கார்களை மேம்படுத்துவதற்கும் அதிக முதலீடுகளை மறுபுறத்தில் செய்து வருகின்றன.

ஆட்டோமொபைல் துறைக்கு கஷ்டகாலம்... ரூ.35,000 கோடி மதிப்புடைய புதிய கார்கள் தேக்கம்!

இந்த நிலையில், கார் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்து வருவது கார் நிறுவனங்களை கவலையடையச் செய்துள்ளது. வரும் பண்டிகை காலத்தில் கார் விற்பனை மீண்டும் ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கையுடன் கார் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 11, 2019, 14:02 [IST]
English summary
Automotive companies in the country are facing a severe lack of demand for passenger vehicles. The low demand and sales of passenger vehicles in the country, has led to thousands of products left unsold in company inventory.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+