உச்சபட்ச அபராதத்திற்கு எதிராக தொடர் புகார்: மத்திய அமைச்சகம் எடுத்த அதிரடி முடிவு!

ஆய்வு மேற்கொள்ளாமல் அபராதத்திற்கான செல்லாணை வழங்க வேண்டாம் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம், அனைத்து மாநிலம் மற்றும் காவல்துறைக்கும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது.

தொடர்ந்து, இச்சட்டம் நாடு முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

அந்தவகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட மாற்றத்திலேயே மிக முக்கியமானதாக, பன் மடங்கு உயர்த்தப்பட்ட அபராதங்கள் இருக்கின்றன. இவை, முன்பெப்போதும் இல்லாத அளவில் அபராதத்தை பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஆகையால், முன்னாக ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 100 என்ற அபராதம், தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, அனைத்து போக்குவரத்து விதமீறல்களுக்கும் பத்து மடங்கு அபராதம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

மத்திய அரசு இந்தளவில் கடுமையாக போக்குவரத்து சட்டத்தை மாற்றியமைக்க, அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் விபத்துகளும், விதிமீறல் சம்பவங்களுமே முக்கிய காரணமாக இருக்கின்றன. அதேசமயம், விபத்துகளின் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பதே போக்குவரத்து விதிமீறல்கள்தான். எனவே, இதனை முற்றிலும் ஒழித்துகட்டும் விதமாக மத்திய அரசு புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் மிகப்பெரிய களோபரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், புதிய விதிகள்மூலம் விதிக்கப்படும் அபராதத் தொகை, வாகனங்களின் விலையைக் காட்டிலும் பல அதிகமானதாக இருக்கின்றது.

அவ்வாறு, அபராதத்தை விதிக்கும்போது போக்குவரத்து போலீஸார் சிலர் வாகன ஓட்டிகளிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இதுகுறித்து மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. ஆகையால், அனைத்து மாநில அரசு மற்றும் காவல்துறைகளுக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஓர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வாகன ஓட்டிகளின் அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பதற்கு முன்பாக இ-செல்லாணை வழங்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

மேலும், எம்-பாரிவாஹன் மற்றும் டிஜிலாக்கர் மூலம் காண்பிக்கப்படும் ஆவணங்களை வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் ஏற்றுக்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாகனம் மற்றும் உரிமம் சார்ந்த ஆவணங்களை மறந்துவிட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு தளர்வு அளிக்கும் வகையில் தகவலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், "வாகனத்திற்கு உரிய நகல் ஆவணங்களை குடிமகன்களால் குறிப்பிட்ட நேரத்தில் காண்பிக்க முடியாதபட்சத்தில், அதனை டிஜிட்டல் முறையில் (டிஜிலாக்கர், எம்-பாரிவாஹன்) காண்பித்தால் காவலர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

மேலும், "ஒரு வேலை அவர்களால் செல்போனிலும் ஆவணத்தை காட்ட முடியவில்லை என்றால், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புத்தகம் குறித்த தகவலை எம்-பாரிவாஹன் அல்லது இ-செல்லாண் ஆப் மூலம் காவலர்கள் அனைத்து தகவல்களையும் அறிந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இந்த சுற்றறிக்கையை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம், நாட்டின் அனைத்து மாநிலம் மற்றும் காவல்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார், டிஜிட்டல் முறையிலம் காண்பிக்கப்படும் ஆவணங்களை ஏற்றுக்கொள்வதில்லை, நகல் காண்பிக்கப்படாத காரணத்தால் அபராதங்களை வழங்கி வருகின்றனர் என தொடர்ச்சியாக எழும்பிய புகாரின் அடிப்படையில், இந்த அதிரடி சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

மேலும், இந்த புகார்களைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு சான்றையும் எலெக்ட்ரானிக் முறையில் தயாரிக்க மாநில போக்குவரத்துத்துறைகளுக்கு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு, எலெக்ட்ரானிக் முறையில் தயாரிக்கப்படும் ஆவணங்கள் அனைத்தும் எம்-பாரிவாஹன் மற்றும் இ-செல்லாண்களில் காண்பிக்கப்படுவதற்கும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்திதல் இருந்து போக்குவரத்து போலீஸார் சிறிதளவும் கருணையின்றி விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். வானக ஓட்டிகளின் முறையான காரணம் மற்றும் விளக்கத்தைக் கூட கேட்டறிந்துகொள்ளாமல் அதிரடியாக செல்லாணைப் போட்டு கையில் கொடுத்து விடுகின்றனர். இதனால், சில சமயம் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம், மோதல் ஆகியவை ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

தொடர் புகார்: மாநில அரசுகள், காவல்துறைகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இதனைத் தவிர்க்கும் விதமாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாகவும், உச்சநீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இதுபோன்ற ஓர் உத்தரவை வெளியிட்டிருந்தது. அதில், போக்குவரத்துத்துறை அமைச்சகம் பியூசி சான்றை மத்திய அரசின் வாகன் தரவு தளத்தில் இணைக்குமாறு கூறியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2019, 11:48 [IST]
English summary
Centre Said Don't Issue Challan Without Verify Vehicle Details By App. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+