புத்தம் புதிய டாடா ஹாரியர் மாடல் காரின் ஸ்கேல் மாடலை பரிசாக வெல்ல ஓர் அரிய வாய்ப்பு!

டாடா நிறுவனம் அதன் ஹாரியர் காரின் ஸ்கேல் மாடலை பரிசாக வெல்ல ஓர் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவை இந்த பதிவில் காணலாம்.

புத்தம் புதிய டாடா ஹாரியர் மாடல் காரின் ஸ்கேல் மாடலை பரிசாக வெல்ல ஓர் அரிய வாய்ப்பு!

கார் உலகின் ஜாம்பவானான டாடா நிறுவனம், இந்திய வாகன சந்தையில் ஹாரியர் என்ற புதிய மாடல் காரை கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்கான புக்கிங் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதி வரை நடைபெற்றநிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேசமயம், டாடா நிறுவனத்தின் இந்த புதிய காருக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு நிலவி வருகிறது.

புத்தம் புதிய டாடா ஹாரியர் மாடல் காரின் ஸ்கேல் மாடலை பரிசாக வெல்ல ஓர் அரிய வாய்ப்பு!

ஆகையால், வாடிக்கையாளர்களை சிறப்பிக்கும் விதமாக, டாடா நிறுவனம், ஹாரியர் காரின் ஸ்கேல் மாடலை, முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபராக வழங்கியது. தற்போது, இதே ஆஃபரை மீண்டும் வழங்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சலுகையைப் போட்டியின் மூலமாக வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புத்தம் புதிய டாடா ஹாரியர் மாடல் காரின் ஸ்கேல் மாடலை பரிசாக வெல்ல ஓர் அரிய வாய்ப்பு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் மாடலை, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் அஃபீசியில் பார்ட்னராக அறிவித்துள்ளது. அதற்கேற்ப, தினந்தோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் கிரிக்கெட் மைதானத்தில், அந்த காரை காட்சிபடுத்தி வருகிறது. இத்துடன், போட்டிகளின் இடைவெளியில் ஹாரியர் கார் குறித்த விளம்பரங்களையே அதிகம் பரப்பி வருகின்றது.

புத்தம் புதிய டாடா ஹாரியர் மாடல் காரின் ஸ்கேல் மாடலை பரிசாக வெல்ல ஓர் அரிய வாய்ப்பு!

இந்நிலையில், தற்போது டாடா வழங்க இருக்கும் ஸ்கேல் மாடல் ஆஃபரையும் கிரிக்கெட்டை மையமாக வைத்து தான் வழங்க இருக்கின்றது. டாடா நிறுவனம், ஏற்கனவே ஐபிஎல் போட்டி வீரர்களுக்கு ஓர் போட்டியை தொடங்கி வைத்துள்ளது. அவ்வாறு, போட்டியில் சிறப்பாக விளையாடி பெஸ்ட் ஸ்டிரைக்கர் என்ற பட்டத்தை வெல்பவருக்கு ஹாரியர் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

புத்தம் புதிய டாடா ஹாரியர் மாடல் காரின் ஸ்கேல் மாடலை பரிசாக வெல்ல ஓர் அரிய வாய்ப்பு!

இந்த பரிசை வெல்லப்போவது யார் என்றும், அவருக்கு எதற்காக அந்த பட்டம் வழங்கப்படும் என்று சரியான காரணத்தை கூறுபவர்களுக்கே, டாடா ஹாரியரின் ஸ்கேல் மாடல் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதற்கான பதிலை கிரிக்கெட் ரசிகர்கள் அவர்களது பேஸ்புக், டுவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் சமூகவலைதள பக்கத்தில் #AboveAll, #HarrierT20, #HarrierSuperStriker ஆகிய ஹேஸ்டேக்குகளுடன் பதிவிட வேண்டும்.

புத்தம் புதிய டாடா ஹாரியர் மாடல் காரின் ஸ்கேல் மாடலை பரிசாக வெல்ல ஓர் அரிய வாய்ப்பு!

இத்துடன் அவர்களது நகரத்தையும் ஹேஸ்டேகாக பயன்படுத்தி பதிவிட வேண்டும். உதாரணமாக #Chennai, #Delhi இதுபோன்று பயன்படுத்த வேண்டும். இதற்கான நாள் இன்றுடன் முடிவடைகிறது. ஆகையால், இன்றைய போட்டி நிறைவடைவதற்குள் இதற்கான பதிலை ரசிகர்கள் அவர்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட வேண்டும்.

புத்தம் புதிய டாடா ஹாரியர் மாடல் காரின் ஸ்கேல் மாடலை பரிசாக வெல்ல ஓர் அரிய வாய்ப்பு!

அவ்வாறு சரியான பதிலைச் சொல்லும் வாடிக்கையாளர்களுக்கு ஹாரியரின் ஸ்கேல் மாடல் பரிசாக வழங்கப்படும். அதில், தற்போதைய பெஸ்ட் டிரைக்காரக இருக்கும் அன்ட்ரே ரஷ்ஷல்-ன் ஆட்டோகிராஃப் போடப்பட்டிருக்கும்.

புத்தம் புதிய டாடா ஹாரியர் மாடல் காரின் ஸ்கேல் மாடலை பரிசாக வெல்ல ஓர் அரிய வாய்ப்பு!

டாடா நிறுவனத்தின் இந்த புதிய மாடல் ஹாரியர் எஸ்யூவி-யில், ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 138பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இல்லை.

இத்துடன், இந்த காரில் ஒரே புஷ்ஷில் வாகனத்தை ஸ்டார்ட்-ஸ்டாப் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த எஸ்யூவி ரக டாடா ஹாரியர் கார் ரூ.16 லட்சம் முதல் ரூ. 21 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 1, 2019, 11:43 [IST]
English summary
Here Is Your Chance To Win The TATA Harrier Scale Model. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+