ரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்!

சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கார் வர்த்தகத்தை விரைவில் துவங்க இருக்கிறது. இதற்காக, முறைப்படி பதிவு செய்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்!

சீனாவை சேர்ந்த கார் நிறுவனங்கள் இந்திய சந்தையில் களமிறங்க ஆர்வம் காட்டி வருகின்றன. அண்மையில் எம்ஜி மோட்டார் பிராண்டுடன் சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் இந்தியாவில் வர்த்தகத்தை சிறப்புற துவங்கி இருக்கிறது.

ரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்!

இதையடுத்து, அந்நாட்டின் மற்றொரு மிகப்பெரிய வாகன குழுமமாக விளங்கும் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் தற்போது இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. ஆம். தனது கீழ் செயல்படும் ஹவல் கார் பிராண்டை இந்தியாவில் களமிறக்க கிரேட்வால் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்!

கடந்த மாதமே ஹவல் பிராண்டு இந்தியாவில் முறைப்படி பதிவு செய்யப்பட்டு இருப்பதும் இப்போது தெரிய வந்துள்ளது. ஹவல் நிறுவனத்தின் அலுவலகம் குர்கிராமில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், இந்தியாவில் குறைவான வரியை செலுத்தும் வகையில், புதிய நிறுவனமாக பதிவு செய்வது குறித்தும் பரிசீலித்து வருகிறதாம்.

ரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்!

மேலும், இதுதொடர்பாக ஆலோசனை செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடமும் நேரம் ஒதுக்குவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமருடனான இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இந்தியாவில் கால் பதிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க கிரேட்வால் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

ரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்!

மேலும், தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆலை அமைப்பதற்கான இடம் குறித்த ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளது. தற்போது மஹாராஷ்டிரா அல்லது குஜராத்தில் அமைப்பதற்கு அந்நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

ரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்!

இதனிடையே, வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் ஹவல் பிராண்டில் புதிய எஸ்யூவி மாடலை காட்சிப்படுத்துவதற்கு கிரேட்வால் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவியை 2021 ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளது.

ரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்!

இதற்காக, குஜராத்தில் உள்ள செயிக் குழுமத்தின் ஆலையில் சிறிது காலம் ஹவல் கார்களை உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் இருந்து இந்த ஆலையில் ஹவல் எஸ்யூவி மாடல் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிகிறது. இங்குதான் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி உற்பத்தி செய்யப்படுகிறது.

ரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்!

புதிய ஆலையை அமைத்தப் பின்னர் உற்பத்தியை மாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் புதிய கார் ஆலையை அமைப்பதற்காக ரூ.7,000 கோடியை முதலீடு செய்வதற்கும் கிரேட்வால் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்தியாவுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, November 11, 2019, 15:49 [IST]
English summary
Chinese auto manufacturer, Great Wall Motors, has just registered its Indian subsidiary, Haval Motor India, and is planning to dedicate up to Rs 7,000 crore in order to make a presence felt, and dominate the Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+