இந்தியாவில் கார்களை களமிறக்கும் சீனாவின் ஹெய்மா நிறுவனம்!

சீனாவை சேர்ந்த கார் நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்கத் துவங்கி இருக்கின்றன. இந்த வரிசையில் ஹெய்மா கார் நிறுவனமும் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவது உறுதியாகி இருக்கிறது.

இந்தியாவில் கார்களை களமிறக்கும் சீனாவின் ஹெய்மா நிறுவனம்!

சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் எம்ஜி பிராண்டு மூலமாக இந்தியாவில் வலுவான துவக்கத்தை பெற்றுவிட்டது. இதனை கண்வைத்துவிட்ட சீனாவின் பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான கிரேட் வால் மோட்டார்ஸும் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்திய சந்தையில் கால் பதிக்க உள்ளது. இந்த நிலையில், ஹெய்மா கார் நிறுவனமும் இந்தியாவில் களமிறங்க உள்ளது உறுதியாகி இருக்கிறது.

இந்தியாவில் கார்களை களமிறக்கும் சீனாவின் ஹெய்மா நிறுவனம்!

கடந்த மாத இறுதியில் ஹெய்மா நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க இருப்பது குறித்த தகவல் வெளியானது. தற்போது இந்த தகவல் உறுதியாகி இருக்கிறது. அதாவது, இந்தியாவில் களமிறங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் மற்றும் முன்திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக ஹெய்மா நிறுவனத்தின் செயதித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கார்களை களமிறக்கும் சீனாவின் ஹெய்மா நிறுவனம்!

மேலும், இந்தியாவில் பேர்டு நிறுவனத்தின் கூட்டணியுடன் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக பேர்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. செக்வே போக்குவரத்து சாதனங்களையும் இந்தியாவில் பேர்டு குழுமம் விற்பனை செய்கிறது.

இந்தியாவில் கார்களை களமிறக்கும் சீனாவின் ஹெய்மா நிறுவனம்!

எனவே, பேர்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவது சரியானதாக ஹெய்மா கருதுகிறது. விரைவில் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் ஹெய்மா தயாரிப்புகள் இந்தியர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவில் கார்களை களமிறக்கும் சீனாவின் ஹெய்மா நிறுவனம்!

மேலும், ஹெய்மா நிறுவனத்தின் வசம் பல எலெக்ட்ரிக் கார் மாடல்கள் உள்ளன. எனவே, ஹெய்மா நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையை குறிவைத்து வர்த்தகத்தை வலுவாக்கும் திட்டத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.

இந்தியாவில் கார்களை களமிறக்கும் சீனாவின் ஹெய்மா நிறுவனம்!

சீனாவில் மஸ்தா கார் நிறுவனத்தின் தயாரிப்புகளை ரீபேட்ஜ் முறையில் ஹெய்மா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. முதலாவதாக ஹெய்மா 8எஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கார்களை களமிறக்கும் சீனாவின் ஹெய்மா நிறுவனம்!

புதிய ஹெய்மா 8எஸ் காரில் 193 பிஎச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 7 எக்ஸ் எம்பிவி கார் மாடலையும் இந்தியா கொண்டு வரும் திட்டம் ஹெய்மாவிடம் உள்ளது. இது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு நிகரான ரகத்தில் நிலைநிறுத்தப்படலாம்.

Source: ACI

More from DriveSpark

Article Published On: Wednesday, December 25, 2019, 15:22 [IST]
English summary
Chinese automobile maker, Haima has confirmed India debut at 2020 Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+