கிறிஸ்துமஸ் சம்பிரதாயம்... பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசு... பிடித்ததை எடுத்து கொள்ளலாம்

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய ஆடி சொகுசு கார்கள் கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆடியின் கிறிஸ்துமஸ் பரிசு... விரும்பிய காரை எடுத்து கொள்ளலாம்... அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உலகம் வேகமாக தயாராகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சரியாக ஒரு வார காலம் இருக்கிறது. ஆனால் ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் முன்னதாகவே வந்து விட்டது!! ஆம், அவர்கள் தற்போது கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டுள்ளனர்.

ஆடியின் கிறிஸ்துமஸ் பரிசு... விரும்பிய காரை எடுத்து கொள்ளலாம்... அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?

ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் ஃபுட்பால் கிளப் பற்றி யாருக்கும் நிச்சயமாக அறிமுகமே தேவைப்படாது. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட ரியல் மாட்ரிட் அணிக்காக, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்களும் விளையாடி கொண்டுள்ளனர். எனவே உலகம் முழுக்க ரசிகர்களை கொண்ட அணியாக ரியல் மாட்ரிட் உள்ளது.

ஆடியின் கிறிஸ்துமஸ் பரிசு... விரும்பிய காரை எடுத்து கொள்ளலாம்... அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?

ரியல் மாட்ரிட் அணி வீரர்களுக்கு ஆடி நிறுவனம் தற்போது கார்களை பரிசாக வழங்கியுள்ளது. ரியல் மாட்ரிட் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஆடி நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சம்பிரதாயம் இது என்பது சுவாரஸ்யமான விஷயம். ரியல் மாட்ரிட் வீரர்கள் தங்களுக்கு விருப்பமான மாடலை விரும்பிய நிறத்தில் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆடியின் கிறிஸ்துமஸ் பரிசு... விரும்பிய காரை எடுத்து கொள்ளலாம்... அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?

ஆடி நிறுவனம் கிறிஸ்துமஸ் பரிசாக அவர்களுக்கு அந்த காரை வழங்கும். ரியல் மாட்ரிட் பயிற்சியாளரான ஜினடின் ஜிடேன் இருப்பதிலேயே மிகவும் விலை குறைவான மாடலை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனும், ஸ்பெயின் தேசிய அணியின் டிபெண்டருமான செர்ஜியோ ராமோஸ் விலை உயர்வான மாடலை தேர்வு செய்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆடியின் கிறிஸ்துமஸ் பரிசு... விரும்பிய காரை எடுத்து கொள்ளலாம்... அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?

அவர் ஆடி ஏ8 50 டிடிஐ குவாட்ரோ டிப்ட்ரோனிக் (Audi A8 50 TDI Quattro Tiptronic) காரை தேர்ந்து எடுத்துள்ளார். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 81 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. ஸ்பெயினை சேர்ந்த செய்திதாளான ஏஇஸட் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. ரியல் மாட்ரிட்டின் மற்ற சூப்பர்ஸ்டார்கள் தேர்வு செய்ய கார்கள் குறித்து இனி பார்க்கலாம்.

MOST READ: பாஸ்ட்டேக் பயன்படுத்தினால் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா? அப்போ உடனே வாங்கிட வேண்டியதுதான்

ஆடியின் கிறிஸ்துமஸ் பரிசு... விரும்பிய காரை எடுத்து கொள்ளலாம்... அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?

ஜெர்மனியை சேர்ந்த மிட்-பீல்டரான டோனி க்ரூஸ், ஆடி க்யூ8 50 டிடிஐ குவாட்ரோ டிப்ட்ரோனிக் (Audi Q8 50 TDI Quattro Tiptronic) காரை தேர்வு செய்துள்ளார். இந்திய மதிப்பில் இந்த காரின் விலை சுமார் 69 லட்ச ரூபாய். அதே சமயம் இங்கிலீஷ் கிளப்பான செல்சாவில் இருந்து ரியல் மாட்ரிட் அணியில் சமீபத்தில் இணைந்தவரான ஈடன் ஹசார்டும் டோனி க்ரூஸ் தேர்வு செய்த காரைதான் வாங்கியுள்ளார்.

MOST READ: தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... எஸ்ஐ-க்கு போலீஸ் சுப்பிரண்டு வச்ச ஆப்பு... என்ன தெரியுமா...?

ஆடியின் கிறிஸ்துமஸ் பரிசு... விரும்பிய காரை எடுத்து கொள்ளலாம்... அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?

உண்மையில் கால்பந்து வீரர்கள் மத்தியில், ஆடி க்யூ8 50 டிடிஐ குவாட்ரோ டிப்ட்ரோனிக் மிகவும் புகழ்பெற்ற மாடலாக இருப்பது போல்தான் தெரிகிறது. ஏனெனில் ஜேம்ஸ் ரோட்ரிக்சும் அதே காரைதான் தேர்ந்து எடுத்துள்ளார். அதே நேரத்தில் பிரான்ஸ் டிபெண்டரான ரபேல் வர்னே, சிகப்பு நிற ஆடி இ-ட்ரான் 55 குவாட்ரோ (Audi e-tron 55 Quattro) காரை தேர்ந்து எடுத்துள்ளார்.

MOST READ: போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

ஆடியின் கிறிஸ்துமஸ் பரிசு... விரும்பிய காரை எடுத்து கொள்ளலாம்... அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?

இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக 67 லட்ச ரூபாய். அதே சமயத்தில் பிரேசிலை சேர்ந்த வினீசியஸ் ஜூனியர், ஆடி ஏ7 ஸ்போர்ட்பேக் 50 டிடிஐ குவாட்ரோ டிப்ட்ரோனிக் (Audi A7 Sportback 50 TDI Quattro Tiptronic) காரை தேர்வு செய்துள்ளார். இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக 63 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் விலை உயர்ந்த லக்ஸரி கார்களை ஆடி பரிசாக வழங்கியுள்ளதால், ரியல் மாட்ரிட் வீரர்கள் தற்போது உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். கால்பந்து விளையாட்டின் மூலமாக அதிகப்படியான வருமானம் கிடைத்து வரும் சூழலில், இப்படி ஒரு கிறிஸ்துமஸ் பரிசு கிடைக்க உண்மையில் அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Christmas Gift: Real Madrid Football Players Get Audi Luxury Cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X